இருக்கிறவராகவே இருக்கிறேன்
இருக்கிறவராக இருக்கிறேன்.(யாத் 3:14)
தேவனுடைய நாமத்தின் முக்கியத்துவம் *"இருக்கிறவராகவே இருக்கிறேன்".* என்பதாகும் தேவனுடைய சமூகம் மக்களிடத்தில் எப்போதும் இருக்கிறது என்று காட்டுகிறது.
தேவன் தமது நாமத்தை,
*"இருக்கிறவராக இருக்கிறேன்"* என்று மோசேக்குத் தெரிவித்தார்.
(இதிலிருந்து தான் எபிரேய மொழியில் 'யாவே 'என்னும் பெயர் உண்டாயிற்று).
மற்றும் அது செயலைக் குறிப்பிடும் ஒரு எபிரேயச் சொற்றொடர்.
மோசேயிடம் தேவன்,
* "எங்கும் பிரசன்னமாயிருந்து செயல்படும் தேவன் என்று நான் அறியப்பட விரும்புகிறேன் "என்றார்.*
1) 'யாவே ' என்னும் நாமத்தில் உள்ளடங்கியிருக்கும் வாக்குறுதி, உயிருள்ள தேவனின் பிரசன்னம் தமது மக்களோடு ஒவ்வொரு நாளும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
(யாத் 3:12,ஆதி 2:4 ல்)
தேவனுக்கு இன்னொரு பெயர் அறிமுகப்படுத்தப்படுகிறது.
*'கர்த்தர்'எபிரேய மொழியில்
'யாவே' அதே நேரத்தில் "ஏலோகீம்"என்பது தேவனுடைய பொதுப்பெயர் ஆகும்.*
அது தமது மக்களிடம் அவருக்குள்ள அன்பையும், அவர்கள் மீது அவருக்குள்ள அக்கறையையும், அவர்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என்னும் ஆவலையும், அவர்களோடு உறவாட வேண்டும் என்னும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
*"உங்கள் தேவனாயிருக்கும்படி "* என்று கூறப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படை வாக்குறுதியோடு இது தொடர்புள்ளது.
(ஆதி 17:7; சங் 46 )
என்றென்றும் அவருடைய நாமம் இதுவே என்று ஆண்டவர் கூறுகிறார்.
2) இயேசு கிறிஸ்து பிறந்த போது அவருக்கு
*"தேவன் நம்மோடிருக்கிறார்",*
என்னும் பொருள் கொள்ளும்
*'இம்மானுவேல்' என்று அழைக்கப்பட்டார்.*
(மத் 1:23) அவர் தாமே
*"நான் இருக்கிறேன்"என்ற பெயரால் தம்மை அழைத்தார்.*
(யோவா 8:58)
அவருடைய நாமத்தை அறிந்து அவரை துதிப்பது நல்லது.
*யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் அதில் எதைச் சொல்லி பாடுவது.*
என்ற பாடலை சற்று மாற்றி
யேகோவா தேவனுக்கு ஆயிரம் பண்புகள் அதில் எதை சொல்லி பாடுவது என்று பாடுவது நல்லது.
அல்லது இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தை உயர்த்தி பாடும் பொழுது ஜனங்களை தம்பக்கமாய் இழுத்துக் கொள்வேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார்.
அதே நேரத்தில் கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகையால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் உயர்த்துவோம். கர்த்தர் நம்
வாழ்வில் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments