சாத்தான் இயேசுவை சோதித்தது போல இன்றைய ஊழியர்களை...
இயேசு கிறிஸ்துவை வனாந்தரத்தில் சோதித்தது போலவே, இன்றும் ஊழியர்களை வீழ்த்த சாத்தான் பல்வேறு ஆசைகளைக் காட்டுகிறான். ஊழியர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள். பொருளாசை (பணம்): உலக ரீதியான செல்வத்தின் மேல் ஆசையைத் தூண்டி, ஊழியத்தை ஒரு வியாபாரமாக மாற்ற முயல்கிறான். (1 தீமோத் 6:10). புகழ் மற்றும் பெருமை: தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவும், மற்றவர்கள் தன்னைப் புகழ வேண்டும் என்ற ஆசையையும் காட்டுகிறான் (ஜீவனத்தின் பெருமை). (1 யோவான் 2:16). அதிகார துஷ்பிரயோகம்: ஊழியப் பொறுப்பைப் பயன்படுத்தி மற்றவர்களை ஆளவும், தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தவும் தூண்டுகிறான். (மத்தேயு 20:25-28). உடல் இச்சை (விபச்சாரம்): ஊழியர்களைத் தார்மீக ரீதியாக வீழ்த்த பாலியல் ரீதியான சோதனைகளைக் கொண்டு வருகிறான். (1 கொரி 10:8; நீதி 6:26). பிரபலம் அடைதல் (Popularity): சத்தியத்தைவிட ஜனங்கள் எதை விரும்புகிறார்களோ அதைப் பிரசங்கித்து, கூட்டத்தைச் சேர்க்கும் ஆசையைத் தருகிறான். (2 தீமோ 4:3-4). சுயமகிமை தேடுதல்: தேவனுக்குச் சேர வேண்டிய ...