பழைய ஏற்பாடு 3

 219 ஆவது தொடர்ச்சி 

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை பற்றிய ஒர் கண்ணோட்டம்.


பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் எட்டு வித குணாதிசயங்கள். 


பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி எப்படிப்பட்டவன்?


1) தேவனோடு நெருங்கிய தொடர்பு கொள்பவனாகவும், தேவனுடைய நம்பிக்கைக்கு உரியவனாகவும் செயல்பட்டான். 

(ஆமோஸ் 3:7) மனித நோக்கத்தின் படி அல்லாமல் தேவனுடைய பார்வையின் மூலமாக உலகையும், உடன்படிக்கையின் மக்களையும் தீர்க்கதரிசி நோக்கினான். 


2) தீர்க்கதரிசி தேவனுக்கு நெருக்கமாக இருந்ததால் மனிதனுடைய பாவத்தை கண்டு தேவன் துன்புறும்போது அவனும் இணைந்து தேவனிடம் பரிதாபம் கொண்டான். மற்ற யாரையும் விட தேவனுடைய நோக்கம், சித்தம், விருப்பம் இவற்றை அறிந்திருந்ததால் தானும் தேவனைப் போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகளை கொண்டிருந்தான். மற்றொரு விதமாக கூறின், தீர்க்கதரிசி தேவனுடைய சத்தத்தை மட்டும் கேட்காமல், அவரது இருதயத்தையும் உணர்ந்திருந்தான்.

(எரே 6:11; 15:16-17; 20:9)


3) தேவனைப் போலவே தேவ ஜனங்களை தீர்க்கதரிசி நேசித்தான். மக்கள் மனவேதனைப்பட்டபோது தீர்க்கதரிசியும் ஆழமான வேதனை அனுபவித்தான்.

(புலம்பலை பார்க்கவும்) தேவனிடத்தில் இருந்து நல்லவைகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்பியதால் (எசே 18:23) அவனது செய்திகள் எச்சரிப்பாக மட்டுமின்றி ஆறுதல் நம்பிக்கை இவற்றின் வாக்குகளாகவும் அமைந்தன. 


4) அவன் மக்களிடத்தில் மேலானவைகளை எதிர்பார்த்தான்.

(உதாரணமாக, முழு நம்பிக்கையும் தேவனிடத்தில் உண்மையையும்) எனவே மனிதன் ஞானம், செல்வம், அதிகாரம், பிற தெய்வங்கள் இவற்றை நம்புவதை குறித்து எச்சரித்தான்.

(எரே 8:9-10; ஓசி 10:13,14;ஆமோ 6:8) தேவனுடைய மீட்பின் ஆசிர்வாதத்தை பெற அவரது உடன்படிக்கையைக் கைக்கொள்ள வேண்டும் என தீர்க்கதரிசிகள் போதித்தனர்.


மீதி 4 காரியங்களோடு நாளை தொடரும். 

தொடர்ந்து வாசியுங்கள் 

கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை