ஜெபிக்கலாம் வாங்க
ஜெபிக்கலாம் வாங்க
ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்து விசுவாசிகளுக்கும் தேவ ஊழியர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
(சங்கீதம் 65:2)
1) நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நம்முடைய ஜெபத்தை கேட்கிறவர் தான் என்பது உண்மை.
அ) (மனாசே)ஒரு பாவி தன்னுடைய தவறை உணர்ந்து அவரை நோக்கி கூப்பிடும்போது அவர் அவனுக்கு இரக்கம் காட்டுகிறார்.
(2 நாளா 33:13 வாசிக்கிறோம்)
அதே பரிசுத்த ஆவியானவர் பாவிகளுக்கு தேவன் செவி கொடுப்பதில்லை என்று ஒரு குருடன் மூலமாக சொல்லுகிறார்.
(யோவா 9:31)
பாவத்தை துணிகரமாக செய்து கொண்டிருக்கிறவர்களுக்கு தேவன் செவி கொடுக்க மாட்டார், அதே வேளையில் தான் செய்த பாவத்திற்காக மனஸ்தாபபட்டு வருந்தி அதை அறிக்கை செய்து விட்டு விடும் போது தேவன் இறங்குகிறார், அதே வேலையில் தவறை தொடர்ந்து செய்கிறவர்களுக்கு தேவன் ஒரு நாளும் செவி கொடுக்க மாட்டார். (யோவா 9:31; ஏசா 59:2,)
ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விசுவாச மக்களே, தேவனுடைய ஊழியர்களே
வேதத்தை தொடர்ந்து வாசிக்காமல் இருப்பது,
ஜெபம் பண்ணாமல் இருப்பது,
கர்த்தர் கொடுத்த ஊழியத்தை செய்யாமல் இருப்பது,
உண்மையை பேசாமல் இருப்பது,
வாங்கின கடனை கொடுக்காமல் இருப்பது,
மற்ற ஊழியங்களை குறித்து தரைக்குறைவாக பேசுவது,
தன் சொந்த குடும்பத்தை சரியாக நடத்தாமல் இருப்பது,
இன்னும் கெட்ட வார்த்தை போடுவது, மனைவி பிள்ளைகளை அடிப்பது,
சபைக்கு வரும் பெண்களை இச்சையோடு பார்ப்பது, அவர்களுக்கு ஜெபிப்பது போல தொட்டு தடவுவது, தள்ளி விடுவது.
கள்ள உபதேசம் மற்றும் குறி சொல்வது போல தீர்க்கதரிசனம் சொல்லுவது,
கர்த்தர் சொன்னார் என்று துணிகரமான பொய் சொல்லுவது,
இதெல்லாம் பாவமா இல்லையா என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதில் ஒன்று கூட நம்மிடத்தில் இல்லையா என்பதை சோதித்து பாருங்கள்.
ஒன்று உங்களிடத்தில் காணப்பட்டாலும் உங்கள் ஜெபம் கேட்கப்படாது.
ஜெபிக்கலாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விசுவாசிகளே உங்களுக்கு தேவன் தந்த திருச்சபை மற்றும் போதகர்கள் உங்களுக்கு இல்லையா ?
அல்லது மேய்ப்பன் இல்லாத ஆடுகளா நீங்கள் ?
பிறகு ஏன் நீங்கள் உங்கள் தொழுவத்தை விட்டு மற்ற தொழுவத்திற்குள் ஏன் ஓடுகிறீர்கள் ?
உங்கள் சபை மேய்ப்பன் தானே உங்கள் ஆத்மாவுக்கு உத்தரவாதி என்பதை ஏன் சிந்திக்க மறந்து விட்டீர்கள்.
நம்முடைய தொழுவமாகிய சபையில் இருந்து கொண்டு நம்மால் ஜெபிக்க முடியாதா ?
ஏன் உங்கள் ஊழியர்கள் ஜெபிக்க தெரியாதவர்களா?
2) ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் ....
ஆண்டவரை பற்றி கேள்விப்படாத மக்களுக்காக ஜெபிக்கும் பொழுது அவர்கள் இரட்சிக்கப்பட்டு விடுவார்களா ?
அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் ஏன் இப்படி சொல்லுகிறார் ?
ரோமர் 10:14-15 இல்
*அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? *
*அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? *
*பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?*
*அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?*
சமாதானத்தை மற்றும் நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டும் என்று பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் எழுதிக் கொடுத்துள்ளார்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ன சொன்னார் ?
அவரை அறியாத ஜனங்களுக்காக ஜெபிக்க சொன்னாரா ?
அல்லது புறப்பட்டு போகச் சொன்னாரா ?
(மத் 28:19,20 இல் புறப்பட்டு போய் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று சொன்னார்.
*எதற்காக ஜெபம் பண்ண சொன்னார் ?*
(மத்9:37,38; லூக்கா 10:2; வாசி)
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அல்லது பொது உடன்படிக்கையின் பரிசுத்தவான்கள் ஆவது தேவனை அறியாத மக்களுக்காக ஜெபித்தார்களா ?
அல்லது புறப்பட்டு போய் சுவிசேஷத்தை அறிவித்தார்களா ?
இயேசு கிறிஸ்து சொல்லும் வார்த்தைகளை கவனிக்க வேண்டும்.
(யோவா 17:9)
நான் அவர்களுக்காக (தன்னை ஏற்றுக் கொண்டவர்களுக்காக) வேண்டிக்கொள்ளுகிறேன்; *உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்;*
அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
இயேசு கிறிஸ்து ஜெபித்தது போல ஒவ்வொரு சபை ஊழியனும், விசுவாசம், தேவனுடைய ஊழியர்களுக்காக, தேவனுடைய மந்தைக்காக, திருவசனம் செல்லுபடியாகவும், சபைகள் பக்தி விருத்தி அடையவும், விசுவாசத்தில் பெருகவும் ஜெபிக்க வேண்டும்.
(ரோமர் 8:27; கொலே 4:4;)
ஆனால் இந்த ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சி நம்மை தவறான ஜெபத்தை செய்யும்படி ஏவுகிறது இதுதான் சாத்தானுடைய வேலை....
இவர்கள் ஒரே ஒரு வசனத்தை மாத்திரமே எல்லாருக்காகவும் ஜெபிக்க வேண்டும் என்று மேற்கோள் காட்டுகிறார்கள்.
1 தீமோத்தேயு 2:1,4
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்.
(திருச்சபையில் அங்கம் வைத்திருக்கிற ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.
சபையில் காணிக்கை கொடுப்பவர்களுக்காக ஒரு ஜெபம் இருக்கிறது, தொடர்ந்து திருச்சபைக்கு வருகிறவர்களுக்காக ஜெபம் இருக்கிறது, ஆனால் கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்காகவோ, சாதி பாகுபாடு பார்க்கும் நிலையில் இருப்பதால் சிலருக்கு ஜெபம் இல்லை,
ஒருவேளை எல்லா மனுஷருக்காகவும் என்று நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்று சொன்னால் அதாவது இரண்டாவது வசனம் ராஜாக்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது, ராஜாவும் ஒரு மனுஷன் தானே பிறகு ஏன் பிரித்து எழுத வேண்டும் எல்லா மனுஷரும் என்று நாம் புரிந்து கொள்ளலாமே.
எல்லா மனுஷரும் என்று நான்காவது வசனத்தில் வாசிக்கிறோம்
[4]எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
சுவிசேஷத்தை அறிவிக்கும் போது தான் ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியும். அடுத்து அவன் சத்தியமாகிய உண்மையை அவன் அறிந்து கொள்ள முடியும்.
என்பதை நாம் அறிந்திருந்தாலும் அதை ஒழுங்கும் கிரமமாக செய்வதில்லை .
இப்பொழுது நாம் எல்லாருமே ஒரு இராக்காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை கூட திருச்சபை அறியாமல் இருக்கிறது,
சபை ஊழியம் ஒரு பொழுதுபோக்காக..
ஒரு நடன அரங்கமாக..
ஒரு மேஜிக் ஷோ நடத்துவது போல...
ஒரு நீதிமன்றத்தை போல வாக்குவாதமும் ,விவாதமும் , மற்றும் தீர்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது,
உபதேச கோளாறை கடிந்து கொள்ள முடியாத குரைக்க மாட்டாத நாய்களைப் போல ஊழியர்கள் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியும் இதில் அடங்கும்.
இந்தியா வந்த மிஷனரிகள் ஜெபித்துக் கொண்டே அங்கே இருக்கவில்லை. களத்தில் இறங்கினார்கள், விதையை விதைத்தார்கள், அறுவடையை கண்டார்கள்,
இன்றைய பிரபல சுவிசேஷகளுக்கு பல லட்சத்தில் மேடை போட்டுக் கொடுத்தால் மட்டுமே வருகிறார்கள்.
வந்த கிறிஸ்தவர்கள் நடுவிலே பேசி தேவ சித்தத்தை நிறைவேற்றாமல் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றி முடித்து கடந்து போய் விடுகிறார்கள்.
அந்த காலத்தில் நாங்கள் நடந்து சைக்கிளில் கிராமம் கிராமமாக மிகவும் வரும்மையான நேரத்தில் கடந்து இருந்தோம் என்று அழுது கொண்டு சாட்சி சொல்லுகிறார்கள். இந்த காலத்தில் பணம் கோடி கோடியாக கையில் இருந்தும் கிராமங்களில் நடந்த சென்று தனிநபரை சந்திக்க வக்கில்லாதவர்களாய் போனதற்கு காரணம் என்ன ?
மக்களே விசுவாசிகளே நீங்கள் கொடுக்கும் பணம் தேவனுடைய ராஜ்யத்தை கட்டுமான பணிக்காக அல்ல அவர்களுடைய சுகபோக வாழ்க்கைக்காக கொடுத்து இருக்கிறீர்கள். தேவ நிச்சயமாக உங்களிடத்திலும் கணக்கு கேட்பார்.
தேவனுடைய நியாயத்தில் உங்களிடத்தில் தொடங்கும்.
கிராமத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் ஊழியம் செய்யும் ஊழியர்கள் ஏராளம் ஏராளம்.
வட இந்திய பகுதிகளில் கஷ்டத்தோடு பல சவால்களின் மத்தியில் அரும்பாடு படும் ஊழியர்களுக்கு தேவைகள் சந்திக்கப்படவில்லை.
நீங்கள் பணம் காணிக்கை கொடுக்காவிடிலும் பரவாயில்லை
இப்படிப்பட்ட ஊழியர்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments