தெரிந்து கொள்ள பட்டவர்களையும்
தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும்
மாற்கு 13:22
ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
இன்றைய விசுவாசிகள் தங்கள் திருச்சபைகளிலும் கர்த்தருடைய வார்த்தையைப் போதிக்கும் போதகர்கள் இயேசுவின் நாளில் இருந்தவர்களைப் போலக்
கெட்டவர்களாகவும், மாய்மால வாழ்க்கை வாழ்கிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதை உணர வேண்டும்.
(மத் 24:11;24) இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் ஒவ்வொருவரும் உண்மையான விசுவாசிகள் அல்ல. அதேபோல் கிறிஸ்தவ எழுத்தாளர்களோ, நற்செய்தி பணியாளர்களோ, போதர்களோ, சுவிசேஷர்களோ, ஆசிரியர்களோ, மூப்பர்களோ, ஊழியர்களோ, தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டுவதால் அப்படி உண்மையான கிறிஸ்தவர்களாக ஆகிவிட மாட்டார்கள் என்று இயேசு எச்சரிக்கிறார்.
1) இந்த ஊழியர்கள் வெளி வேஷத்தில்,"நீதிமான்கள் போல தோற்றமளிப்பார்கள்."(மத் 23:28). அவர்கள் "ஆட்டுத் தோல்களைப் பொர்த்திக் கொண்டு"வருவார்கள்.
(மத் 7:15). அவர்கள் தங்கள் செய்தியை தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டிருப்பார்கள். உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் நீதியையும் அறிவிப்பார்கள். தேவனுடைய ஊழியத்திலும், ராஜ்யத்திலும் அதிக அக்கரை கொண்டவர்கள் போலத் தோன்றுவார்கள். எல்லா மக்கள் மேலும் அன்பு செலுத்துவதாகவும், இழந்து போனவர்களை மீட்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் போலவும் காணப்படுவார்கள். தேவனுடைய அபிஷேகம் பெற்ற, பாராட்டத்தக்க பெரிய ஊழியக்காரர் போலவும், ஆவிக்குரிய தலைவர்கள் போலவும் தோற்றமளிப்பார்கள். அவர்கள் பல அற்புதங்களைச் செய்யும் வெற்றியுள்ள ஊழியர்களைப் போல விளங்குவார்கள். திரளான ஜனக்கூட்டம் அவர்களை பின்பற்றும். (மத் 7:21-23 ) 24:11,24, 2கொரி 11:13-15).
2)இருந்தபோதிலும் இவர்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள கள்ள தீர்க்கதரிசிகளை தங்கள் ஆவிக் கூறிய வழிகாட்டிகளாக கொண்டிருப்பார்கள்.
(உபா 13:3 1இரா 18:40 நெகே 6:12, ஏரே 14 :14 ஓசி 4:15 குறிப்புகளை பார்க்கவும்.
புதிய ஏற்பாட்டில் உள்ள பரிசேயர்களும் இவர்களுடைய முன்னோடிகளான வழிகாட்டிகளே. மக்கள் கூட்டத்தை விட்டு விலகி தங்கள் மறைவான தனி வாழ்க்கையில் பரிசேயர்கள்
"பேராசை உள்ளவர்களாகவும், தங்கள் சுய விருப்பங்களை நிறைவேற்றவர்களாகவும் காணப்பட்டார்கள்.(மத் 23:25)
"இறந்த மனிதர்களின் எலும்புகளும், அசுத்தமான அனைத்து கிரியைகளும்" அவர்களுடைய வாழ்க்கையில் நிறைந்து காணப்பட்டன. (மத்23:27)"மாய்மாலமும், அக்கிரமமும்"அவர்களுடைய வாழ்க்கையில் நிறைந்து இருந்தன (மத்23:28) மூடிய கதவுகளுக்குள் அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையில் இச்சை, பாலியல் ஒழுக்கக்கேடு, விபச்சாரம், பேராசை, தங்கள் சுய விருப்பங்களை நிறைவேற்றும் தன்மை இவைகள் நிறைந்து காணப்பட்டன.
3) இந்த வஞ்சகர்கள் திருச்சபைகளில் இரண்டு வழிகளில் முக்கியமான இடத்தை பெற்றுக் கொள்கிறார்கள்
அ) சில கள்ள போதகர்களும்,
பிரசிங்கிகளும் தங்கள் ஊழியத்தை மிகுந்த உண்மையுடனும், சத்தியத்துடனும், தூய்மையுடனும், கிறிஸ்துவின் மீது உண்மையான விசுவாசத்துடனும் ஆரம்பிக்கிறார்கள். பின்னர் பெருமைனாலும் தங்கள் ஒழுக்கக்கேடான ஆசைகளினாலும், கிறிஸ்துவின் மீதுள்ள அவர்களுடைய அர்ப்பணிப்பும் அன்பும் படிப்படியாகக் குறைகின்றது.
இதன் பலனாக தேவனுடைய ராஜ்யத்தின் தொடர்பில் இருந்து அவர்கள் விலகி விடுகின்றனர்.(1கொரி 6:9,10, கலா5:19-21.எபே 5:5,6). எனவே அவர்கள் சாத்தானின் கருவிகளாக மாறி விடுகிறார்கள்.
ஆனால் தங்களை நீதியுள்ள ஊழியக்காரர்கள் போலத் தங்களை காட்டிக் கொள்வார்கள். (2கொரி 11:15)
ஆ) மற்ற கள்ளப் போதகர்களும், பிரசிகிகளும் எப்போதுமே கிறிஸ்துவின் உண்மை விசுவாசிகளாய் இருந்ததில்லை.
ஆரம்பத்தில் இருந்தே சாத்தான் அவர்களைத் திருச்சபைகளில் நாட்டி வைத்திருக்கிறான். (மத் 13:24-28;36_43) அவர்களுடைய திறமை, உங்கள் மீது காட்டும் அன்பு, அக்கரை, செய்யும் உதவி இவற்றின் மூலம் அவர்களுடைய பணியில் வெற்றி இருக்கும்.
சாத்தானின் சூழ்ச்சி என்னவெனில் இவர்களை மிகவும் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த பதவிகளில் வைப்பது. இவர்களது செயல்பாட்டால் கிறிஸ்துவின் உண்மையான வேலைகளை தடை செய்து கீழ்படுத்த முடியும். இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டால், கிறிஸ்துவுக்கும், அவருடைய நற்செய்திக்கும் பெருத்த அவமானமும், அவப்பெயரும்,
உண்டாகும் என்பதை சாத்தான் அறிவான்.
சோதித்தல்
சுவிசேஷ புத்தகத்தில் 14 தடவைகள் இயேசு தவறாக வழிநடத்தக்கூடிய இத்தகைய கள்ளப் போதர்களை குறித்து விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
(மத் 7:15; 16:6,11; 24:4,24;
மாற் 4:24; 8:15; 12:38-40; 13:15.
லூக் 12:1; 17:23; 20:46; 21:8) இன்னும் பல இடங்களில் விசுவாசிகள் திருச்சபைகளில் உள்ள தலைவர்கள், போதகர்கள், ஆசிரியர்கள், இவர்களை சோதித்துப் பார்க்குமாறு இயேசு கூறியுள்ளார்.
(1தெச 5:21; 1யோவா 4:1) கள்ளத் தீர்க்கதரிசிகளையும்,
கள்ளப் போதகர்களையும், கண்டறியக் கீழ்க்கண்ட சோதனைகளை செய்யலாம்.
1) அவர்களுடைய நன்னடத்தையும், பண்புகளையும் சோதித்துக் கண்டறியுங்கள்.
அவர்களிடம் உண்மையான ஜெப வாழ்க்கை உள்ளதா ?
அவர்கள் தேவனிடம் உண்மையான பக்தியும், பற்றுதலும் கொண்டவர்களா?
அவர்களது வாழ்க்கையில் ஆவியின் கனிகளை வெளிப்படுத்துகின்றனரா?
(கலா 5:22,23) பாவிகளை நேசிக்கிறார்களா ?
(யோவா 3:16) அக்கிரமத்தை வெறுத்து நீதியை நேசிக்கிறார்களா ?
(ஏபி1:9;ன்படி பாவத்துக்கு எதிராக கூக்குரல் எழுப்புகிறார்களா ?
(மத்23; லூக் 3:18-20).
2) அவர்களுடைய நோக்கங்களை கண்டறியுங்கள். உண்மையான கிறிஸ்துவ ஊழியர்கள் நான்கு காரியங்களைச் செய்ய ஆசைப்படுவார்கள்.
அ: கிறிஸ்துவை கணப்படுத்துதல்
(2 கொரி 8:23; பிலி 1:20)
ஆ: திருச்சபையை பரிசுத்தத்திற்கு நேராக வழி நடத்துவார்கள்.
(அப் 26:18;1கொரி6:18; 2கொரி
6:16-18)
இ: இழந்து போனவர்களை தேடி இரட்சிப்பார்கள்.
(1கொரி 9:19-22)
ஈ: கிறிஸ்துவின் நற்செய்தியைக் கூறி அறிவிப்பார்கள். நற்செய்திக்காக வாதிடுவார்கள். அப்போஸ்தலர்களை ஆதரிப்பார்கள் (பிலி 1:16 யூதா 3)
3) அவர்களுடைய வாழ்க்கையிலும், போதனையிலும் உண்டாகும் கனிகளை சோதித்து பாருங்கள்.
கள்ள போத அவர்களின் ஊழியத்தின் பலனாக மனம் திரும்புகிறவர்கள், தேவனுடைய வார்த்தைக்கு தங்களை முற்றிலும் அர்ப்பணித்தவர்களாக இருக்க மாட்டார்கள். (மத்7:16)
4) அவர்கள் எந்த அளவு தேவனுடைய வார்த்தைகளைச் சார்ந்து இருக்கிறார்கள் என்று கண்டறியுங்கள்.
இது ஒரு முக்கியமான பிரச்சனை.
பழைய புதிய ஏற்பாடுகளில் எழுதப்பட்டவைகள் எல்லாம் பரிசுத்த ஆவினால் ஏவப்பட்டு எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தைகள். அவற்றுக்கு நாம் முற்றிலும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்களா?
மக்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்று போதிக்கிறார்களா?
(2யோவா 9-11) இல்லையேல் அவர்களும், அவர்களுடைய செய்திகளும் தேவனிடத்திலிருந்து வந்தவையல்ல என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
5) இறுதியாக கர்த்தருடைய காணிக்கை பணத்தை அவர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்று சோதியுங்கள்.
பெரிய தொகைகளைத்
தங்களுக்கென்று எடுத்துக் கொள்ள மறுக்கிறார்களா?
புதிய ஏற்பாட்டில் தலைவர்களுக்கான தகுதிகளின்படி ஆண்டவருடைய ஊழியத்தை நிறைவேற்ற, உண்மையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் அப்பணத்தை கையாளுகிறார்களா?
(1தீமே 3:3;6:9,10;). உண்மையான விசுவாசிகள், இத்தகைய கள்ளப் போதகர்களின் தனி வாழ்க்கையையும், போதனைகளையும் மதிப்பீடு செய்யச் சோதனைகளை நடத்தினாலும் சாத்தானின் உதவியுடன் சிலர் கண்டுபிடிக்கப்படாமல் திருச்சபைகளின் பொறுப்புகளில் நிலைத்திருப்பார்கள். அவர்களின் உண்மைத் தன்மை எப்படிப்பட்டது என்று தேவனே வெளிப்படுத்தும் வரை அவர்கள் நீடித்துருப்பார்கள்.
அன்புள்ள தேவனுடைய பிள்ளைகளே இதை வாசிக்கும் ஊழியர்களே நண்பர்களே
உங்கள் சகோதரன் சிலுவை ராஜா வாகிய நான் இந்த கடைசி காலத்தில் ஆண்டவர் சீக்கிரமாய் வர போகிறார் என்ற நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு கள்ள ஊழியர்களையும் கள்ள போதனைகளையும் நீங்கள் அறிந்து கொள்ளும்படி நேரத்தை செலவழித்து வேதத்தை வாசித்து ஜெபித்து நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆகையால் நீங்களும் தேவனுடைய காரியத்தில் எச்சரிக்கையாக இருந்து பயபக்தியோடு தேவனை ஆராதியுங்கள் அவருக்காக உங்களுடைய பணியை செய்து கொண்டே இருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments