ஆண்டவரை நோக்கி

 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி.


(சங்கீதம் 110:1-7 வரை) 

இந்த சங்கீதம் மேசியாவினுடைய  கர்த்தத்துவம், அவருடைய ஆசாரியத்துவம், 

துன்மார்க்கரை அவர் அழிப்பது மற்றும் பூமியில் அவருடைய ஆளுகை ஆகியவற்றை குறிப்பிடுகிறது. 


இயேசு கிறிஸ்துவை குறித்து தெளிவாக இந்த தீர்க்கதரிசனம் உரைக்கிறது. 

(புதிய ஏற்பாட்டில் இந்த சங்கீதம் ஏழு முறை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.)

இயேசு கிறிஸ்து தாம் தேவன் என்று உரிமை கொண்டாடுவதற்கு 1வது வசனத்தைப் பொருத்தமாக்குகிறார்.

(மத் 22:44), மேலும் அப்போஸ்தலனாகிய பேதுரு

வசனம் 1ஐ இயேசு கிறிஸ்துவினுடைய கர்த்தத்துவத்தை வலியுறுத்துவதற்கு மேற்கோள் காட்டுகிறார். 

(அப் 2:33-35; 5:30-31; ரோம 8:34; எபி 10:13;)


தேவன் கிறிஸ்துவை என்றென்றைக்கும் ஒரு ஆசாரியராக ஏற்படுத்தினார் என்று நிரூபிக்க வசனம்4ஐ மேற்கோள் காட்டியிருக்கிறது.

(எபி 5:6 மற்றும் 6:20- 7:28).


இந்த சங்கீதம் மிகவும் அருமையானது. 

இது ஒரு bible study

வசன ஆதாரத்தோடு வாசிக்கும் போது பிரயோஜனமாக இருக்கும். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 

சிலுவை ராஜா


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை