ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கும் அதிநவீனதொழில்நுட்ப ஊடகங்கள்.
இன்றைய அதிநவீன தொழில்நுட்பம் AI அல்லது ஊடகங்கள் நேரடியாகப் பாவமல்ல என்றாலும், அவை ஆவிக்குரிய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைப் பின்வரும் சில குறிப்புகள் விளக்குகின்றன: நேரத்தை வீணடித்தல் (Time Management): ஊடகங்களில் மூழ்கி இருப்பது தேவனோடு செலவிடும் நேரத்தைத் திருடுகிறது. "நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்" என (எபேசியர் 5:16) எச்சரிக்கிறது. தேவையற்ற வலைதளங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தடையாகும். கண்களின் இச்சை (Lust of the Eyes): இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் அசுத்தமான காட்சிகள் ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். "கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது" (மத்தேயு 6:22) என்று இயேசு கூறினார். தவறான காரியங்களைப் பார்ப்பது உள்ளத்து இருளை அதிகப்படுத்தும். உலகிற்கு ஒத்த வேஷம் (Worldly Conformity): சமூக ஊடகங்களின் கலாச்சாரம் நம்மை உலகப்போக்கிற்கு மாற்ற முயல்கிறது. "நீங்கள் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்..." (ரோமர் 12:2) என்கிற வசனத்திற்கு மாறாக, மீடியாக்கள் உலகப் பெருமையையும...