திருமண உறவில்
திருமண உறவில் உண்மையற்ற தன்மை.
(மத் 19:9)
திருமணம் பற்றிய தேவனுடைய சித்தம் "ஒருவனுக்கு ஒரு மனைவி. அவளுடன் திருமண வாழ்க்கை என்பதாகும்.
(மத் 19:5,6; ஆதி 2:24;உன் 2:7;4:12;மல் 2:14). இதற்கு இயேசு கிறிஸ்து ஒரு விதி விலக்கை அறிவிக்கிறார். அதாவது 'திருமண வாழ்வில் உண்மையற்ற நிலை'.
திருமண வாழ்வில் உண்மையற்ற நிலை என்பதில், (கிரே,'போர்னேயா') விபசாரம், வேசித்தனம், பாலுறவில் ஒழுக்கக்கேடு,(மத் 5:32) என்பவை அடங்கும்.
எனவே ஒழுக்க நெறியில் சீர்கேடு காணப்படுமானால் விவாகரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது. விவாகரத்து சம்பந்தமாக பரிசுத்த வேதாகமம் கூறும் கருத்துக்கள்.
1)மத் 19:7,8 வசனங்களில் திருமணம் முறிவை இயேசு கிறிஸ்து கண்டனம் செய்கிறபோது, விபசாரம் காரணமாகக் கணவன், மனைவி பிரிக்கப்படுவதை இயேசு கிறிஸ்து கண்டிக்கவில்லை, பழைய ஏற்பாட்டில் இக்குற்றத்திற்காக விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. திருமணம் முடிந்தபின் கணவன் மனைவி 'கன்னி'அல்ல என்று அடையாளம் கண்டுபிடித்தால், அவள் திருமணத்துக்கு முன்னரே 'கற்பிழந்தவள்' என்று கண்டு கொண்டால் அவளைத் தள்ளி விடலாம் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது.
(உபா 24:1-4).
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனுடைய விருப்பம் இருவரும் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதே. எனினும் திருமணத்துக்கு முன்னரே பெண் ஒழுக்கம் தவறி கற்பிழந்தவள் என்று காணப்பட்டால் அவர்கள் விவாகரத்துச் செய்து கொள்ளலாம் என்று தேவன்
"மக்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம்"கூறினார். (மத் 19:7,8)
2) திருமணத்துக்குப் பின் கணவன் மனைவியரிடத்தில் ஒழுக்கக்கேடு காணப்பட்டால், பழைய ஏற்பாட்டு விதிகளின்படி அவர்கள் திருமண முறிவு செய்து கொள்ளலாம். (லேவி 20:10;உபா 22:22) இம்முறையில் விவாகரத்து செய்து கொண்ட பின் கணவன் மனைவியருள் குற்றமற்றவர்கள் வேறு திருமணம் செய்து கொள்ளலாம். (ரோம 7:2;1கொரி 7:39).
3) புது உடன்படிக்கையின் படியும் விசுவாசிகளின் உரிமைகள் எந்த வகையிலும் குறையவில்லை.'விவாகரத்து'என்பது ஒரு கொடிய
நிகழ்ச்சியாயிருந்தாலும்,
ஒருவரிடத்தில் காணப்படும் உண்மையற்ற தன்மை மற்றவருக்கு எதிரான ஒரு கொடிய பாவம். எனவே அத்தம்பதியரில் குற்றமற்றவருக்கு அத்திருமண உறவை முறித்துக் கொள்ளவும், விவாகரத்துப் பெற்றுக் கொள்ளவும் உரிமை உண்டு. அவன் அல்லது அவள் மறுபடியும் வேறு ஒரு விசுவாசியைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
(1கொரி 7:27,28).
4) அப்போஸ்தலனாகிய பவுல் திருமணம், திருமண முறிவு இவை பற்றி 1 கொரிந்தியர் 7:12 முதல் 16 வசனங்களில் எழுதியிருப்பது கணவன் மனைவியருள் ஒருவர் அவி விசுவாசியாயிருந்தால் அவி விசுவாசி கைவிட்டு விட்டுப் பிரிந்து போய்விட்டால் விவாகரத்துச் செய்து கொள்ளலாம் என்று காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு விசுவாசி மறு விவாகம் செய்து கொள்வது பாவமல்ல என்றும் கூறுகிறார்.
(1கொரி 7:15;7:27,28).
ஆகையால் ஒருவருக்கொருவர் உண்மையுடன் வாழுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments