நீங்கள் தேவர்களா ?
" நீங்கள் தேவர்கள் என்று நான் சொல்லியிருந்தேன். (சங் 82:6)" “தேவர்கள்” (எபிரெய மொழியீல் 'ஏலோகிம்) என்னும் சொல் அநேகமாக, இஸ்ரவேலில் நீதி செலுத்துபவராகவும், பலவீனரின் காவலரா கவும், ஒடுக்குகிறவர்களிடமிருந்து அவர்களை விடுவிக்க உதவியவர்களாகிய, தேவனுடைய பிரதிநிதிகள் என்று நியமிக்கப்பட்டிருந்த மனித அதிகாரிகளையும், நீதிபதிகளையும் குறிப்பிடலாம். இந்த சொல்லானது சாதாரண மனிதரெல்லாம் ஆற்றலுள்ள தேவர்கள் என்ற அர்த்தமுடையது அல்ல, ஆனால் வல்லமையும், நியாயம் செய்யவும், நீதியை நடப்பிக்கவும் அதிகாரமுள்ள தேவனுடைய பிரதிநிதிகளாக மாத்திரமே ஆக முடியும் என்று பொருள்படும். (யோவா 10:34 இல்). நீங்கள் தேவர்களாயிருக்கிறீர்கள்? இயேசு இவ்வாறு கூறியது எந்த வழியிலும் விசுவாசிகள் தங்களைத் தேவர்கள் என்று கருத வேண்டுமென்பதற்காக அல்ல. மாறாக தங்களைத் தேவர்கள் என்று சொல்கிறவர்கள் தேவனுடைய ஆக்கினையை அடைவார்கள். (எரே 10:11). 1) “நீங்கள் தேவர்களாயிருக்கிறீர்கள்" என்பது துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணி திக்கற்ற பிள்ளைகளிடம் கொடூரமாக நடந்த (சங் 82:1-4) பொல்லாத இஸ்ரவேல் அதிகாரிகளைப் பற்...