முக்காடு

 296 உயர்ந்த முத்துக்கள்.


*முக்காடிட்டுக் கொண்டிருக்கக்கடவள்.*

(1கொரி 11:6-10)


அப்போஸ்தலன் பவுலுடைய நாட்களில் பெண், தன் கணவனிடம் அடக்கமாகவும், கீழ்படிதலோடும் இருப்பதைக் காண்பிக்கவும், தன் கௌரவத்தை மெய்ப்பிக்கவும் தன் தலையை மூடியிருந்தாள். முக்காடு என்பது அவள் ஒரு பெண்ணாக மதிக்கப்பட்டு, கனப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

முக்காடில்லாமல் அவளுக்கு கௌரவம் இல்லை. முக்காடில்லாத பெண்களை ஆண்கள் மதிப்பதில்லை. ஏனென்றால் அதனால் வெளியில் ஆடம்பரமாக வெட்கமின்றி அவர்கள் இருந்தார்கள். தேவன் பெண்ணை சிருஷ்டித்தது போல் அவளுடைய பெண்மையின் மதிப்புக்கும், மகிமைக்கும் அடையாளமாக முக்காடு பயன்படுத்தப்படுகிறது. 


முக்காடிடுவதின் கொள்கை இன்னால் வரைக்கும் அவசியமாயிருக்கிறது. ஒரு கிறிஸ்தவ பெண் எங்கு போனாலும் பாதுகாப்போடும், ஆழ்ந்த மரியாதையோடும் நடந்து கொள்ளும்படி, கணமும் கௌரவமுமான உடையை அடக்கமாகவும், கவனத்தோடு அணிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய மகிமைக்காக கண்ணியமாகவும், தகுதியான விதமாகவும் உடை அணிந்திருக்கும் போது ஒரு பெண் தேவனால் அவளுக்கு கொடுக்கப்பட்ட கௌரவமான இடத்தையும், தகுதியையும் உயர்த்துகிறாள்.


*அதிகாரத்தின் அடையாளமாக முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்.*


மறுபடியும் பவுல் ஒரு பெண் பொது இடங்களில் முக்காடிட்டுக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறான். அதாவது, "அதிகாரத்தின் அடையாளமாக தலையின் மேல் முக்காடிருக்க வேண்டும்".(1கொரி 11:3,6)

"தூதர்களினிமித்தம்" என்ற சொற்றொடர் தூதர்கள் சரியான ஒழுங்கைப் பற்றி கரிசனையோடிருக்கிறார்கள் என்பதையும் தேவனுடைய சித்தத்துக்கு ஒத்துப் போகாத நடத்தையை கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறது. 

(1கொரி 4:9)


*புருஷன் மயிரை நீளமாய் வளர்கிறது.* (1கொரி 11:4)


ஆண்களுக்கும் பெண்களுக்குமுள்ள சரிடா வேறுபாடுகளுக்கு இணங்கிப் போக வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.


1) ஆண்களையும், பெண்களையும் வேறு படுத்தும்படி ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்படி அவர்கள் தலைமுடியின் நீளத்தை காவல் உதாரணமாக பயன்படுத்துகிறான். தேவன் பெண்ணை சிருஷ்டித்தபடி கௌரவமாகவும், அவள் பெண்மையின் மதிப்புக்குத் தக்கதாகவும் அதை ஏற்றுக் கொள்வதற்கு அடையாளமாக ஆணின் தலைமுடியை காட்டிலும் பெண்ணின் தலைமுடி அதிகமாக இருக்க வேண்டும்.(1கொரி 11:6)

பெண்ணின் தலை முடிக்கு மாறாக ஒரு ஆணின் தலைமுடி நீளம் குறைவாக இருக்க வேண்டும்.


2) புதிய ஏற்பாட்டு காலத்தில் நீளமான தலைமுடி, யூதரான மனிதராலும், முதல் நூற்றாண்டில் இருந்த கொரிந்தியராலும் கனவீனமுள்ளதாகக் கருதப்பட்டு, அது தவிர்க்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவுக்கு நீளமான முடி இருப்பது போல படங்கள் வரையப்பட்டிருப்பதற்கு பரிசுத்த வேதாகமத்திலிருந்தோ, சரித்திர பிரகாரமாகவோ அத்தாட்சி இல்லாததால் அது மத்திய காலத்தில் உள்ள ஓவியரின் கற்பனையாகும். 

(புதிய ஏற்பாட்டு காலத்து ஆயிரக்கணக்கான வண்ண படங்களும், சிற்பங்களும் இதை நிரூபிக்கிறது) பெண்களைப் போல இயேசு கிறிஸ்துவம் நீள முடி வைத்திருந்தாரென்றால் 

" புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறது " என்று அப்போஸ்தலர் மூலமாக பரிசுத்த ஆவியானவர் எழுதியிருக்க மாட்டார். ஆகவே பவுல் கூறுவது ஓவியரின் கற்பனைக்கு மாறாக உள்ளதே தவிர இயேசு கிறிஸ்துவின் வழக்கத்துக்கு அல்ல (யாத் 20:4).


பெண்கள் ஏன் முக்காடு  போட்டு கொள்ள வேண்டும் என்பதையும், ஆண்கள் மயிரை நீளமாய் வளர்ப்பது பற்றியும் இந்த நாள் நாம் தியானித்தோம்.. 

வேத வசனத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து கீழ்ப்படிவோம் கர்த்தர் பெரிய காரியம் செய்வாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை