அன்பின் அடையாளம் கீழ்ப்படிதலே

ஒரு விசுவாசி இயேசு கிறிஸ்துவிடம் அன்பு செலுத்துவது என்பது வெறும் உணர்ச்சி சார்ந்தது மட்டுமல்ல, அது செயல்களிலும் கீழ்ப்படிதலிலும் வெளிப்பட வேண்டிய ஒன்று. வேத ஆதாரங்களுடன் சில குறிப்புகள்: 

அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்: 
இயேசுவின் மேல் நாம் வைத்திருக்கும் அன்பிற்கு முதன்மையான அடையாளம் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதே. 
(யோவான் 14:15)
இல் "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

தேவ வார்த்தையில் நிலைத்திருத்தல்:
 அவருடைய வசனங்களை வாசிப்பதும், அதன்படி நடப்பதும் அன்பின் வெளிப்பாடு. "ஒருவன் என் வசனத்தைக் கைக்கொண்டால், அவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்" என்று 
(1யோவான் 2:5) 
கூறுகிறது.

சகோதரர்களிடத்தில் அன்பு கூருதல்: 
நம் கண்ணுக்குத் தெரிந்த சகோதரனை நேசிக்காமல், தேவன் மேல் அன்பு கூர முடியாது. "தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே இருக்கிறான்" என்கிறது 
(1யோவான் 2:10).

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுதல்: 
உலக காரியங்களை விட கிறிஸ்துவிற்கும் அவருடைய நீதிக்கும் முன்னுரிமை அளிப்பதே உண்மையான அன்பு. 
(மத்தேயு 6:33) இன்படி 
ராஜ்யத்தைத் தேடுவதே பிரதானம்.

தன்னைத்தான் வெறுத்து சிலுவையைச் சுமத்தல்: 
கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது சுயத்தை மறுப்பதாகும். "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்" (மத்தேயு 16:24).

முழு இருதயத்தோடும் அன்பு கூருதல்: 
பாதி மனதோடு அல்லாமல், முழு ஆத்துமாவோடும் பலத்தோடும் அவரை நேசிக்க வேண்டும் என்று 
(மாற்கு 12:30) 
வலியுறுத்துகிறது.

உலகத்தின் மேல் அன்பு வைக்காதிருத்தல்: 
உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்" என 
(1யோவான் 2:15) 
எச்சரிக்கிறது.

அவருக்காகத் துன்பங்களைச் சகித்தல்:  கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தைகளையும் துன்பங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்பது அவரிடத்தில் உள்ள அன்பைக் காட்டும் 
(மத்தேயு 5:11-12).

ஜெபத்திலும் ஐக்கியத்திலும் நிலைத்திருத்தல்: 
ஒருவரை நேசித்தால் அவரோடு பேச விரும்புவோம். அதுபோல இடைவிடாமல் ஜெபிப்பதன் மூலம் அவரோடு நெருங்கிய உறவை வளர்க்கலாம் (1 தெசலோ 5:17).

அவருடைய வருகைக்காகக் காத்திருத்தல்: 
அவரை நேசிப்பவர்கள் அவருடைய மறுவருகையை ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். "அவருடைய பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் நீதியின் கிரீடம் வைக்கப்பட்டுள்ளது" (2 தீமோத் 4:8). என வேதம் அறிவுறுத்துகிறது
ஆகையால் தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
WhatsApp 9841 711 591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை