உபவாசம் இருக்கும்போது

நீங்கள் உபவாசிக்கும் போது. 

(மத் 6:16)


ஆவிக்குரிய காரியங்களுக்காக, உண்ணாமல் கட்டுப்பாட்டோடு இருத்தலே உபவாசம் என்று பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கிறோம்.

இது எப்போதும் ஜெபத்தோடு தொடர்புள்ளது. ஆனால், இதை ஆவி கூறிய ஒரு தனி பயிற்சி எனக் கொள்ள வேண்டும்.

*உபவாசத்தை "வார்த்தைகள் இல்லாத ஜெபம்"எனலாம்.*


1) பரிசுத்த வேதத்தில் மூன்று வகையான உபவாசங்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.


அ) சாதாரண உபவாசம்: 

திடப்பொருளோ, திரவ பொருளோ, எந்த வகை உணவையும் உட்கொள்ளாதிருத்தல்.

ஆனால் தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.

(மத் 4:2)


ஆ) பரிபூரண உபவாசம்: 

உணவு உண்ணாமலும், தண்ணீர் கூடக் குடிக்காமலும் 

செய்யும் உபவாசம். 

(எஸ் 4:16; அப் 9:9).

சாதாரணமாக இவ்வகையான கடின உபவாசம் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக் கூடாது. ஏனெனில் தண்ணீர் கூடக்  குடிக்காமல் இருப்பதால் சரீரம் உலர்ந்து பாதிப்படையும். மோசேயும் எலியாவும் இந்த உபவாசத்தை 40 நாட்கள் மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட, அசாதாரண நிலையில், தேவனுடைய பிரசன்னத்தில் இருந்தார்கள்.

(யாத் 34:28; உபா 9:9,18; 1இரா 19:8)


இ) பகுதி நேர உபவாசம்: 

உபவாசம் இருப்பவர் முழுவதுமாக உணவை ஒதுக்காமல் உணவுப் பதார்த்தங்களை கட்டுப்படுத்துதல். 

(தானி 10:3)


2) இயேசு கிறிஸ்து உபவாசம் இருந்தார். கிறிஸ்தவர்களின் வாழ்வில் இது கிறிஸ்துவ பக்தியில் ஒரு பகுதி என்று இருக்க வேண்டும் என்று போதித்தார்.

(மத் 9:15) புதிய ஏற்பாட்டுத் திருச்சபை உபவாசம் இருத்தலைக் கடைபிடித்தது.

(அப் 13:2,3; 14:23; 27:33).


3) உபவாசம் இருந்து ஜெபித்தலில் பல நோக்கங்கள் நிறைவேறுகின்றன. 


அ) தேவனைக் கனப்படுத்தும்படியாக,

(மத் 6: 16-18; சக 7:5; லூக் 2:37;

அப் 13:2);


ஆ) கர்த்தருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவதற்கு 

(எஸ்றா 8:21;சங் 69:10; எசா 58:3)

தேவனுடைய கிருபையை அதிகமாகப் பெற்றுக் கொள்ள (1பேது 5:5)

தேவனுடைய நெருங்கிய பிரசன்னத்தைப் பெற 

(ஏசா 57:15; 58:6-9);


இ) நம்முடைய தனிப்பட்ட மனிதரின் பாவங்களுக்காகவும், மீறுதல்களுக்காகவும், தோல்விகளுக்காகவும் துக்கிக்கும்படியாக,

(1 சாமு 7:6; நெகே 9:1,2);


ஈ) நாம் ஒரு புதிய காரியத்தைத் தொடங்குவதற்காக அவருடைய கிருபையைப் பெறவும் தேவனுக்கு நம்முடைய அர்ப்பணிப்பை உறுதி செய்யவும், உபவாசித்து ஜெபிக்கலாம். 

(மத் 4:2);


உ) தேவனைக் கிட்டிச் சேர்ந்து, நம்மை எதிர்க்கும் ஆவிக்குரிய சேனைகளுடன் போராடி, ஜெயிக்க..

(நியாய 20:26; எஸ்றா 8:21,23,31; எரே 29:12-14; யோவே 2:12; லூக் 18:3; அப் 9:10-19);


ஊ) மனந் திரும்புதலைக் கண் காண்பிக்கவும் , அதன் மூலம் தேவன் நம் மீது விரிக்க இருக்கும் தண்டனைத் தீர்ப்பை மாற்றியமைக்க

(2 சாமு 12:16,22; 1இரா 21:27-29

எரே 18:7,8; யோவே 2:12-14; யோனா 3:5,10);


எ) மக்களைத் தீமையின் அடிமைதனத்திலிருந்து விடுவிக்க,

(எசா 58:6; மத் 17:14-21; லூக்கா 

4:18)


ஏ) தேவனுடைய சித்தத்தைப் பற்றிய வெளிப்படுத்துதலையும் ஞானத்தையும் பெற்றுக் கொள்ள 

(எசா 58:5,6,11; தானி 9:3,21,22;

அப் 13:2,3);


ஐ) கர்த்தருடைய ஆவி பொழியப்படுவதற்கு வழி திறக்கப்படியாகவும், தமது மக்களுக்காக கிறிஸ்து இவ்வுலகத்திற்கு மீண்டும் வரவும். (மத் 9:15)


தொடர்ந்து நாமும் உபவாசித்து ஜெபிப்போம் தேவ சித்தம் நிறைவேற்றுவோம் தேவ கிருபையை பெற்றுக்கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை