விசுவாசமுள்ளவர்களாய்
விசுவாசமுள்ளவர்களாய்...
அவரை ஏற்றுக்கொண்டவர்கள்.(யோவா 1:12)
இந்த வசனம், எப்படி இரட்சிப்புக்கேதுவான விசுவாசம், ஒரு தனிப்பட்ட சம்பவத்தில் நடக்கும் கிரியையும், ஒரு வாழ்வு நாளில் சம்பவிக்கும் மேம்பட்ட மனப்பான்மையும் இருக்கிறது என்று தெளிவாக காண்பிக்கிறது.
1) தேவனுடைய பிள்ளையாக மாற வேண்டுமானால் ஒருவர் கிறிஸ்துவை. "ஏற்றுக்கொள்ள" (கிரே எலபான், லம்பேனாவிலிருந்து) வேண்டும். இங்குள்ள இறந்த காலம் ஒரு திட்டவட்டமான விசுவாசக் கிரியையைக் குறிக்கிறது.
2) விசுவாசக் கிரியை பின் தொடர்ந்து, தொடர்ச்சியாக விசுவாசித்துக் கொண்டிருக்கும் கிரியை நடக்க வேண்டும். "விசுவாசித்தல்" என்ற வினைச்சொல் (கிரே, பிஸ்டோசின், பிஸ்டோவிலிருந்து ) அதாவது விசுவாசத்தலில் விடாமுயற்சி தேவை என்பதைக் குறிக்கிறது நிகழ்கால வினையெச்சமாக உள்ளது. "விசுவாசித்துக் கொண்டிருத்தல்" ஒருவர் முடிவில் இரட்சிக்கப்பட வேண்டுமானால், கிரியைக்குப் பின்பு உண்மையான விசுவாசம் தொடர்ந்து செயல்பட வேண்டும். (மத்10:22;24:12-13; கொலே1:21-23;எபி 3:6,12-15)
@) தேவனுடைய பிள்ளைகள்
மனிதர், கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசமூலவர்களாய் இருந்தால் மாத்திரம், அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக சுவிகாரம் பெற, அதிகாரமுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டபோது அவர்கள் மறுபடியும் பிறந்து, தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள். (யோவா 3:1-21) எல்லா மனிதரும்" தேவனுடைய பிள்ளைகள்" இல்லை
@ விசுவாசமுள்ளவர்களாய்.
யோவான்,"விசுவாசம்" (கிரே,பிஸ்டிஸ்) என்ற பெயர்ச் சொல்லை ஒரு போதும் உபயோகிக்கவில்லை என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். ஆனால் "விசுவாசித்தல்"(பிஸ்டோ) இந்த வினைச்சொல்லை 98 முறைகள் உபயோகித்துள்ளான். யோவானைப் பொருத்தமட்டில் இரட்சிப்புக்கேதுவான விசுவாசம், மனிதர் செய்ய வேண்டிய ஒரு கிரியை. மெய் விசுவாசமானது, இயேசு கிறிஸ்துவிலும், அவருடைய மீட்பின் வேலையிலும் வைக்கும் ஒரு செயலற்ற விசுவாசமும்,நம்பிக்கையுமாக இல்லாமல் ஆண்டவரும், இரட்சகரமாகிய அவரிடம் சுய வெறுப்பான ஒரு அர்ப்பணிப்பாகும். அது எப்போதும் அவனை ஆண்டவரும் இரட்சகருமானவரிடம் கொண்டு சேர்க்கும். (எபி 7:25)
ஆகையால் தொடர்ச்சியாக தேவனை விசுவாசித்து அவருடைய பிள்ளையாகவே வாழ்ந்து அவருடைய ராஜ்யத்தை சுதந்தரிப்போம் கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
Comments