யெரொபெயாம்
யெரொபெயாம்
சமஸ்த இஸ்ரவேலின் மேலும் இராஜாவாக்கப்பட்டார்.
(1இராஜா 12:20)
சாலொமோனின் மரணத்தின் போது எபிரேயரின் (இஸ்ரேல்) தேசம், இரண்டு தேசங்களாக பிரிந்தன.
1) இஸ்ரேல் என்று அழைக்கப்பட்ட வடதேசம் முதலில் யெரொபெயாமினால் ஆட்சி செய்யப்பட்டது.
யூதா என்று அழைக்கப்பட்ட தென் தேசம் முதலில் சாலொமோனின் மகனான ரெகொபெயாமினால் ஆளப்பட்டது. (1இராஜா 12:17).
கி.மு.722 இல் அசீரியர் வந்து 10 கோத்திரங்களையும் சிறை பிடிப்பது வரை இந்தப் பிரிவினை நீடித்தது.
தென் தேசமாகிய யூதா கி.மு.586 இல் பாபிலோனியர்களால் சிறை பிடிக்கப்பட்டது.
இந்த இரு தேசங்களின் வரலாறு,
1 இராஜா 12 முதல் 22 வரையுள்ள அதிகாரங்களிலும், 2 நாளா 10
முதல் 36 வரை உள்ள அதிகாரங்களிலும் எழுதப்பட்டுள்ளது.
2) இஸ்ரவேல் யூதா என்னும் இரு தேசங்களின் வரலாறு, அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையை மீறியதைக் காட்டுகிறது.
வட தேசத்திலுள்ள இராஜாக்கள் கர்த்தருடைய பார்வையில் பொல்லாப்பானதைச் செய்து வந்தார்கள் என்று பரிசுத்த வேதாகமம் சுட்டிக் காட்டுகிறது.
(உதாரணமாக 1 இராஜா 16:25,30;22:52; 2இராஜா 3:3;10:29)
யூதாவின் இராஜாக்களில் பெரும்பாலானவர்களும், தேவனுடைய உடன்படிக்கையை மீறியவர்களே.
யூதாவின் இராஜாக்களில் ஒரு சிலர் மட்டுமே, குறிப்பாக எசேக்கியா (2இரா 18:1-20:21)
யோசியா (2இரா 22:1-23:29) ஆகியோர் "கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்தார்கள்.(2இரா 18:3;22:2)
*இந்த காரியம் கர்த்தராலே நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார்.(1இரா 12:24)*
தேவனுடைய மக்களின் தேசத்தை இரண்டாகப் பிரித்தது தேவனுடைய செயல். தேசம் இரண்டாகச் செயல்படுவதை அவர் திட்டமிட்டார். ஏனெனில்
1) அவர்களுடைய விக்கிரகாராதனைக்கு தண்டனை.
2) யூதாவின் மூலமாக தேவனிடத்தில் விசுவாசம் உள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக (இரா 11:13)
இஸ்ரவேல் முழுவதும் தேவனை விட்டு விலகிச் சென்ற போதிலும், யூதாவில் சில தேவனுடைய மக்கள் தேவனிடத்திலும், அவருடைய உடன்படிக்கையிலும் உண்மை உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் மூலமாக தேவன் தமது வாக்குத்தத்தங்களையும், இரட்சிப்பின் திட்டத்தையும் நிறைவேற்றச் சித்தம் கொண்டார்.
*பொன்னினால் இரண்டு கன்று குட்டிகளை உண்டாக்கி
இவைகளே உங்கள் தெய்வங்கள்.* (1இரா 12:28)
வட தேசத்தின் இராஜாவாகிய
யெரொபெயாம் தங்கள் தெய்வங்களுக்கு விக்கிரகங்கள் செய்து அதன் மூலம் தன் மக்களை ஆராதனை செய்யச் சொல்லி,
ஒரு போலியான வழிபாட்டு முறையை ஆரம்பித்தான்.
(1இரா 12:27-30;யாத் 20:3-4;) ஆரோன் செய்தது போல பொன்னிலான கன்றுக்குட்டி செய்யப்பட்டது.(யாத் 32:8)
அவன் ஆசாரியர்களை நியமித்தான். அவர்கள் லேவியவர்களல்ல
(1இரா 12:31)
தேவனுடைய கட்டளைப்படி ஆசாரிய ஊழியத்துக்குத் தகுதியற்ற மனிதர்களை ஆசாரியர்களாக நியமித்தான்.
*யெரொபெயாம் பொய்யான வழிபாட்டு முறையை ஏற்படுத்தியதால் இரண்டு பலன்கள் ஏற்பட்டன.*
1) வட தேசத்திலிருந்து பெரும்பாலான மக்கள் பாகால் வழிபாட்டிலும், ஒழுக்க நெறி தவறிய, தேவர்களுக்குப் பிரியம் என்ற வழிபாட்டோடு சம்பந்தப்பட்ட வேசித்தனம் நிகழ்ச்சிகளிலும் பழகி விட்டனர்.
2) வட தேசத்திலிருந்து, தேவனை உண்மையாய் தொழுது வந்த விசுவாசிகள் தேவனுடைய கட்டளைப்படி அவரை உண்மையாய்த் தொழுது கொள்ளவும், அவருடைய உடன்படிக்கையை காத்து நடக்கவும், வட தேசத்தில் தங்களுக்கிருந்த ஆஸ்திகளையும், உடமைகளையும், விட்டு தென் தேசத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
(2நாளா 11:13,14).
*"இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை தேடுவதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள், தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும்படிக்கு, எருசலேமுக்கு வந்தார்கள்."*
(2நாளா 11:16;15:9).
*லேவியர்களல்லாத மனிதர்களை ஆசாரியர்களாக நியமித்தான்.*
யெரொபெயாம் ஆசாரிய பணிக்கென்று தேவனால் நியமிக்கப்பட்ட லேவியர்களைத் தேர்ந்தெடுக்காமல் தேவன் எதிர்பார்க்கும் தகுதியில்லாத
வேறு மனிதர்களை ஆசாரியர்களாக நியமித்தான்.
(எண் 3:6-9; 8:5-20).
புது உடன்படிக்கையின் படி லேவியரின் ஆசாரியத்துவம்
இப்போது இல்லை. ஆனால் *திருச்சபையில் போதகராகவோ, அல்லது தலைவர்களாகவோ இருப்பதற்கு மனிதர்களிடம் நிச்சயமாக காணப்பட வேண்டிய முக்கிய தகுதிகள் பரிசுத்த வேதாகமத்தில் தரப்பட்டுள்ளன.*
இந்த ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க நெறிச் சட்டங்கள்
(1தீமோ 3:1-7; தீத்து 1:5-9) வசனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதில் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால்
அன்றும், இன்றும்
யெரொபெயம் போன்ற ஊழியர்கள் உண்டு.
இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறாத சினிமா துறையில் உள்ளவர்களை ஊழியத்தில் பயன்படுத்துவது.
இரட்சிப்பின் அனுபவத்தை பெறாத சினிமா நடிகர் நடிகைகளை கொண்டு வந்து கிறிஸ்துவ சீரியல் எடுப்பது வேதத்தின் படி தவறு.
இரட்சிப்பின் அனுபவத்தை பெறாதவர்கள் தேவனுக்கு வாழ முடியாது என்பதை தெரிந்தும் அவர்களுக்கு சாட்சி சொல்ல வைப்பது தவறு.
ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கலாம்.
சிஎஸ்ஐ ஐயராக இருக்கலாம்.
லூத்ரன், மற்றும் ஈ சி ஐ அல்லது பெந்தகோஸ்தே மற்றும் இண்டிபெண்டன்ஸ் சர்ச் எதுவாக இருக்கலாம்
ஆனால் அவர்களுடைய ஊழிய தகுதி முதலாவது இரட்சிப்பின் அனுபவத்தையும், பாவமன்னிப்பு நிச்சயத்தையும், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலையும், தேவன் மீது பரிபூரணமான விசுவாசத்தையும், அறிக்கை செய்ய கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இதை சபை கண்டுபிடிக்க தவறியதால் இன்றைக்கு ஒட்டுமொத்த சபைகளுக்கும்
யெரொபெயாம் போன்றோர் நுழைந்து விக்கிரக ஆராதனை மற்றும் அந்நிய பண்டிகைகளையும் பயன்படுத்துகின்றனர்.
எனவே தேவனுடைய சபை விழிப்புணர்வுடைய வேண்டும்.
கர்த்தர் உங்களுக்கு தெளிந்த புத்தியை தருவாராக. ஆமென்.
Comments