திருச்சபையின் ஊழியங்களுக்கான ஆவிக்குரிய வரங்கள்.
திருச்சபையின் ஊழியங்களுக்கான ஆவிக்குரிய வரங்கள்:
எபே 4:13 “அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் கவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.”
கொடுக்கிறவர்: எபேசியர் 4:13 ஆம் வசனம் ஆவிக்குரிய வாங்களைப் பட்டியலிடுகிறது. (அதாவது வரம்பெற்ற ஆவிக்குரிய தலைவர்கள்) கிறிஸ்து இந்த வரங்களைத் திருச்சபைக்கென்று அளித்தார். கிறிஸ்து ஏன் இவற்றைக் கொடுத்தார் என்பதற்குப் பவுல் கூறும் காரணங்கள்:
1) தேவனுடைய மக்களை தேவனுடைய ஊழியத்துக்கென்று ஆயத்தப்படுத்த (4:12)
2) கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையின் தேல்னுடைய சித்தத்தின்படியான ஆவிக்குரிய வளர்ச்சிக்காக (4:13-16);
அப்போஸ்தலர்கள்: சில புதிய ஏற்பாட்டு தலைவர்களுக்கு "அப்போஸ்தலர்' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 'அப்போஸ்டெல்லோ' என்னும் வினைச் சொல்லுக்கு, "அனுப்புகிறவருடைய தனிப்பிரதிநிதியாகவும், தூதுவராகவும், ஒரு சிறப்புப் பணிக்காக அனுப்பப்படுகிறவர்" என்று பொருள் உண்டு. இந்தப் பட்டம் கிறிஸ்துவுக்கும்
(எபி 3:1)
12 சீஷர்களுக்கும், (10:2) பவலுக்கும் (ரோம 11, 2 கொரி1:1, கலா 1:1) மற்றவர்களுக்கும்
(அப் 14:4,14; ரோம 16:7; கலா 1:19, 2:8,9; 1தெச 2:6,7) பொருந்தும்.
1) 'அப்போஸ்தலர்" என்ற பெயர் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவ நற்செய்திப் பணியாளர்களுக்கும், ஒரு திருச்சபையின் சிறப்புப் பணிக்கென்று நியமிக்கப்பட்டவர்களுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. எனவே புதிய ஏற்பாட்டில் நற்செய்திப் பணிக்கென்று அனுப்பப்பட்ட செய்தியாளருக்கும் 'அப்போஸ்தலர்' என்ற பெயர் வழங்கப்பட்டது. (அப் 14:4,14, ரோம 16:7; 2 கொரி 8:23; பிலி 2:25) அவர்கள் சிறப்பான ஆவிக்குரிய தலைவர்களாயிருந்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியவர்களாயிருந்தனர். அவர்கள் வல்லமையால் அபிஷேகிக்கப்பட்டவர்களாகவும், அந்தகார சக்திகளை எதிர்க்கத் திறன் படைத்தவர்களாகவும், தங்கள் நற்செய்தியை அற்புதங்கள் மூலம் உறுதி செய்கிறவர்களாகவும், அப்போஸ்தலர்களின் உண்மை, பரிசுத்தம் இவற்றுடன் திருச்சபைகளை உருவாக்கத் தங்களை அர்ப்பணித்தவர்களுமாய் இருந்தார்கள். ஊர் ஊராகப் போகும் இந்த ஊழியர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்துக்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்யவும், நற்செய்தியை எங்கும் அறிவிக்கவும் தங்களைத் தத்தம் செய்தவர்களாயும் இருந்தார்கள். (அப் 11:21-26; 13:50; 14:19-22; 15:25,26) இவர்கள் ஆவியினால் நிறைந்தவர்கள். விசுவாசம் உள்ளவர்கள். எப்போதும் ஜெபம் பண்ணுகிறவர்கள். (அப் 11:23-25; 13:2-5,46-52; 14:1-7,21-23)
2) இந்தப் பொதுவான கருத்தின்படி அப்போஸ்தலர்கள் திருச்சபையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற அவசியமான ஊழியர்களாய் இருந்தார்கள். இப்படி ஆவியில் நிறைந்த மனிதர்களைத் திருச்சபையானது அனுப்புவதை நிறுத்திவிட்டால், உலகெங்கிலும், எல்லாத் தேசங்களிலும் நற்செய்தியை அறிவிப்பது தடைப்பட்டு விடும். அதே வேளையில் திருச்சபைகள் இத்தகைய மனிதர்களை உருவாக்கி, நற்செய்திப் பணிக்கென்று எல்லா திசைகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தால், அது நற்செய்திப்பணியை நிறைவேற்றும். ஆண்டவருடைய மாபெரும் கடைசிக் கட்டளைக்கு உண்மையுள்ளதாயிருக்கும். (மத் 28:18-20).
3) 'அப்போஸ்தலர்" என்ற பெயர், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் அவரைக் கண்டவர்கள், உயிர்த்தெழுந்த ஆண்டவரால் உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவும், திருச்சபைகளை அமைக்கவும் தனியாக நியமிக்கப்பட்டவர்களைக் குறிக்கும். (12 சீஷர்களும், பவுலும்) அவர்கள் திருச்சபையில் ஒரு தனி அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். அது ஒரு தெய்வீக வெளிப்பாடு, கிறிஸ்துவின் நற்செய்தி; கண்டதும், கேட்டதும் என்று முதல் செய்தியாக அவர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. அது இன்று வேறு எவரிடமும் இருக்க முடியாது. (எபே 2:20 குறிப்பு:
இவ்விதமாக இந்த அப்போஸ்தலர் பதவி தனிச்சிறப்புப் பெற்றது. அது மீண்டும் எவராலும் வகிக்கப்பட முடியாதது. ஆதி அப்போஸ்தலர்களுக்கு வாரிசுகள் இருக்க முடியாது
(1 கொரி 15:8 ).
4) புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களின் முக்கிய வேலை திருச்சபைகளை ஸ்தாபித்து அவைகள் புதிய ஏற்பாட்டு விசுவாசத்தின் அடிப்படையிலும், கிறிஸ்துவின் மீது உண்மையான விசுவாசத்திலும் அஸ்திபாரம் கொண்டிருக்கிறதா என்பதை நிச்சயித்துக் கொள்வதாகும். (யோவா 21:15-17; 1 கொரி 12:28; 2 கொரி 11:2,3; எபே 4:11-13; பிலி 1:17) இந்தப் பணியில் இரண்டு முக்கிய பாரங்கள் இருந்தன.
1) திருச்சபையானது இந்தப் பாவ உலகைவிட்டுப் பிரிந்து நிற்க வேண்டும் எனவும், திருச்சபையில் பரிசுத்தம் நிலவ வேண்டும் எனவும், தேவனால் அருளப்பட்ட முக்கியமான ஒரு ஆசை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கிரியை செய்ய வேண்டும். (1கொரி 5:1-5; 2 கொரி 6:14-18; யாக் 2:14-26; 1 பேது 2:1t 4:1-5; 1 யோவா 2:115-17; 3:3-10)
2) புதிய ஏற்பாட்டு நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்னும் ஆசை தொடரவேண்டும். இந்த நற்செய்தி கள்ளப் போதகர்களின் தவறான போதனைகள், திரிபுக் கொள்கைகள் இவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
(ரோம 16:17; 1கொரி 11:2; 2 கொரி 11:3,4,14 குறிப்புகள்: கலா 19 குறிப்பு: 2 பேது 2:1-3; 1 யோவா 4:1-6; 2 யோவா 7-11: யூதா 3,4,12,13);
5) ஆதி திருச்சபைகளுக்கு அஸ்திபாரமிட்ட அப்போஸ்தலர்களுக்குப் பின் வாரிசுகள் இல்லாவிட்டாலும், இன்றைய திருச்சபையானது அவர்களுடைய வார்த்தைகள், நற்செய்தி, விசுவாசம் ஆகியவற்றையே சார்ந்துள்ளது. திருச்சபையானது அப்போஸ்தலர்கள் எழுதிய நற்செய்திகளுக்கு உண்மையுள்ளதாய் இருக்க வேண்டும். ஆவியினால் தூண்டுதல் பெற்று எழுதப்பட்ட அப்போஸ்தலர்களின் நற்செய்திகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால், திருச்சபையானது, வேதாகமத்தின் அடிப்படையிலான திருச்சபையாக இராமல் தமது ஆண்டவரையே புறக்கணிப்பதாக இருக்கும். (யோவா 16:13-15; 1கொரி 14:36-38; கலா 19-11) அதே வேளையில் அப்போஸ்தலர்களின் நற்செய்தியை விசுவாசித்து, அதற்குக் கீழ்ப்படிந்து, அதைப் பாதுகாத்து, எவ்வித திரிபுக் கொள்கையாலும் அது பாதிக்கப்படாமல் காத்துக் கொள்வோமானால், நாம் பரிசுத்த ஆவிக்கு உண்மை உள்ளவர்களாயிருப்போம். (அட் 20:28, 2 தீமோ 1:14) இதன் மூலம் திருச்சபையில் தேவனுடைய பிரசன்னம் எப்போதும் தங்கவும், அவருடைய ஆசீர்வாதம் நிறைவாகக் கிடைக்கவும். ஆண்டவரின் பரிசுத்த வாழ்க்கை தொடரவும் வழி ஏற்படும்.
(எபே 2:20).
தீர்க்கதரிசிகள்: தேவனுடைய நாமத்தில், பரிசுத்த ஆவியின் தூண்டுதலை நேரடியாய் பெற்றுப் பேசிய விசுவாசிகள் தீர்க்கதரிசிகள் எனப்பட்டார்கள். அவர்களுடைய முக்கிய நோக்கம் திருச்சபையின் பரிசுத்தமும், ஆவிக்குரிய வாழ்க்கையுமாகும் புதிய உடன்படிக்கையின்படி அவர்கள் எழுப்பப்பட்டு, பரிசுத்த ஆவியினால் வல்லமை பெற்று, தேவனுடைய நற்செய்தியை மக்களுக்குக் கொண்டு வரும் தூதுவர்களாகப் பணியாற்றினர்.
(அப் 2:17:4:8; 2:4 1) ஆதித் திருச்சபையில் தீர்க்கதரிசன ஊழியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் பணி அடிப்படையானதாகும். அவர்களின் பிரதானபணி, பரிசுத்த ஆவியினால் தேவனுடைய வார்த்தையை தேவனுடைய மக்களுக்கு அறிவிப்பதாகும். தேவனுடைய மக்கள் தேவனுடன் தாங்கள் செய்துள்ள உடன்படிக்கையில் உண்மையுள்ளவர்களாயிருக்கச் செய்வதே அதன் நோக்கமாகும். தீர்க்கதரிசிகள், பரிசுத்த
ஆவியானவர் தங்களுக்கு உணர்த்தியபடி, எதிர்காலத்தில் நடக்கப்போகும் காரியங்களை மக்களுக்கு அறிவித்தார்கள். இந்தப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் மாதிரியின்படியே இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும் செயல்பட்டார்.
(அப் 3:22,23, 13:1-2)
2) புதிய ஏற்பாட்டுத் திருச்சபைக்குள் தீர்க்கதரிசிகள் கீழ்க்கானும் முறைகளில் செயல்பட்டனர்.
அ) அவர்கள் ஆவியினால் நிறைந்து, கர்த் தருடைய வார்த்தையை அறிவிக்கிறவர்களாகவும், அதற்கு விளக்கமளிப்பவர்களாகவும் செயல்பட்டனர். அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டு, மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உபதேசம் பண்ணவும், எச்சரிக்கவும், ஆறுதலளிக்கவும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
(அப் 2:14-36; 3:12-26; 1 கொரி 12:10; 14:3)
ஆ) அவர்கள் தங்களுக்களிக்கப்பட்ட தீர்க்கதரிசன வரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இ) சில வேளைகளில் அவர்கள் பின்னால் நடக்கப் போவதை முன்னால் அறிவிக்கும் ஞானதிருஷ்டிக்காரர்களாகவும் இருந்தார்கள். (1 நாளா 29:29; அப் 11:28, 21:10,11)
(ஈ) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளைப்போலப் புதிய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும் தேவனுடைய மக்களிடத்தில் பாலத்தை வெளிப்படுத்தவும், நீதியை அறிவிக்காயும், வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரிக்கவும், பாவ இச்சைகளில் சிக்கி உலக மக்களாய் வாழ்பவர்களை எச்சரிக்கவும்: குளிருமின்றி, அனலுமின்றி இருப்பவர்களை விழிப்படையச் செய்யவும், அழைக்கப்பட்டிருந்தனர். (லூக் 114-17) திருச்சபைகளில் விசுவாச மறுப்பம், பலர் குளிருமின்றி, அனலுமின்றி இருந்ததாலும் தீர்க்கதரிசிகள் நீதியைக் குறித்துப் பிரசங்கித்ததால், அவர்களையும், அவர்களுடைய ஊழியத்தையும் மக்கள் புறகணிப்பதை எதிர்பார்க்கலாம்.
3) தீர்க்கதரிசியின் பண்பு, நடத்தை, பாரம், விருப்பம், திறமை ஆகியவற்றில் கீழ்க்கண்டவை அடங்கும்.
அ) திருச்சபையில் பரிசுத்தம் நிலவ வேண்டும் என்னும் ஆர்வம். (யோவா 17:15-17; 1கொரி 6:9-11; சுலா 5:22-25)
ஆ) அநீதியைக் கண்டறிந்து வெறுக்கும் தன்மையும், தீமையைக் கண்டறியும் ஆழமான உணர்வும். (ரோம 129; எபி 19)
இ) கள்ளப் போதனைகள், தவறான கொள்கைகள் இவற்றால் விளையும் ஆபத்துக்களைப் பற்றிய தெளிவான அறிவு, (மத் 7:15, 24:11,24 கலா 19; 2 கொரி 1:12-15)
ஈ) தீர்க்கதரிசிகள் கூறும் செய்திகளை உணர்ந்துகொள்ள தேவனுடைய வார்த்தையையே சார்ந்திருத்தல். (லூக் 4:17-19; 1 கொரி 15:3-4: 2 தீயோ 3:16)
உ) தேவனுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுதலும், தேவனுடைய இராஜ்யத்தின் ஆவிக்குரிய வெற்றிக்குக் கரிசனையும் (மத் 21:11-13, 23:37; லூக் 13:34; யோவா 2:14-17; அப் 20:27-31).
4) தீர்க்கதரிசிகளின் செய்திகள் தவறில்லாதவை என்று கருதக்கூடாது. அவைகள் திருச்சபை, தேவனுடைய வார்த்தை, மற்ற தீர்க்கதரிசிகள் இவற்றால் மதிப்பிடப்பட வேண்டும். திருச்சபையானது இந்தச் செய்தியும், சாட்சியும் தேவனிடமிருந்து வந்தது தானா என்று பகுத்தறிய வேண்டும். (1 கொரி 14:29-33; 1 யோவா 4:1).
5) திருச்சபையில் தேவனுடைய நோக்கம் நிறைவேற தீர்க்கதரிசிகள் தொடர்ந்து தேவைப்படுகின்றனர். தேவனுடைய தீர்க்கதரிசிகளைப் புறக் கணிக்கிற திருச்சபை, சீரழியும் திருச்சபையாக இருக்கும். அது உலகத்துக்கு நேராகத் திருப்பிச் செல்லும், வேதாகம உண்மைகளையும் புறக்கணிப்பதாக இருக்கும். (1கொரி 14:3; மத் 23:31-38; லூக் 11:49; அப் 7:51-52) தீர்க்கதரிசிகள் கண்டனங்களையும், எச்சரிக்கைகளையும் தெரிவிக்கும் செய்திகளையும், பரிசுத்த ஆவியினால் தூண்டப்பெற்ற செய்திகளையும், பாவத்தையும், அநீதியையும் வெளிப்படுத்தும் செய்திகளையும் திருச்சபைக்கு அறிவிக்க அனுமதிக்கப் படவில்லையானால், (யோவா 16:8-11) அந்தத் திருச்சபை பரிசுத்த ஆவியின் குரல் இனி ஒருபோதும் கேட்கப்படக் கூடாத இடமாக மாறி விடும். திருச்சபை அரசியலும், உலக அதிகாரமும், பரிசுத்த ஆவியின் இடத்தில் வந்து அதற்குப் பதிலாக ஆட்சி செய்யும்.
(2 தீமோ 3.1-9; 4:3-5; 2 பேது 2:1-3,12-22) அதே வேளையில் திருச்சபையும் அதன் தலைவர்களும் தீர்க்கதரிசிகளின் குரலைக் கேட்டு, செயல்படுபவர்களானால், அது ஒரு புதிய வாழ்க்கைக்கும், கிறிஸ்துவோடு நெருங்கிய உறவுக்கும் வழிவகுக்கும். பாவம் முற்றிலுமாகக் கைவிடப்படும். பரிசுத்த ஆவியின் பிரசன்னம். விசுவாசிகளின் மத்தியில் இருப்பது வெளிப்படையாகத் தெரியும். (1கொரி 14:3; 1 தெச 5:19-21; வெளி 3:20-22).
நற்செய்தியாளர்கள்: புதிய ஏற்பாட்டில் நற்செய்தியாளர்கள் என்போர் தேவனால் நியமிக்கப்பட்டு, வரம்பெற்ற தேவனுடைய மனிதர்கள்.
இவர்களது பணி இரட்சிப்பைப் பற்றிய நற்செய்தியை இரட்சிக்கப்படாதவர்களுக்கு அறிவித்து, ஒரு நகரத்தில் ஒரு புதிய பணியை ஸ்தாபித்தலாகும். நற்செய்தி அறிவிக்கப்படும்போது, அதன் மூலம் இரட்சிக்கப்படுவதற்கான வாய்ப்பும், இரட்சிப்பின் வல்லமையும் உண்டாகும். (1:16-17).
1) புதிய ஏற்பாட்டு மாதிரியின்படி ஒரு நற்செய்தியாளனின் பணிக்கு பிலிப்புவின் ஊழியம் ஒரு நல்ல உதாரணமாகும்.
(அப் 218)
அ) பிலிப்பு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்தான்.
(அப் 8:4,5,35)
ஆ) அநேகர் இரட்சிக்கப்பட்டு தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப் 8:6,12)
இ)அடையாளங்களும்,, அற்புதங்களும், குணமாகுதலும், அசுத்த ஆவிகளிடமிருந்து விடுதலையும் அவனுடைய போதனையோடு இணைந்து செயல்பட்டன. (அப் 8:6,7,13)
ஈ) புதிதாக மனந்திரும்பியவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்று அவன் விரும்பினான். (அப் 8:12-17; 2:38; 19:1-6).
2) திருச்சபையில் தேவனுடைய நோக்கம் நிறைவேற நற்செய்தியாளர்கள் தேவை. நற்செய்தியாளர்களைத் திருச்சபை ஆதரிக்கவில்லையானால் தேவன் விரும்புகிறபடி புதிய விசுவாசிகளும், மனந்திரும்புகிறவர்களும் சபையில் சேர்க்கப்பட மாட்டார்கள். அந்தத் திருச்சபை ஒரு அசைவற்ற திருச்சபையாகவும், வளர்ச்சியில்லாத திருச்சபையாகவும், விரிவடையாத திருச்சபையாகவும் இருக்கும். ஒரு நற்செய்தியாளனின் ஆவிக்குரிய வரத்தை மதிக்கும் திருச்சபை, இழந்துபோன ஆத்துமாக்கள் மீது கரிசனை கொண்ட திருச்சபை, இரட்சிப்பின் நற்செய்தியைக்கூறி அறிவிக்கும். நற்செய்திப் பணியாளர்கள் மூலம் இந்த இரட்சிக்கும் வல்லமை எங்கும் பரவி ஆத்துமாக்கள் மனந்திரும்பச் செய்து தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும். (அப்2:14-41)
ஆயர்கள் (மேய்ப்பர்கள்):
ஒரு உள்ளூர்த் திருச்சபை மக்களின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்து, சபையை மேற்பார்வையிட்டுக் கவனிப்பவரே 'ஆயர்' ஆவார். அவர்கள் "மூப்பர்கள்” (அப் 20:17; தீத் 1:5) என்றும் , "கண்காணிகள்"
(1 தீமோ 3:1; தீத் 17) என்றும் அழைக்கப்படுவார்கள்.
1) ஒரு ஆயரின் பணி, நல்ல செய்தியையும், கொள்கைகளையும், சபை மக்களுக்குப் போதித்தல், சபையில் வசனத்தைத் திரித்துக் கூறுபவர்களை எதிர்த்து, மடங்கடித்து, வோற்றுப் போகச் செய்தல், (தீத் 19-11) தேவனுடைய வார்த்தைகளைக் கற்பித்தல்; சபையைத் தலைமை தாங்குதல், (1தெச 5:12; 1தீமோ 3:1-5) ஆகும்.
அவர்கள் பரிசுத்தமான வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான உபதேசத்துக் கும் முன் மாதிரியாக வாழ வேண்டும். (தீத் 2:7,8) எல்லா விசுவாசிகளும் தெய்வீக கிருபையைப் பெற்று வாழ்கிறார்களா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். (எபி 12:15; 13:17; 1 பேது 5:2) அவர்களுடைய பணி அப் 20:28 முதல் 31 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலர்களின் சத்தியத்தைப் பாதுகாத்தல், திருச்சபையில் தவறான கொள்கை களும், போதனைகளும் பரவ விடாமல் தடுத்துக் காத்தலும் அவர்களது பணியாகும்.
இயேசு கிறிஸ்து ஒரு நல்ல மேய்ப்பனாக இருந்தது போலவே போதகர்களும் தங்கள் சபைகளில் ஒரு நல்ல மேய்ப்பனாக இருந்து தமது மந்தையாம் சபை மக்களைப் பாதுகாக்க வேண்டும். (யோவா 10:11-16;1 பேது 2:25; 5:2-4).
2) ஒரு உள்ளூர்த் திருச்சபையை நிர்வகிக்கும் பொறுப்பில் பல ஆயர்களும், கண்காணிகரும், மூப்பர்களும் இருந்ததாகப் புதிய ஏற்பாட்டுச் சபைப் பரிபாலனமுறை காட்டுகிறது.
(அப் 20:28; பிலி 1:1) ஆயர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். அரசியல் முறையில் அல்ல, பரிசுத்த ஆவியின் ஞானத்தால், அந்த நபரின் ஆவிக்குரிய தன்மைகளைப் பரிசோதித்து, தகுதியுள்ளவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர்.
3) தேவனுடைய நோக்கம் நிறைவேறச் சபைகளுக்குப் போதகர்கள் தேவை. தெய்வபக்தியுள்ள, உண்மையான போதகர்களைத் தெரிந்தெடுக்கத் தவறும் சபைகள், பரிசுத்த ஆவியின் எண்ணப்படி நிர்வகிக்கப்படுவதில்லை. (1 தீமோ 3:1-7) அத்தகைய சபையானது இந்த உலகத்துக்கும், சாத்தானுடைய அழிவுச் சக்திகளுக்கும் இடமாகத் திகழும்.
(அப் 20:28-31) அங்கே வேத வசனப் போதனை திரித்துக் கூறப்படும். கிறிஸ்துவின் நற்செய்தின் தரம் இழக்கப்பட்டுவிடும்.
(2 தீமோ 1:13-14) சபையின் அங்கத்தினர்களும், குடும்பங்களும் தேவனுடைய நேர்க்கத்தின்படி பராமரிக்கப்படுவதில்லை.
(1 தீமோ 4:6,12-16;6:20,21) அநேகர் சத்தியத்தைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். அவர்கள் கட்டுக்கதைகளுக்குத் தங்கள் கவனத்தைத் திருப்புவார்கள்.
(2 தீமோ 4:4) அதே வேளையில் தெய்வ பக்தியுள்ள ஆயர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் விசுவாசிகள் வேதாகமத்திலுள்ள விசுவாச வார்த்தைகளால் போஷிக்கப்பட்டிருப்பார்கள். நல்ல கொள்கைகள் போதிக்கப்பட்டு அவர்கள் மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும் உள்ளவர்களுமா மிருப்பார்கள். இதன் பலனாக அவர்கள் தேவனுக்குப் பயந்தவர்களும், கிறிஸ்துவின் பிள்ளைகளும், பரிசுத்த ஆவியில் நிறைந்தவர்களுமாயிருப்பார்கள்.
(1 தீமோ 4:6,7) திருச்சபையானது கிறிஸ்து அப்போஸ்தலர்கள் ஆகியவர்களின் போதனைகளில் நிலைத்திருக்கும்படி போதிக்கப்படும். இதன் மூலமாக திருச்சபைக்கும், சத்தியத்தைக் கேட்கும் அனைவருக்கும் இரட்சிப்பு நிச்சயப்படுத்தப்படும். (1 தீமோ 4:16; 2 தீமோ 2:2) ம
போதகர்கள்: சத்தியங்களைத் தெளிவுபடுத்தவும், விளக்கிக் கூறவும், கூறி அறிவிக்கவும் தேவனிடத்திலிருந்து சிறப்பான வரம் பெற்றவர்களே போதகர்கள் ஆவர். அவர்கள் கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையைக் கட்டியெழுப்புவார்கள். (எபே 4:12).
1) போதகர்களின் சிறப்பானபணி, பரிசுத்த ஆவியின் உதவியுடன் சத்தியத்தைக் காத்துக்கொள்வதும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நற்செய்தியைப் பாதுகாப்பதுமேயாகும். (2 தீமோ 1:11-14) அவர்கள் வேதாகம் வெளிப்பாடுகளையும், கிறிஸ்து அப்போஸ்தலர்கள் இவர்களுடைய போதனைகளையும் சபை மக்களுக்குப் போதிக்க வேண்டும். இந்த வேலையில் அவர்கள் இடைவிடாமல் தரித்திருக்க வேண்டும்.
2) இவ்வாறு வேதாகமத்தைப் போதிப்பதின் முக்கிய நோக்கம், சத்தியத்தைக் காத்துக் கொள்வதாகும். தேவனுடைய வார்த்தைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் பக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவ கல்வியின் நோக்கம் 'அன்பே' என்று வேதாகமம் போதிக்கிறது. இந்த அன்பு, ஒரு பரிசுத்தமான இருதயத்திலிருந்தும், ஒரு நல் மனச்சாட்சியிலிருந்தும், உண்மையான விசுவாசத்திலிருந்தும் வருகிறது. (1 தீமோ 1:5). இவ்விதமாக ஒரு கிறிஸ்தவக் கல்வி என்பது, ஒருவன் எவ்வளவு அறிவை அறிந்திருக் கிறான் என்பதில் அல்ல, அவன் எப்படி வாழ்கிறான் என்பதைப் பொறுத்தே வெளிப்படுகிறது. அவனுடைய வாழ்க்கையில் அன்பு, பரிசுத்தம், விசுவாசம், தெய்வபக்தி ஆகியவை காணப்பட வேண்டும்.
3) தமது சபைக்குரிய தேவனுடைய நோக்கத்திற்குப் போதகர்கள் அவசியம் தேவை. போதகர்களின் அல்லது இறைகல்வி ஆசிரியர்களின் போதனை களைக் கேட்க மறுக்கும் திருச்சபைகள் கிறிஸ்து அல்லது அப்போஸ்தலர்களின் உண்மையான வேதாகமப் போதனைகளின் உண்மைத் தன்மையையும், அவற்றின் சரியான பொருள் விளக்கத்தையும் பற்றிக் கரிசனை கொள்ள மாட்டார்கள். இத்தகைய சபையில் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருக்கும் போதகர்களும், இறை கல்வி ஆசிரியர்களும், வேத சத்தியத்தில் திடமாக நிலைத்திருப்பதில்லை. சபைகளில் புதிதாக வந்து பரவும் கொள்கைகளும், சமய அனுபங்களும், மனிதர்களுடைய கருத்துக்களும், நிபந்தனையின்றி ஆராயப்படாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும். வேதாகமத்தில் வெளிப் படுத்தப்பட்டுள்ள உண்மையை உதாசினப்படுத்தும் இவர்களின் இந்தப் புதிய தவறான உபதேசங்களால் இழுக்கப்படுவார்கள். அவை அவர்களது கொள்கையாகவும், திட்டமாகவும், செயல்முறையாகவும் ஆகிவிடும். அதே வேளையில் தெய்வபயமுள்ள போதகர்கள், இறை கல்வி ஆசிரியர்கள் அவர்களது போதனைகளைக் கேட்கும் சபை மக்கள் அவற்றை வேதாகமம் கூறும் சாட்சிகளுடன் ஒப்பிட்டு, தவறான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு கிறிஸ்துவின் பரிசுத்தமான மூல உபதேசம் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும். தேவனுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட தேவ வார்த்தைகள், எல்லா போதனைகளுக்கும் உரைகல்லாயிருக்கும். திருச்சபைக்குப் பரிசுத்த ஆவியினால் தூண்டுதல் பெற்று எழுதப்பட்ட தேவ வார்த்தைகளே முடிவான சத்தியமும் அதிகாரமும் ஆகும் என்பது திருச்சபைக்கு நினைவுப்படுத்தப்படும். அதனால் திருச்சபைகளிலும் நிறுவனங்களிலும் அவை நிலைத்து நிற்கும். ஆமென்.
உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
WhatsApp 9841711591.
Comments