நெகேமியா 2
நெகேமியா
சன்பல்லாத்.... யூதர்களை பரியாசம் செய்தான்.
(அதிகாரம் 4: 1;)
சிறு குழுவான யூதாவில் மீதியானவர்களுடைய விரோதிகள் எருசலேமின் சுவர் திரும்பவும் கட்டப்படுவதை எதிர்த்தார்கள். நெகேமியாவும் ஜனங்களும் பரியாசத்தையும் (வச 1-6)
தீவிரமான பயமுறுத்துதலையும் (வச 7-9)
அதைரியத்தையும்(வச 10)
மற்றும் பயத்தையும் (வச 11-13) எதிர்கொண்டனர்.
தேவனுடைய வேலைக்கு எதிரான எதிர்ப்பானது எவ்வாறு மேற்கொள்ளப்படக் கூடும் என்பதை இவ்வதிகாரம் எடுத்துக்காட்டுகிறது.
1) பரியாசமானது ஜெபத்தினாலும், தீர்மானத்தினாலும் மேற்கொள்ளப்பட்டது.
(வச 4-6)
2) தீவிரமான பயமுறுத்தலானது ஜெபத்தினாலும், மிக்க கவனமுள்ள பாதுகாப்பினாலும் மேற்கொள்ளப்பட்டது.
(வச 7-9; மாற் 14:38; எபே 6:18)
3) அதைரியமும் பயமும்
தேவபக்தியுள்ள தலைவர்களின் விசுவாசம், அவர்களுடைய ஊக்கம், மற்றும் எதிராளியை எதிர்ப்பதற்கு வேண்டிய அவர்களுடைய முன்னேற்பாடு ஆகியவைகளினால் மேற்கொள்ளப்பட்டது.
(வச 12-18; 6:11)
*அவர்கள் தலையின் மேல் திரும்பும்.* (வச 4)
விரோதிக்கு எதிரான நெகேமியாவின் ஜெபமானது தேவன் பேரிலிருந்து அவனது விசுவாசம், தேவனுடைய வேலைக்கும் ஜனங்களுக்கும் அவன் கொண்டிருந்த அன்பு ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டதாகும்.
(எரே 18:23;வெளி 6:10)
தேவன் தம்முடைய எதிராளிகளை எதிர்க்கவும், அவருடைய வேலையை அழிக்கவும் தமது பிள்ளைகளுக்கு தீங்கு செய்யவும் முயற்சி செய்கிறவர்களின் இருதயங்களை திருப்பவும் ஜெபிப்பது எப்பொழுதுமே சரியானதே.
*நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்.*(வச 20)
தேவனுக்காக நாம் விசுவாசத்தோடும், தாழ்மையோடும் ஏற்கும் வேலையானது ஆவிக்குரிய ஆயுதங்களை பயன்படுத்தி
(2கொரி 10:4 இன்படி) தேவனுக்கு மகிமை உண்டாகும் படியும், அவருடைய இராஜ்ஜியத்தின் முன்னேற்றத்திற்காகவும் உண்மையாகச் செய்யப்படுமானால், எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், தேவன் நமக்காக யுத்தம் செய்வார் என்பது நிச்சயம்.
இன்றைக்கும் தேவனுடைய இராஜ்ஜியம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பையும், பரியாசத்தையும் , நமக்குள்ளே பயத்தையும் கொண்டு வருகிற
சன்பல்லாத்தை போன்ற மனிதர்கள், அல்லது அதிகாரிகள், அல்லது அரசியல் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால்
நம்முடைய ஜெபம் மற்றும் விசுவாசம், தேவனை குறித்த வைராக்கியம் நமக்கு சரியாக இருக்கும் என்றால் நாம் வெற்றி பெற முடியும்.
ஆகையால் தொடர்ந்து உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தினாலே பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி வெற்றியை சுதந்தரிப்போம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரர்
சிலுவை ராஜா
Comments