தேவகோபம்
தேவ கோபமானது (ரோமர் 1:19,
கிரே. ஆர்கே) அவருடைய நீதியையும், அன்பையும் வெளிப்படுத்துவதாகும். அது தேவனுடைய சொந்த கோபமாகவும், எல்லாப் பாவத்துக்கும் விரோதமாக வரக்கூடிய மாறாத பிரதிக்கிரியையாகவும் உள்ளது. (எசே 7:8-9; எபே 5:6; வெளி 19:15). அது தனிப்பட்ட மக்களின்
(யாத் 4:14; எண் 12:1-9; 2 சாமு 6:6-7)
தேசத்தின்
(ஏசா 10:5; 13:3; எரே 50:13; எசே 30:15), துன்மார்க்க நடத்தையினாலும், தேவனுடைய மக்களின் உண்மையற்ற
தன்மையினாலும் தூண்டப்படுகிறது. (எண் 25:3; 32:10-13; உபா 29:24-28).
1) கடந்த காலங்களில் பாவத்தின் மேல் தேவனுக்கிருந்த கோபமும், வெறுப்பும், வெள்ளத்தின் மூலமும், (ஆதி 6-8) பஞ்சம், கொள்ளை நோய் மூலமும்
(எசே 6:11) அழிவின் மூலமும்
(உபா 29:22-23), சிதறடிக்கப்படுவ தன் மூலமும் (புல 4:16), நாடு சுட்டெரிக்கப்படுவதன் மூலமும் (ஏசா 9:18-19) வெளிப்படுத்தப்பட்டது
2) தற்போது தேவனுடைய கோபம், துன்மார்க்கரை அவர் அசுத்தத்திற்கும், இழிவான இச்சைகளுக்கும்
ஒப்புக் கொடுப்பதின் மூலமும், தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு அழிவும், மரணமும் உண்டாவதின் மூலமும் காணப்படுகிறது. (ரோமர் 1:18-3:20; 6:23; எசே 18:4; எபே 2:3).
3) வருங்காலத்தில் தேவனுடைய கோபமானது
இந்த உலகத்தில் தேவ பயமில்லாதவர்களுக்கு மிகுந்த உபத்திரவத்தைக் கொண்டு வருகிறதாக வும் (மத். 24:;21; வெளி 5-19) எல்லா மனிதருக்கும், தேசங்களுக்கும் நியாயத் தீர்ப்பின் ஒரு நாளாகவும் இருக்கும். (எசே 7:19; தானி 8:19) “அது அழிவும், பாழ்க்கடிப்புமான நாள், அது இருளும் அந்தகாரமுமான நாள்" (செப் 1:15) அது நீதியுள்ள தீர்ப்பு. துன்மார்க்கருக்கு அளிக்கப்படும் நாள். (மத் 2:5; லூக் 3:17; எபே 5:6; கொலே 3:6; வெளி 11:18; 14:8-10; 19:15) முடிவாக, அது மனந்திரும்பாத மக்களுக்கு நித்திய தண்டனையைக் கொண்டுவரும்.
4) தேவனுடைய கோபமானது மனுஷருக்குக் கடைசித் தீர்ப்பாக முடிந்து விடுவதில்லை. ஏனென்றால் அவருடைய கோபத்துக்குத் தப்பிக் கொள்ள அல்லது ஆதியிலிருந்து காப்பாற்றப்பட அவர் ஒரு வழியைக் கொடுத்திருக்கிறார். ஒருவர் தம் பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டு, இயேசுவை விசுவாசித்து அவரிடம் திரும்புவதே அந்த வழி. (ரோம 5:8; யோவா 3:36; 1 தெச 1:10; 5:9;).
5) கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட விசுவாசிகள் பழிதீர்க்கும் எண் ணத்தோடல்லாமல், மெய்யாக நீதி மேலுள்ள அன்பினாலும், தீமையை வெறுப்பதினாலும் பாவத்துக்கு விரோதமாகப் போராடும் தேவனுடைய கோபத்தில் பங்கெடுக்க வேண்டும். புதிய ஏற்பாடு, தேவன் எதை வெறுக்கிறாரோ, அதை வெறுக்கும் பரிசுத்த கோபத்தை, எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவிடமேயே காணப்பட்ட அந்த கோபத்தை (மாற் 3:5; யோவா 2:12-17; எபி 1:9;) பவுலிடமிருந்ததை (அப் 17:16),
நீதியுள்ள மனுஷரிடமிருந்த கோபத்தை அங்கீகரிக்கிறது.
என்பதை தேவப் பிள்ளைகள் உணர்ந்து புரிந்து நடந்து கொள்ள வேண்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
9841711591.
Comments