இயேசு கிறிஸ்துவின் வருகை.
இயேசு கிறிஸ்துவின் வருகை. (2தெச 2:1).
தெசலோனிக்கேயருக்கு எழுதின முதலாம் நிரூபத்தில் எல்லா உண்மையான விசுவாசிகளும் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருக்கும்படி, ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலன் பவுல் மூலமாக உறுதியாக கூறுகிறார்.(1தெச 4:13-18)
இந்த சம்பவம் வரப்போகிற தேவ கோபாக்கினையினின்று அவர்களை விடுதலையாக்கும்.
(1தெச 1:10;5:9-10).
இருப்பினும், இக்காலத்திலும் கர்த்தருடைய நாள் என்பது ஏற்கனவே ஆரம்பமாகி விட்டதென்றும், தேவனுடைய முடிவான கோபாக்கினை பூமியிலே ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றும் கள்ள போதகர்கள் போதித்துக் கொண்டிருந்தனர்.
*உடனே சஞ்சலப்படாமலும், கலங்காமலுமிருங்கள்.*
(2தெச 2:2)
கர்த்தருடைய நாளைக் குறித்து கள்ள போதகர்கள் கூறியதைக் கேட்ட தெசலோனிக்கேயர் கலக்கமடைந்தனர்.
கர்த்தருடைய கோபாக்கினையின் நாள் இன்னும் வந்து விடவில்லை யென்றும், கவலை கொள்ள வேண்டாம் என்றும் (அப்,)பவுல் அவர்களுக்குச் சொல்லுகிறான்.
அதன் வருகைக்கு இரண்டு காரியங்கள் அடையாளமாயிருக்கும்:
1) ஒரு குறிப்பிட்ட "விசுவாச துரோகம்" நேரிட வேண்டும்
மற்றும்
2)"கேட்டின் மகன்" வெளிப்பட வேண்டும். (2தெச 2:3)
அதைத் தடை செய்கிறவர்
"நடுவிலிருந்து நீக்கி போடப்படும்" நாள் வரைக்கும் அந்த இரண்டு சம்பவங்களும் நிறைவேறாது என்று பொருள் தொடர்ந்து குறிப்பிட்டான்.
(2தெச 2:7)
பவுலினுடைய வார்த்தைகளான "சில தீர்க்கதரிசனங்கள், தகவல், அல்லது நிரூபம்" ஆகியவை அந்நிய பாஷைகளாலும், வியாக்கியானானங்களினாலுமோ, அல்லது தீர்க்கதரிசனத்தின் மூலமோ
கள்ள போதகங்கள் தொடர்ந்து பரவி வந்தன என்பதையும் (1கொரி 14:29) குறிப்பிடுகின்றது.
*அதுவரையில் அந்த நாள் வராது.* (2தெச 2:3)
கர்த்தருடைய நாளில் ஆரம்பத்தைத் தெரிவிக்கக் கூடிய சம்பவங்களைப் பவுல் விளைக்கிக் கூறுவதுடன், முடிவு காலத்தில் ஏற்படவிருக்கும் கேட்டின் மகன் மற்றும் அநீதியானவர்களின் அழிவையும் குறித்து பவுல் விவாதிக்கிறான்.
சம்பவங்கள் பின்வருமன போன்று தொடர்ச்சியானதாயிருக்கும்:
1) சபையின் கால முழுவதும்
"அக்கிரமத்தின் இரகசியம் "
(2தெச 2:7) கிரியை செய்கிறதானது, சீக்கிரம், அதன் முடிவு வருகிறதென்று நமக்கு நினைப்பூட்டுகிறது;
வரலாறானது முடிவுக்கு வருகிற போது கொள்ளாப்பு தடை செய்யக்கூடாதபடி வளர்ச்சி அடைந்து வருகிறது.
2) அந்த சக்தி வலுவடையும்போது, விசுவாசத் துரோகம் சபையில் பெருகும் அளவை எட்டும்
(2தெச 2:3:மத் 24:12;2தீமோ 4:3-4)
3) "அக்கிரமத்தின் இரகசியத்தை" த் தடை செய்கிறவர் (அதாவது, தடை செய்து கொண்டிருக்கிற ஒருவர் holy spirit ) நடுவிலிருந்து நீக்கப்படுவார்.
(2தெச 2:6-7)
4) அடுத்து, கேட்டின் மகன் வெளிப்படயிருக்கிறான்.
(2தெச 2:3-4,7,9-10).
5) விசுவாச துரோகமானது தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் எதிரான முழு கலகமாக உச்ச கட்டத்தை அடைகிறது; சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அங்கீகரியாதவர்களிடத்தில்
தேவன் கொடிய வஞ்சகத்தை அனுப்புவார் (2தெச 2:9-11).
6) கொஞ்ச காலத்திற்குப் பிறகு துன்மார்க்கத்தில் பிரியப்பட்ட அனைவரோடும், கேட்டின் மகனும் அழிக்கப்படுகிறான்
(2தெச 2:12); இது கிறிஸ்துவின் வருகையின் போது உபத்திரத்துக்குப் பின்பு சம்பவிக்கும், அதாவது, முடிவு காலத்தில் (2தெச 2:8;
வெளி 19:20-21) நேரிடும்.
* அக்கிரமத்தின் இரகசிய வல்லமை இப்பொழுது கிரியை செய்கிறது.*
நாளை நம் தியானிப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா
Comments