கர்த்தருடைய மகிமை.
கர்த்தருடைய மகிமை.
மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; *இதுவே கர்த்தருடைய மகிமை"* யின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.
(எசேக்கியேல் 1:28)
இந்த முழு தரிசனத்தின் முக்கியத்துவத்தை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.
*இது கர்த்தருடைய மகிமையைக் குறித்த தரிசனம்.*
1) எசேக்கியேல் என்ன வேலையைச் செய்ய வேண்டுமென்று தேவன் அவனை அழைத்தாரோ அதற்கு அவனை ஆயத்தப்படுத்தும்படியாய் தம்முடைய மகிமையையும், வல்லமையையும் அவனுக்கு வெளிப்படுத்தினார்.
அந்த ஊழியத்தில் அவனை நிலைப்படுத்தும் படி அவனது வாழ்நாள் முழுவதும் அவனுக்கு கர்த்தர் தரிசனம் ஆவார்.
(எசே 3:12,23-24; 8:2-4; 9:3; 10:1-22; 11:22-23;43:2-4).
தேவனுடைய ஊழியத்திற்கென்று அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அவருடைய சித்தத்தை நோக்கத்தை நிறைவேற்ற பிரயாசப்படும் பொழுது கர்த்தர் அவர்களுக்கு தொடர்ந்து தரிசனம் ஆவார்.
2) எருசலேம் தேவாலயத்தை விட்டு தேவ மகிமை நீங்கிவிட்டது என்றும் (1இரா 8:11; சங் 26:8; 63:2). அது இப்பொழுது சிறைப்பட்டவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது என்றும் எசேக்கியேல் முன்பு தோன்றிய தேவ மகிமை சுட்டிக்காட்டியது.
தேவ மகிமை கானானுக்கும்,
எருசலேமுக்கும் திரும்பும் என்று எசேக்கியேல் பின்பு தீர்க்க தரிசனம் உரைத்தான்.
(எசே 43:2-3,7) வாசிக்கவும்.
இன்றும் 💯 க்கு 99%சதவீதம் சபைகளில் தேவப்பிரசன்னம் ,
தேவனுடைய வல்லமை காணப்படவில்லை என்பதை சபை ஒத்துக் கொள்ளவில்லை. சபை என்று அதை ஒத்துக் கொள்கிறதோ அன்றைக்கு தான் சபை சுத்திகரிக்கப்பட்டு பரிசுதத்தை அடையும் என்பதை பரிசுத்த ஆவியானவர் நமக்கு உணர்த்துகிறார்.
3) கர்த்தருடைய ஊழியத்துக்காக ஆயத்தப்பட தேவ மகிமையின் தரிசனம் எசேக்கியேலுக்கு அவசியமாயிருந்தது போல, நாமும் அவரது பணியிலே ஆழமாய் ஈடுபடுவதற்கு முன்பு, தேவ மகிமையின் வல்லமையையும், பரிசுத்தத்தின் வல்லமையையும் அனுபவிப்பது அவசியமாயிருக்கிறது.
(ஏசா 6ஆதி). தேவன் தமது எல்லாம் மகிமையோடும் இருப்பதைக் குறித்த அறிவு, இயேசு கிறிஸ்து மூலமாகவும்
(யோவா 1:14), பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும் (1பேது 4:14), தேவனுடைய வார்த்தையின் மூலமாகவும் (2கொரி 3:7-11;அப் 1:8) நாம் பெற்றுக் கொள்கிறோம்.
கர்த்தருடைய மகிமையை அல்லது வல்லமையை அவரது பிரசன்னத்தை ஊழியம் செய்வதற்கு முன்பு அதை அனுபவித்திருக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நம்மை அறிவுறுத்துகிறார்.
தொடர்ந்து பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்துவாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments