திருச்சபை விசுவாசிகளுக்கு பேதுரு தரும் ஆலோசனைகள் (2)

அப்போஸ்தலர் பேதுரு 
விசுவாசிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும், குடும்பத்திலும், சபையிலும் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்து வழங்கிய 
சிறப்பான சில  ஆலோசனைகள் :

1. உங்கள் கவலைகளை அவர்மேல் வைத்துவிடுங்கள்
வாழ்க்கையின் பாரங்கள் மற்றும் மனக்கவலைகளால் விசுவாசிகள் நசுங்கிப்போகாமல் இருக்க, அதை தேவனிடம் ஒப்படைக்கும் ஆலோசனையை வழங்குகிறார்.
வசனம்:
 "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்"
 (1 பேதுரு 5:7).

2. குடும்ப உறவில் கனம் கொடுத்தல்
திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை ஆலோசனையைத் தருகிறார். குறிப்பாக, மனைவிகளை "பலவீனமான பாண்டம்" என்று கருதி அவர்களுக்குக் கனம் கொடுக்கக் கூறுகிறார்.
வசனம்:
 "மனைவியானவள் பலவீனமான பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, அவளுடனே விவேகத்துடன் வாழ்ந்து... அவளைக் கனம்பண்ணுங்கள்" 
(1 பேதுரு 3:7).

3. மற்றவர்களுக்குப் பதில் சொல்ல ஆயத்தமாயிருத்தல்
நமது விசுவாசத்தைக் குறித்து யாராவது கேள்வி கேட்டால், அவர்களுக்குப் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
வசனம்:
 "உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரணை செய்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்" (1 பேதுரு 3:15).

4. மனத்தாழ்மையை உடுத்திக்கொள்ளுங்கள்
பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், எனவே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து தாழ்மையைத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். 
வசனம்:
 "நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்"
 (1 பேதுரு 5:5). 

5. முறுமுறுப்பில்லாத உபசரிப்பு
சபையார் மற்றும் அந்நியர்களிடம் அன்பு பாராட்டுவதோடு, மனக்கசப்பு அல்லது முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரை ஒருவர் உபசரிக்க வேண்டும்.
வசனம்: 
"முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்"
 (1 பேதுரு 4:9).

6. வரங்களை மற்றவர்களுக்காகப் பயன்படுத்துதல்
தேவன் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட வரத்தைத் தந்திருக்கிறார். அதைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்குச் சேவை செய்யப் பயன்படுத்த வேண்டும்.
வசனம்: 
"அவனவன் பெற்ற வரத்தின்படியே... தேவன் அருளும் பலத்திற்கேற்றதாகச் செய்யக்கடவன்"
 (1 பேதுரு 4:10-11).

7. அன்பினால் குற்றங்களை மூடுதல்
அன்பு என்பது மற்றவர்களின் குறைகளைத் தோண்டித் துருவாமல், அவற்றை மன்னித்து மறைப்பதாக இருக்க வேண்டும்.
வசனம்: 
"எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்"
 (1 பேதுரு 4:8). என திருச்சபைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். தொடர்ந்து வேத புத்தகத்தை வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை