சரீர உயிர்த்தெழுதல்

சரீர உயிர்த்தெழுதல்:
"1 கொரி 15:35 ஆகிலும் மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே முன்கெய வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,"

வேதாகமத்தில் சரீர உயிர்த்தெழுதல் முக்கியமான ஒரு உபதேசமாகும். அது மரித்தோரிலிருந்து ஒருவனுடைய சரீரத்தைத் தேவன் உயிரோடெழுப்பு வதையும், இடைநிலையில் அது பிரிந்து வந்த அந்த மனிதனின் ஆத்துமாவோடும், ஆவியோடும் மறுபடியும் இணைவதையும் குறிக்கிறது.

(1) சரீர உயிர்த்தெழுதல் ஏன் தேவையானது என்பதற்கு வேதாகமம் மூன்று காரணங்களை வெளிப்படுத்துகிறது. 

(அ) மனிதனின் மொத்த ஆளத்துவத்துக்கு சரீரம் முக்கியமானது. சரீரம் இல்லாமல் மனிதர் முழுமையாக மாட்டார்கள். கிறிஸ்து அருளும் மீட்பு, சரீரம் உட்பட முழு மனிதனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (ரோம 8:18-25;)

 (ஆ) சரீரம் பரிசுத்தாவியின் ஆலயம். (1 கொரி 6:19) உயிர்த்தெழுந்தபின் மறுபடியுமாக அது ஆவியானவரின் ஆலயமாய் மாறும். 

(இ) எல்லா நிலைகளிலும் பாவத்தின் பலனைச் சரிக்கட்டும்படி மனிதரின் கடைசி சத்துரு (சரீர மரணம்) உயிர்த்தெழுதலினால் ஜெயங்கொள்ளப்பட வேண்டும். 
(1 கொரி15:26). 

(2) பழைய ஏற்பாடும் (ஆதி 22:1-14 ஐ எபி 1:17-19 வோடும், சங் 16:10 ஐ அப் 2:24வோடும் ஒப்பிட்டுப் பார்க்கவும். யோபு 19:25-27; எசா 26:19; தானி 12:2; ஓசி 13:14) பதிய ஏற்பாடும் (லூக் 14:13-14; 20:35-36; யோவா 5:21,28-29; 6:39-40,44,54; 1 கொரி 15:22-23; பிலிப் 3:11; 1 தெச 4:14-16; வெளி 20:4-6,13) ஆகிய வசனங்கள் வருங்கால சரீர உயரத்தெழுதல் பற்றிப் போதிக்கப்பட்டிருக்கின்றன.

(3) நம் சரீர உயிர்த்தெழுதல், கிறிஸ்துவுடைய உயிர்த்தெழுதலின் உண்மையினால் நிச்சயப்படுத்தப்பட்டிருக்கிறது. 
(மத் 28:6 ;
 அப் 17:31; 1 கொரி 15:12,20-23).

(4) பொதுவாக, விசுவாசியின் உயிர்த்தெழுந்தசரீரம் ஆண்டவரின் உயிர்த்தெழுந்த சொந்த சரீரத்தைப்போல் காணப்படும். 
(ரோம 8:29; 1 கொரி 15:20; 42-44,49; பிலி 3:20-21; 1 யோவா 3:2) சிறப்பாக உயிர்த்தெழுந்த சரீரம் பின்வருமாறு இருக்கும்.

 (அ) இந்த வாழ்க்கையிலிருக்கும் சரீரத்தோடு தொடர்பும், அதே மாதிரியும் இருப்பதால், அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாயிருக்கும். (லூக் 16:19-31) 

(ஆ) புதிய வானம் புதிய பூமிக்கு ஒத்தபடி பரலோக சரீரமாக மாறியிருக்கும். 
(1 கொரி 15:42-44, 47-48; வெளி 21:1) 

(இ) அழிவிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை பெற்ற, அழிக்க முடியாத சரீரமா யிருக்கும். 
(1 கொரி 15:42) 

(ஈ)கிறிஸ்துவினுடையதைப் போல மகிமையான ஒரு சரீரமாயிருக்கும். 
(1 கொரி 15:43; பிலி 3:20-21) 

(உ) வியாதிப்படக் கூடிய அல்லது பெலவீனமான சரீரமாயிராமல் ஒரு பலமுள்ள சரீரமாயிருக்கும். 
(1 கொரி 15:43) 

(ஊ) இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்படாத ஒரு ஆவிக்குரிய (அதாவது இயற்கையானதல்ல, இயற்கைக்கு அப்பாற்பட்டது) சரீரமாயிருக்கும். 
(லூக் 24:31; யோவா 20:19; 1 கொரி 15:44) 

(எ) புசிக்கவும். குடிக்கவும் கூடியதான சரீரமாயிருக்கும். 
(லூக் 14:15, 22:14-18,30,24:43).

(5) விசுவாசிகள் தங்களுக்கான புதிய சரீரங்களைப் பெற்றதும், அவர்கள் சாவாமையை அடைகிறார்கள். 
(1 கொரி 15:53) வேதாகமம் இதற்குக் குறைந்தது மூன்று நோக்கங்களைக் குறிப்பிடுகின்றது. 

(அ) அதனால் விசுவாசிகள் சிருஷ்டிப்பின் போது தேவன் மனிதரைக் குறித்து என்ன விருப்பங் கொண்டிருந்தாரோ அதே போல் மாறுவார்கள். 
(1 கொரி 2:9) 

(ஆ) அதனால் விசுவாசிகள் தேவனை அறிந்து கொள்ள வேண்டியவிதமாய் பூரணமாய் அறிந்து கொள்வார்கள். (யோவா 17:3) 

(இ) அதனால் தேவன் தம் பிள்ளைகள் மேல் அவர் எப்படி அன்புகாட்ட விரும்புகிறாரோ அவ்வாறே அன்பு காட்டுவார். 
(யோவா 3:16; எபே 2:7; 1 யோவா 4:8-16).

(6) கிறிஸ்து தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்காகத் திரும்பி வரும்போது, இன்னும் உயிரோடிருக்கும் உண்மையுள்ள விசுவாசிகள், உயிர்த்தெழுதலின் நாளுக்கு முன்னர், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அடையும் அதே சரீர மறுரூபத்தை, அவர்களும் அடைவார்கள். 
(1 கொரி 15:51-53). அந்த நேரத்தில் மரித்தோரிலிருந்து உயிரோடெழும்பியவர்களுக்குக் கொடுக்கப்படும் சரீரங்களுக்கு ஒத்தவிதமாய் புதிய சரீரங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அவர்கள் ஒருபோதும் சரீர மரணத்தை அனுபவி க்கமாட்டார்கள். 

(7) இயேசு, விசுவாசிகள் ஜீவனை அடையும்படி உயிர்த்தெழுவதைப் பற்றியும், தீமை செய்தவர்கள் நியாயத் தீர்ப்பை அடையும்படி உயிர்த்தெழுவதைப் பற்றியும் பேசுகிறார். (யோவா 5:28-29).
 மேலும் அறிந்து கொள்ள வேதத்தை வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா 
WhatsApp 9841 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை