வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்.

 வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
(எபேசியர்: 3:20) என வாசிக்கிறோம். 


தேவன் எப்பொழுதுமே நாம் வேண்டிக்கொள்கிறதை விட அதாவது நாம் நினைப்பதை விட தேவன் மிகவும் அதிகமாக நமக்கு செய்கிறார். 

(பிலி 4:6)ஐ வாசித்து பாருங்கள். வேண்டுதல் மூலமாக தேவனுக்கு தெரியப்படுத்தப்படும்பொழுது நமது கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

ஆதியாகமம் 29:31 ஐ கவனிக்கும் போது லேயாள் அற்புதமாக எண்ணப்பட்டாள் 
உடன் பிறந்த சகோதரி தன் சகோதரியை அற்புதமாக எண்ணும்போது எவ்வளவு பெரிய மனவேதனை நமக்கு உண்டாகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். 
1சாமுவேல் 1 ஆம் அதிகாரத்தில் அன்னாள் என்ற பெண்ணைப் பற்றி வாசிக்கிறோம். அவளுடைய சக்களத்தி அவளை ஒவ்வொரு நாளும் அற்பமாக எண்ணுவது மாத்திரம் அல்ல தினமும் அவள் மனம் உடைந்து போகத்தக்கதாக வார்த்தைகளால் மனமடிவாள்; என பார்க்கிறோம்.(1சாமு 1:6,7)

இவர்கள் இருவருமே தங்களுடைய மன வேதனையான கவலையை போக்க ஒரு வழியை தேர்ந்தெடுத்தார்கள் அந்த வழிதான் தேவனிடம் வேண்டுவதாகும். 


(ஆதியாகமம் 29:31)
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; 
எப்படி நடந்தது ?
(ஆதியாகமம் 30:17) ல்
தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார்.
 அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

போதும் போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பிள்ளை செல்வங்களை லேயாளுக்கு கொடுத்தார். 
(ஆதி 29:32 ல் குமாரனை பெற்று 
 ஆதி 29:33 ல் மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி
 ஆதி 29:34 ல் பின்னும் அவள் கர்ப்பவதியாகி 
 ஆதி 29:35 ல் மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி, பிள்ளைகள்  
போதும் போதும் ஆண்டவரே இனி கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி அந்த பிள்ளைக்கு யூதா என்று பெயரிட்டாள். பிள்ளை பேறு நின்று போயிற்று என வாசிக்கிறோம்.
அவளை துடிக்க வைத்தார். 

இதே போல தான் அன்னாளுடைய வாழ்க்கையிலும் ஆலயத்தில் சென்று தேவனிடம் வேண்டுதல் செய்தால் (1சாமு 1:10,11)
ஒரு ஆண் பிள்ளை தேவன் தரும்படியாகவும்,தன் மலடி என்கிற பட்ட சொல் மாறும் படியாக தேவனிடம் வேண்டினாள்.
(1சாமு 2ம் அதிகாரத்தில் மிகவும் சந்தோஷமாக மலடியாயிருந்தவள் அநேக பிள்ளைகளைப் பெற்றாள் என்று பாடுகிறாள்.
நாம் தேவனிடத்தில் வேண்டும் பொழுது நமது கவலைகள், நமது சிறுமைகள், அனைத்தையுமே கர்த்தர் மாற்றி விடுகிறார். 
சந்தோஷத்தினால் அவரை துதிக்கும்படியாக அவரை பாடும்படியாக சமாதானம் செய்கிறார். விசுவாசியுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தொடர்ந்து நீங்கள் தேவனிடம் வேண்டுதல் செய்யுங்கள். 

இன்றைய உயர்ந்த முத்துக்கள் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் அதுவே இந்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய என்னை போன்றவரை உற்சாகப்படுத்துங்கள். 

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை