மனம் புதியதாக
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,
தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
(ரோம 12:2)
இந்த வசனத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் பல விஷயங்களை குறிப்பாக உணர்த்துகிறார்.
பவுல் அப்போஸ்தலன் மூலமாக...
1) தற்போதுள்ள உலக முறை தீயதாகவும் (அப் 2:40;கலா 1:4), சாத்தானின் ஆளுகைக்குள்ளும் உள்ளது.
(யோவா 12:31; 1யோவா 5:19) (ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த உலகத்தோடு எப்படிப்பட்ட தொடர்பு இருக்கிறது என்பதை விவரிக்கிறது.)
2) தற்போது நடைமுறையில் இருக்கும் பொது மக்கள் விரும்பும், இந்த உலக ஆவிக்கு விரோதமாக நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அதற்கு பதிலாக, கிறிஸ்துவுக்காக நித்திய கால சத்தியங்களையும், தேவனுடைய வார்த்தை நீதியின் தரத்தையும் பிரசித்தப்படுத்த வேண்டும்.
(1கொரி 1:17-24)
3) நாம் தீமையானவற்றை அருவருப்புடன் வெறுத்து, நன்மையானவற்றை விரும்ப வேண்டும்.
(ரோம 12:9; 1யோவா 2:15-17;எபி 1:9)
திருச்சபையை எப்போதும் சூழ்ந்திருக்கும் பேராசை, சுயநலம், மனுஷீக சிந்தனை, அரசியல் அதிகாரங்களை நாடுதல், பொறாமை, வெறுப்பு, பழிக்குப்பழி வாங்குதல், அசுத்தம், கெட்ட வார்த்தைகள், தேவனற்ற களியாட்டுகள், சரீர சிற்றின்பங்கள், அடக்கமில்லாமை, கற்பில்லாமை, போதை மருந்துகள், குடி, உலகப் பிரகாரமான கெட்ட நண்பர்கள், கணவன் மனைவியாக ஆபாச வீடியோக்களை பார்ப்பது, காமத்தை தூண்டும் மாத்திரைகள் எடுப்பது, கணவன் மனைவி துரோகங்கள், போன்ற அநேக விதமான உலக அசுத்தங்களுக்கு நம்மை விட்டுக் கொடுக்க மறுக்க வேண்டும்.
4) தேவனுடைய வசனங்களை வாசிப்பதன் மூலமும், தியானிப்பதின் மூலமும்
(சங் 119:11, 148; யோவா 8:31-32;
15:7;) நம் மனங்களை தேவனுக்குகந்த வகையில் சிந்திக்கும்படி செய்ய வேண்டும். (1 கொரி 2:16;பிலி 2:16) நம்முடைய திட்டங்கள், இலக்குகள், ஆசைகள் முதலியவை பரலோகத்துக்கடுத்த நித்தியமான சத்தியத்தால் தீர்மானிக்கப்பட வேண்டுமேல்லாமல், இந்த கெட்டு, அழிந்து போகும் நிலை இல்லாத நிகழ்காலத்துக் கொத்தாக இருக்கக் கூடாது.
ஆகையால் நாம் சிந்தித்து நம்முடைய மனதை புதிதாக்கி
மறுரூபமாவோம். கர்த்தர் நமை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments