குற்றவாளிகளாக
மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்க்கதிருங்கள்.
(மத் 7:1)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்வது, ஒருவர் தன்னுடைய சொந்தக் குறைகளையும், குற்றங்களையும், நினையாமல், மற்றவர்களைப் பார்த்து குற்றஞ்சாட்டும் மனப்பான்மையை இயேசு கிறிஸ்து கண்டிக்கிறார். விசுவாசிகள் மற்ற கிறிஸ்தவர்களைப் பரிசோதித்து அவர்களின் நடத்தையைச் சீர்படுத்த முயற்சிப்பதற்கு முன் தேவனுடைய நீதியான தகுதிகளுக்குத் தங்களை முதலாவதாக அர்ப்பணிக்க வேண்டும்.(மத் 7:3-5)
அநியாயமாகத் தீர்ப்புச் சொல்லுவதானது குற்றஞ் செய்தவன் அதற்காக மனம் வருந்தி தேவனிடத்துக்கும், அவருடைய வழிகளுக்கும் திரும்பி வரச் செய்யும் ஆசையில்லாமல் அவனைக் கண்டனம் பண்ணுவதாகும்.
(லூக்கா 6:36,37)
1)மற்றவர்களிடம் காணப்படும் பாவங்களை ஓரளவு பகுத்தறிந்து, மதிப்பீடு செய்து திருத்த முயற்சிப்பது தவறு என்று இயேசு கிறிஸ்து கூறவில்லை.
பரிசுத்த வேதாகமத்தில் இன்னொரு இடத்தில் திருச்சபைகளுக்குள்ளேயே உள்ள கள்ளப் போதகர்களைக் குறித்து, எச்சரிக்கையாகயிருக்கும் படியாகவும்,(மத் 7:15)
மனிதர்களின் குண நலன்களை நாம் மதிப்பீடு செய்து அறிந்து கொள்ளும்படியாகவும் இயேசு கிறிஸ்து கட்டளையிட்டு இருக்கிறார்.
(மத் 7:6;யோவா 7:24;1கொரி 5:12;கலா1:9;1தீமோ 4:1;1யோவா 4:1).(269 உயர்ந்த முத்துக்கள் பகுதியை இணைத்து வாசியுங்கள்)
2) இந்த வசனம் திருச்சபையின் ஒழுங்கு கட்டுப்பாட்டைக் கட்டிக் காப்பதில் ஒரு விதிவிலக்காகப் பயன்படுத்தக் கூடாது.
(மத் 18:15)
*உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால்.* (மத் 18:15)
தனிப்பட்ட முறையில் ஒரு கிறிஸ்தவன் திருச்சபையின் இன்னொரு கிறிஸ்தவனுக்கு எதிராகப் பாவம் செய்தால் அதைத் திருத்தி, சீர்படுத்துவது எப்படி என்பது பற்றி இயேசு கிறிஸ்து (மத் 18:15-17 வரை) உள்ள வசனங்களில் குறிப்பிடுகிறார்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் புறக்கணிப்பது ஆவிக்குரிய காரியங்களில் ஒத்துப் போவதைக் கொண்டுவந்து, முடிவில் தேவனுடைய பரிசுத்த ஜனம் அடங்கிய திருச்சபையின் இறுதியான அழிவுக்கு காரணமாகிவிடும்.
(1பேது 2:9:மத் 5:13)
1) திருச்சபையின் ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதன் நோக்கம் ஆண்டவரின் மகிமையையும், பெயரையும், புகழையும் கட்டிக் காப்பதாகும்.(மத் 6:9;ரோம 2:23,24)
திருச்சபையின் தூய்மையான ஒழுக்கத்தைக் காக்கவும், உபதேசத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், (1கொரி 5:6,7; 2யோவா 7-11)
சலன புத்தியுள்ள கிறிஸ்தவர்களை மீட்டு அவர்களை முழுமையாக கிறிஸ்துவைப் போலாக்கவும்
(1கொரி 5:5;யாக் 5:19,20) முயற்சி செய்ய வேண்டும்.
2) குற்றம் செய்கிறவன் தனியாக விசாரிக்கப்பட்டு அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவன் உபதேசத்தை ஏற்றுக் கொண்டால் அவன் மன்னிக்கப்படலாம். (மத் 18:15)
தாக்குதலைத் செய்தவன் தன் கிறிஸ்தவ சகோதரனின் சொல்லைக் கேளாமற் போனால் (மத் 18:15,16)
பின்னர் வேறு ஒன்றிரண்டு பேர் போதித்தோம் அதையும் அசட்டை செய்தால் (மத் 18:16)
இறுதியாக உள்ளூர்த் திருச்சபையின் கட்டுப்பாட்டையும் மீறினால், அவன் ஒரு புறஜாதியான் போல வைக்கப்பட்டு, நடத்தப்பட வேண்டும். அதாவது, தேவனுடைய இராஜ்ஜியத்தை சேராதவன், அவன் கிறிஸ்துவோடுள்ள தொடர்பைப் துண்டித்துக் கொண்டவன். கிருபையிலிருந்து வீழ்ச்சி அடைந்தவன் என்று கருதப்பட வேண்டும். (மத் 18:7;கலா 5:4)
அவனுக்குத் திருச்சபையின் உறுப்பினராயிருக்கத் தகுதியில்லை. அவன் திருச்சபையின் ஐக்கியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்.
3) எவ்விதமாகத் திருச்சபையைச் சுத்தப்படுத்துதல் பாவம், ஒழுக்க கேடு நடைபெறும் இடங்களில் மட்டும் இருந்தால் போதாது. கொள்கைப் புரட்டு, கள்ள உபதேசங்கள், புதிய ஏற்பாட்டு அடிப்படைக் கொள்கைகளில் உண்மையற்ற தன்மை போன்றவை காணப்படும் இடங்களிலும் செய்யப்பட வேண்டும். (கலா 1:9;யூதா 3)
4) திருச்சபையை ஒழுங்குபடுத்துதல், தாழ்மையுள்ள ஆவியுடனும், அன்புடனும், மனஸ்தாபத்துடனும், தற்பரி சோதனையுடனும் செய்யப்பட வேண்டும். (மத் 22:37;2கொரி 2:6,7;கலா 6:1)
5) திருச்சபையினுள் நடக்கும் பாவங்கள், ஒழுக்கக்கேடான பாலுறவுப் பிரச்சனைகள் போன்றவை கீழ்க்கண்ட வசனங்களின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும்.
(1கொரி 5:1-5; 2கொரி 2:6-11). இத்தகைய கொடிய பாவங்களுக்காக முழு திருச்சபையும் வருந்தி, மனஸ்தாபப்பட்டு, துக்கப்பட வேண்டும். (1கொரி 5:2)
மீறுதலைச் செய்தவனுக்கு
"போதுமான..... தண்டனை"
(2கொரி 2:6) கொடுக்கப்பட்டு அவன் சபையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
(1கொரி 5:2,13) பின்னால் அவன் உண்மையாக மனந் திரும்பினதாகத் தெரிந்தால் அவன் மன்னிக்கப்படலாம். அவனிடமிருந்து ஒரு உறுதிமொழியைப் பெற்றுக் கொண்ட பின் மீண்டும் திருச்சபை ஐக்கியத்தினுள் சேர்த்துக் கொள்ளப்படலாம்.
(2கொரி 2:6-8)
6) ஒரு மூப்பன் (அல்லது உடன் ஊழியன்) தவறு செய்தால் அதைத் தனியாக விசாரித்து பின்னர் அது வெளிப்படுத்தப்பட்டு ஒழுங்கு கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
"வெளிப்படையான கண்டனம் செய்யப்படுதல் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்"
(கலா 2:11-18;1தீமோ 5:19,20)
7) திருச்சபைத் தலைவர்களும், போதகர்களும் தங்கள் நிர்வாகத்துக்குட்பட்ட திருச்சபை மக்களின் நலனுக்காக, மேய்ப்பன் தன் மந்தையைக் கண்காணிப்பது போல, பாதுகாக்க வேண்டும் என்று உணர வேண்டும். தேவன் அவர்களிடம் இழந்து போன எல்லா மக்களுடைய ரத்தத்திற்காகவும் தனியாக கணக்கு கேட்பார்.
(அப் 20:26) ஏனென்றால், திருச்சபைத் தலைவர்கள், தேவனுடைய சித்தம், நோக்கத்தின்படி குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுத்துத் தண்டனையளித்து அல்லது சபையிலிருந்து விலக்கி சபையைப் பழைய நிலையைக்கும் கொண்டு வர வேண்டும்.
(எசே 3:20,21;அப் 20:26,27;எசே 3:18 ஐ தியானம் செய்யவும்)
உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments