கண்டிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.(மத் 7:1;)
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும்படி குற்றம் சாட்டினார்கள்.
(மத் 27:13)
பிரபல கிறிஸ்தவ பாடகர் ஜான் ஜெபராஜ் பாடிய பாடலில் ஒன்று.
கொற சொல்ல மாட்டேன்
அட குத்தம் சொல்ல மாட்டேன்
மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் BRO
நான் மட்டும் RIGHTU
மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை
ஊழியத்தை செய்யமாட்டேன் BRO
இந்தப் பாடலைப் பாடிய சகோதரன் ஜான் ஜெபராஜ் மிகப்பெரிய ஆவிக்குரிய வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம்
சிறு சிறு தவறுகளை அவர் செய்யும் பொழுது அவரை கூப்பிட்டு கண்டிக்காத போதகர்களையே சாரும். ஜான் ஜெபராஜ் அவர்களை மேடையில் விமர்சித்தவர்கள் அதிகம் ,தேவன் நிச்சயமாக மூத்த ஊழியர்களை நியாயம் விசாரிப்பார்.
அநேக போதகர்கள் தங்களுடைய யூடியூப் சேனல் பிரபலம் அடைவதற்கு ஜான் ஜெபராஜை பயன்படுத்திக் கொண்டார்கள்.
அப்படிப்பட்ட மூத்த ஊழியர்கள் இன்றைக்கு அவருடைய வீழ்ச்சியில் பங்கு கொள்வார்களா ?
அவருடைய வீழ்ச்சியிலும் youtube சேனலை பிரபலப்படுத்தும் கேவலமான ஊழியர்கள் பெருகி இருக்கிறார்களே ஒழிய புத்தி சொல்ல யாரும் இல்லை.
அநேக போதகர்கள் குறை சொல்லக்கூடாது என்று சொல்லும் போதே அவர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்கள்.
பொய்யாக ஒருவரை குற்றம் சாட்டக் கூடாது இது இயேசுவின் போதனை.
(லூக்கா 3:14)
இயேசு கிறிஸ்து சொன்னபடி உள்ளதை உள்ளபடி சொல்வது தான் சத்தியம்.
(மத் 5:37)
உள்ளதை உள்ளபடி பேசி கண்டிக்காவிட்டால் அவர்கள் பாவத்திற்கு துணை போகிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் எபேசு சபைக்கு சொல்லும் பொழுது
கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் *கடிந்துகொள்ளுங்கள்.*
(எபேசியர் 5:11-12)
சில நேரடியாக கடிந்து கொள்ள தயங்குகிறார்கள், அந்த தயக்கம்தான் அவர்களை பாவத்திலேயே வளர்ந்து மிகப்பெரிய மரமாக வளர்ந்து விடுகிறார்கள், சின்ன சின்ன பாவத்தை கண்டிப்பதற்கு தயக்கம் காட்டியவர்கள் மரத்தை வெட்டி தூக்கி எறிந்து விடுகிறார்கள் அதற்கு தயக்கங்கள் வருவதில்லை.
இன்று ஜான் ஜெபராஜ் மரம் ஆக வளர்ந்து வெட்டி எறியப்பட்டார் கிறிஸ்தவ உலகத்தில்...
முற்பிதாக்களின் தகப்பன் யாக்கோபு சொன்னது போல கிறிஸ்தவத்தின் வாசனையை கெடுத்து போட்டு கலங்க பண்ணினார்கள் (ஆதி 34:30)
கிறிஸ்தவத்தில் மியூசிக் வாசிக்கிறவர்கள், துதி ஆராதனை செய்கிறவர்கள், மிக ஸ்டைலாக பாட்டு பாடுபவர்கள், அதிநவீன உடை அலங்காரம் செய்கிறவர்கள், நயவசனிப்புள்ள போதகர்கள், பொருளாசை, பண ஆசை இப்படிப்பட்ட ஊழியர்களிடம் பிசாசு இச்சைகளை கொடுத்து இவர்களுடைய ஊழியத்தை கெடுத்து போடுகிறான்.
இவர்கள் தேவனுக்கு முன்பாக நாம் எப்படி இருக்கிறோம் என்பதை கவனிக்க மாட்டார்கள். மக்களுக்கு முன்பாக நாம் எப்படி இருக்கிறோம் என்பதிலே கவனம் செலுத்தும் போது சீக்கிரமாய் வழி விலகி விழுந்து போகிறார்கள்.
இவர்களுக்கு ஒரு எச்சரிப்பு தேவை.
அதை சொல்வதற்கு மூத்த ஊழியர்கள், பரிசுத்தத்தை வாஞ்சிக்கிற ஊழியர்கள், உண்மையை எதிர்பார்க்கும் ஊழியர்கள், எச்சரிக்கை தவறும் பொழுது கிறிஸ்துவின் வாசனையை கெடுத்து போடுகிற ஊழியர்கள் பெருகி வருகிறார்கள். கள்ள ஊழியர்கள் பெருகுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் கண்டிக்காத ஊழியர்களால் வரும் பிரச்சனையே
பவுல் அப்போஸ்தலன் வளர்ந்து வரும் ஊழியர்களுக்கு சொல்லும் பொழுது....
(தீத்து 1:9 இல்)
ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
ஊழியம் கிறிஸ்துவின் பாதையில் செல்லட்டும்.
அந்தப் பாதையில் நீதி உண்டாகட்டும் பரிசுத்தம் உண்டாகட்டும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments