சோதனைக் காலம்

 சோதனைக் காலம்

(வெளி 3:10)


பிலதெல்பியாவிலுள்ள உண்மையுள்ளவர்களே சோதனையிலிருந்து விடுவிப்பேன் என்று கிறிஸ்து கூறுவது வரப்போகும் கோபாக்கினையிலிருந்து விசுவாசிகள் காக்கப்பட போவதாக தெசலோனிக்கேயருக்கு பவுல் கூறுவதற்கு இணையாக உள்ளது.

(1தெச 1:10) இது தேவனுக்கு உண்மையாக வாழும் அனைவருக்கும் பொருந்தும். (வெளி 13:22) இந்த காலம்'என்பது உலகில் கிறிஸ்துவின் ராஜ்ஜியம் நிறுவப்படும் முன் கடைசி காலத்தில் உலகம் அனைத்துக்கும் தேவனால் அனுமதிக்கப்படும் சோதனை, கோபாக்கினை, உபத்திரவம், இவற்றையும் குறிக்கும்,

(வெளி 5:10; 6-19; 20:4)

இந்தக் காலத்தைக் குறித்து வேதம் கீழ்க்கண்ட உண்மைகளைக் கூறுகின்றது.

1) இக்காலம் துன்மார்க்கர் மேல் வரும் கோபாக்கினையின் காலத்தையும் கூறுவது.

(அதி 6-19; ஏசா 13:6-13;17:4-11;

தானி 9:27; 12:1 சகரி 14:1-4; மத் 24:9-31; 1தெச 5:2;).

2) தேவ மக்களின் மேல் சாத்தான் வரும் சோதனைகளையும் இது குறிக்கும். அதாவது, இந்த உபத்திர காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள். ஏனெனில் அவர்களுக்கு பசி, தாகம், துன்பம் ஆகியவையும் (வெளி 7:16) மகா உபத்திரவமும், கண்ணீருமுண்டு(வெளி 7:9-17;தானி 12:10;மத் 24:14-21)

யுத்தம், பஞ்சம், சாவு போன்ற இயற்கை சீற்றங்களையும் அனுபவிப்பார்கள். அவர்கள் உபத்திரவப்படுத்தப்பட்டு, வேதனைப்படுத்தப்பட்டு, ரத்த சாட்சிகளாகச் சித்திரவதை செய்யப்படுவார்கள். 

(வெளி 6:11; 13:7; 14:13). அவர்கள் சாத்தான் பிசாசின் சேனை இவற்றால் துன்புறுத்தப்படுவார்கள்.

(வெளி 9:3-5; 12:12;) அந்தி கிறிஸ்துவாலும் துன்மார்க்ராலும் பாடுபடுவார்கள். (வெளி 6:9;

12:17; 13:15-17) அவர்கள் வீடுகளை இழந்து பயத்தினால் ஓடி ஒளிவார்கள். (மத் 24:15-21) குடும்பம், குழந்தைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் அழிவும் வேதனையுமுள்ள காலமாகும்.(மத் 24:19) உபத்திரவ காலத்தில் மரித்துவிடும் பரிசுத்தவான்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில், அவர்கள் உபத்திரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இளைப்பாறுவார்கள். (வெளி 14:13).

3) இந்த நாட்களில் வரும் முன்னே ஜெயம் பெறும் மக்களை (வெளி 2:7;லூக் 12:36) இந்த சோதனை காலத்திலிருந்து எடுக்கப்படுதலின் மூலம் தேவன் பாதுகாப்பார். 

(அதாவது தேவகோபாக்கினை வருமுன் மத்திய ஆகாயத்தில் உண்மைக் கிறிஸ்தவர்களை கிறிஸ்து தம்முடன் சேர்த்துக் கொள்வார்.)

(யோவா 14:3) இது தேவனுடைய வார்த்தையை மட்டும் காப்பவர்களுக்கு கிடைக்கும் பிரதிபலனாகிய விடுதலையாகும்.

4) கிறிஸ்துவுக்கும், அவருடைய வார்த்தைக்கு உண்மையாய் இருந்து காத்திருந்து ஜெபிப்பது மூலமே இக்கால விசுவாசிகள் இவ்வுலகில் உண்டாக போகும் உபத்திரவத்தில் இருந்து விடுவிக்க பட முடியும்.

(லூக் 21:36) இல்லாவிடில் அவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள். 

(மத் 24:5).

இந்த கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவனுடைய பிள்ளைகளே இன்றைக்கு நமக்கு விரோதமாக எழும்பி வந்து கொண்டிருக்கும் கடைசி கால ஆபத்துகள் பற்றி சபை உணர்வடையாமல் ஆடல் ,பாடல் , கவர்ச்சி, விருந்து என கொண்டாடி வருகிறது. 

நாம் மகிழ்ச்சியாக இருப்பது நல்லது தான் 

அந்த மகிழ்ச்சி தேவனுக்குள்ளாக இருக்க வேண்டும். 

நாம் சந்தோஷமாக இருக்க வேண்டியது சந்தோசமான விஷயம் தான். ஆனால் அந்த சந்தோசம் கர்த்தருக்குள்ளாக இருக்க வேண்டும். 

கர்த்தர் தந்த இரட்சிப்பின் மீதாக இருக்க வேண்டும்.

கூட்டத்தை சேர்ப்பதற்காக அநேகர் தங்கள் ஊழியங்களை தேவ சித்தத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளாமல் மக்களுக்கு பிரியமாக மாற்றிக் கொண்டார்கள் அதில் சிக்கி வஞ்சிக்கப்பட்டு தேவன் உங்களுக்காக ஆயத்தப்படுத்திய நித்திய இராஜ்யத்தை, அழிவில்லாத இராஜ்ஜியத்தை இழந்து விடாதீர்கள். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா 

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை