கர்த்தருக்குள் மரித்தவர்கள்
கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியர்களாக வாழ்ந்து மரிக்கிறவர்களுக்குக் கிடைக்கும் மேன்மையான பாக்கியங்களை வேதாகம வசனங்களின் அடிப்படையில் காணலாம்: 1). நித்திய இளைப்பாறுதல்: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டு நீங்கி இளைப்பாறுவார்கள். வசனம்: "கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தங்கள் பிரயாசங்களுக்கு நீங்கி இளைப்பாறுவார்கள்..." (வெளிப் 14:13). 2). ஜீவகிரீடம்: மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் ஜீவகிரீடத்தைத் தருவார். வசனம்: "...நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்" (வெளிப் 2:10). 3). நீதியின் கிரீடம்: ஊழியத்தை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு நீதிபரராகிய கர்த்தர் நீதியின் கிரீடத்தை ஆயத்தம் செய்துள்ளார். வசனம்: "இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளில் அதை எனக்குத் தந்தருளுவார்" ( 2 தீமோத் 4:8). 4). மகிமையுள்ள கிரீடம்: மந்தையை உண்மையாக மேய்க்கும் ஊழியர்களுக்கு வாடாத மகிமையுள்ள கிரீடம் கிடைக்கும். வசனம்: ...