கண்காணிகளும் அவர்களுடைய கடமைகளும்.
கண்காணிகளும், அவர்களுடைய கடமைகளும்
அப் 20:28 "ஆகையால் உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுய ரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்..
பதவிகள் அளிக்கப்பட்ட தலைவர்கள் இல்லாமல் எந்தத் திருச்சபையும் இயங்க முடியாது. எனவே அப் 14:23 ஆனது, கூறுகிறபடி ஆவியினால் நிறைந்த விசுவாசிகள் ஜெபத்துடனும், உபவாசத்துடனும் தேவனுடைய சித்தத்தை அறிந்து பரிசுத்த ஆவியானவர் (1 தீமோ 3:1-7; தீத் 1:5-9) வசனங்களில் குறிப்பிட்டுள்ள ஆவிக்குரிய கண்காணிகளின் தகுதிகளின்படி, குறிப்பிட்ட சிலரை மூப்பராகவோ, கண்காணிகளாகவோ நியமித்தார்கள். எனவே இறுதியாக ஒரு திருச்சபைக்கு கண்காணியை நியமிப்பது ஆவியானவரே என்று அறிகிறோம். எபேசு சபையில் உள்ள மூப்பர்களுக்குப் பவுல் கொடுத்த கடைசிப் பிரசங்கத்தில்
(அப் 20:18-35) உலகின் எழுத் திருச்சபையில் கண்காணிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குரிய வேதாகமம் சார்ந்த கொள்கைகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. அவர்களுடைய பணி பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் பணியைப் போன்றது.
விசுவாசத்தை வலுப்படச் செய்தல்: 1)கண்காணிகளின் முக்கியமான கடமைகளில் ஒன்று தமது மந்தையைச் சேர்ந்த ஆடுகளுக்கு தேவனுடைய
வார்த்தையைப் போதித்துப் போஷிப்பதாகும். தேவன் தம்முடைய குமாரனின் இரத்தத்தினால் கிரயமாகக் கொள்ளப்பட்ட மக்களே, தங்கள் மேய்ப்புக்கு உள்ளடங்கிய ஆடுகள் என்பதைக் கண்காணிகள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். (அப் 20:28; 1 கொரி 6:20; 1 பேது 1:19; 2:9; வெளி 5:9); 2) அப் 20:19-27 வசனங்களில் பவுல் தான் எப்படி எபேசு சபையில் ஒரு மேய்ப்பனாகப் பணியாற்றினான் என்பதை விவரிக்கிறான். அவர் தேவனுடைய முழுச் சித்தத்தையும் எபேசு கிறிஸ்தவர்களுக்கு உண்மையுடன் போதித்தும், எச்சரித்தும் வந்ததாக அறிவிக்கிறான்.
(அப் 20:27) அதன் பலனாக அவரால் இப்படிக் கூற முடிந்தது. "எல்லாருடைய இரத்தப் பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன் " (அப் 20:27இன் குறிப்புப் பார்க்கவும்.) இவ்விதமாகக் கண்காணிகள் தேவனுடைய சித்தத்தை முழுமையாகத் தங்கள் திருச்சபைக்கு அறிவிக்க வேண்டும். "ஜாக்கிரதையாய்த் திருசவனத்தைப் பிரசங்கம் பண்ணு, எல்லா நீடிய சாந்தத்தோடும், உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்தி சொல்லு'' (2 தீமோ 4:2) ஆனால், ஜனங்களைப் பிரியப்படுத்தவும். அவர்கள் கேட்க விரும்புகிற காரியங்களை மாத்திரம் பேசுகிற போதகர்களாக இருக்கக்கூடாது.
(2 தீமோ 4:3).
விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுதல்: உண்மையான நல்ல போதகர் தமது ஆடுகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பார். பவுல் திருச்சபையின் எதிர்காலத்தில் திருச்சபைக்குள்ளிருந்தே சாத்தானின் கள்னப் போதகர்களை எழும்பப்பண்ணுவார் என்றும் மேலும் வேதாகமத்துக்கு விரோதமான கொள்கைகளையும், உலகக்கருத்துக்களையும், விக்கிரகாராதனைக்காரர்களின் கொள்கைகளையும், மனிதனுடைய போதனைகளையும் போதித்து தேவனுடைய மக்களாகிய கிறிஸ்தவ விசுவாசிகளிடையே இருக்கும் வேதாகம உண்மைகளைக் கலைக்கக்கூடிய போதனைகளைக் கொடுக்கும் கள்ளப்போதகர்கள் வெளியிலிருந்து திருச்சபைக்குள் புகுந்து, தவறான கருத்துக்களைப் புகுத்தி மக்களைக் குழப்பும்படி சாத்தான் அனுப்புவாள் என்றும் அறிந்திருந்தார்.
பவுல் அப்படிப்பட்டவர்களைக் "கொடிதான ஓநாய்கள்" என்று அழைக்கிறான். ஏனெனில் அவர்கள் பலமுள்ளவர்களும், ஆபத்தானவர்களுமாயிருப்பார்கள். (அப் 20:29இன் குறிப்பு: மத் 10:16) அப்படிப்பட்ட மனிதர்கள், கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து மக்களை விலக்கி இழுத்துச் சென்று, தங்களுடைய மாறுபாடான கொள்கைக்குக் கொண்டு செல்வார்கள். புதிய ஏற்பாட்டின் அடிப்படை வெளிப்பாடான விசுவாசத்தைக் குலைக்கக்கூடிய தவறான கொள்கைகளைப் போதிக்கும் அனைவரையும் வரவிடாமல் தடுத்துத் திருச்சபையைப் பாதுகாக்கும்படி எல்லாத் திருச்சபைத் தலைவர்களுக்கும் பவுல் ஒரு அவசர வேண்டுகோள் விடுக்கிறான்
(அப் 20.25-31).
1) கிறிஸ்துவின் கிருபையினாலும், பரிசுத்த ஆவியின் (ஐக்கிய) கூட்டுறவினாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய வார்த்தைக்கும் உண்மையாயிருப்பவர்களின் கூட்டமே ஒரு உண்மையான திருச்சபையாகும். தேவனுடைய வார்த்தைக்கும், அப்போஸ்தலர்களுடைய சாட்சிக்கும் முரணான காரியங்களைப் போதித்து, திருச்சபையின் மக்களின் விசுவாசத்தைக் கலைத்துச் சத்தியத்தைப் பாட்டும் (அப் 20:30) அனைவரையும் அன்புடன் கண்டனம் பண்ணி, (எபே 4:15); திடமாகக் கடிந்து கொண்டு (2 தீமோ 4:1-4; தீத் 19-11) விலக்குவதே தேவனுடைய திருச்சபையைப் பாதுகாப்பதில் சபைத் தலைவர்களின் முக்கிய பணியாகும்.
2) திருச்சபைத் தலைவர்களும், போதகர்களும், நிர்வாக அதிகாரிகளும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தங்களைத் தங்கள் பராமரிப்பில் உள்ள எல்லா மக்களின் வாழ்க்கைக்கும் பொறுப்பாளிகளாக வைத்துள்ளார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். (அப் 20:26,27; எசே 3:20,21). திருச்சபைத் தலைவர்கள், தேவனுடைய முழுத் திட்டத்தையும், சித்தத்தையும் முழுமையாகப் போதிக்காமலும்
(அப் 20:26) மந்தையை விழிப்புடன் காத்துக் கொள்ளாமலும் (20:28) இருந்தால் அவர்கள் எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கலாகியிருக்க மாட்டார்கள். (20:27இன் க, எசே 34:1-10ஐயும் பார்க்கவும்.). மாறாக திருச்சபை மக்களின் விசுவாசத்தைக் குலைக்கும்படி தவறான போதனைகளைத் தரும் கொடிதான ஓநாய்களிடமிருந்து மக்களைக் காக்காத சபைத் தலைவர்களை அவர்களுடைய இரத்தப்பழிக்குக் காரணமான குற்றவாளிகள் என்று தேவன் அறிக்கையிடுவார்.
(2 தீமோ 1:14இன் குறிப்பு: வெளி 2:2இன் குறிப்பு.
3) திருச்சபையின் இறையியல், உபதேசம், ஒழுக்கநெறி சம்பந்தமான காரியங்களுக்குப் பொறுப்பானவர்கள் மேல் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமாகும். வாழ்க்கையிலும், கொள்கையிலும் பரிசுத்தம், வேத போதனைகளைக் கற்றுக் கொடுப்பதில் தவறின்மை ஆகியவை கல்லூரிகளிலும், வேதாகமப்பள்ளிகளிலும், இறையியல் கல்லூரிகளிலும், நூல்களை வெளியிடும் ஸ்தாபனங்களிலும், திருச்சபையின் எல்லா நிர்வாக அமைப்புகளிலும் விழிப்புடன் கவனிக்கப்பட வேண்டும்.
(2 தீமோ 1:13-14).
4) பவுல் "கிருபையின் வசனம் " என்று (அப் 20:32) குறிப்பிடும் தேவ ஆவியால் தூண்டுதல் பெற்று எழுதப்பட்ட வேதாகமத்தின் மீது ஒருவனுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதே முக்கியம், கள்ளப் போதகர்களும், சபைப் போதகர்களும், தலைவர்களும் வேதாகமத்தின் அதிகாரத்தைப் பவீனப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்கள் தங்கள் வேதாகமத்துக்கு மாறான கொள்கைகளாலும், தவறான போதனைகளாலும் வேதாகமக் கொள்கைகளைப் புரட்டுவார்கள். வேதாகமம் உண்மையானது. அதிகாரமுள்ளது என்பதை அவர்கள் மறுப்பார்கள். வேதாகமம் போதிக்கும் அனைத்தும் நம்பத்தக்கது என்பதை மறுப்பார்கள். (அப் 20:23-31; சுலா 1:6இன் குறிப்பு: 1 தீமோ 4:1 2 தீமோ 3:8) திருச்சபையின் நன்மைக்காக இந்த மக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, சபையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
(2 யோவா 9-11 கலா 1:9இன் குறிப்பு).
5) திருச்சபையின் பரிசுத்தத்தைக் குறித்துப் பரிசுத்த ஆவி கொண்டுள்ள மிகுந்த கரிசனையை உணராமலும்,
(அப் 20:18-35) சத்தியத்தை நிலநாட்ட உறுதியான நிலைகொள்ள மறுத்துக் கொண்டு தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தைக் குலைப்பவர்களைக் கண்டிக்காமலும் இருக்கும் திருச்சபை புதிய ஏற்பாட்டு திருச்சபையாக இருக்கும் தகுதியை இழந்துவிடுகிறது. புதிய ஏற்பாட்டின் நோக்கம், வல்லமை, ஜீவன் இவற்றிலிருந்து மீண்டும், மீண்டும் வழுவிப் போய் கிறிஸ்து, அப்போஸ் தலர் ஆகியோரின் மூல வெளிப்பாடுகளிலிருந்து விசுவாச மறுதலிப்பு செய்ததாக இச்சபை குற்றஞ்சாட்டப்படும்.
எனவே எச்சரிக்கையாக இருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா. WhatsApp 9841 711 591.
Comments