Posts

Showing posts with the label தேவகோபம்

தேவகோபம்

Image
  தேவகோபம்.  தேவ கோபமானது (ரோமர் 1:19, கிரே. ஆர்கே) அவருடைய நீதியையும், அன்பையும் வெளிப்படுத்துவதாகும்.  அது தேவனுடைய சொந்த கோபமாகவும், எல்லாப் பாவத்துக்கும் விரோதமாக வரக்கூடிய மாறாத பிரதிக்கிரியையாகவும் உள்ளது. (எசே 7:8-9; எபே 5:6; வெளி 19:15). அது தனிப்பட்ட மக்களின்  (யாத் 4:14; எண் 12:1-9; 2 சாமு 6:6-7)  தேசத்தின்  (ஏசா 10:5; 13:3; எரே 50:13; எசே 30:15), துன்மார்க்க நடத்தையினாலும், தேவனுடைய மக்களின் உண்மையற்ற  தன்மையினாலும் தூண்டப்படுகிறது. (எண் 25:3; 32:10-13; உபா 29:24-28). 1) கடந்த காலங்களில் பாவத்தின் மேல் தேவனுக்கிருந்த கோபமும், வெறுப்பும், வெள்ளத்தின் மூலமும், (ஆதி 6-8) பஞ்சம், கொள்ளை நோய் மூலமும்  (எசே 6:11) அழிவின் மூலமும்  (உபா 29:22-23), சிதறடிக்கப்படுவ தன் மூலமும் (புல 4:16), நாடு சுட்டெரிக்கப்படுவதன் மூலமும் (ஏசா 9:18-19) வெளிப்படுத்தப்பட்டது 2) தற்போது தேவனுடைய கோபம், துன்மார்க்கரை அவர் அசுத்தத்திற்கும், இழிவான இச்சைகளுக்கும்   ஒப்புக் கொடுப்பதின் மூலமும், தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு அழிவு...