கண்காணிகளும் அவர்களுடைய கடமைகளும்.
கண்காணிகளும், அவர்களுடைய கடமைகளும் அப் 20:28 "ஆகையால் உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுய ரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.. பதவிகள் அளிக்கப்பட்ட தலைவர்கள் இல்லாமல் எந்தத் திருச்சபையும் இயங்க முடியாது. எனவே அப் 14:23 ஆனது, கூறுகிறபடி ஆவியினால் நிறைந்த விசுவாசிகள் ஜெபத்துடனும், உபவாசத்துடனும் தேவனுடைய சித்தத்தை அறிந்து பரிசுத்த ஆவியானவர் (1 தீமோ 3:1-7; தீத் 1:5-9) வசனங்களில் குறிப்பிட்டுள்ள ஆவிக்குரிய கண்காணிகளின் தகுதிகளின்படி, குறிப்பிட்ட சிலரை மூப்பராகவோ, கண்காணிகளாகவோ நியமித்தார்கள். எனவே இறுதியாக ஒரு திருச்சபைக்கு கண்காணியை நியமிப்பது ஆவியானவரே என்று அறிகிறோம். எபேசு சபையில் உள்ள மூப்பர்களுக்குப் பவுல் கொடுத்த கடைசிப் பிரசங்கத்தில் (அப் 20:18-35) உலகின் எழுத் திருச்சபையில் கண்காணிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குரிய வேதாகமம் சார்ந்த கொள்கைகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. அவர்களுடைய பணி பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் பணியைப் போன்றது. ...