பரிசுத்தமாய் வாழ்வதற்கு

ஒரு தேவனுடைய பிள்ளை இவ்வுலகின் அசுத்தங்களிலிருந்து தன்னை விடுவித்து, பரிசுத்தமாக வாழ்வதற்கு வேதம் தெளிவான வழிகாட்டல்களை வழங்குகிறது. இதோ அதற்கான சில முக்கியமான வேதக் குறிப்புகள்.

தேவனுடைய வார்த்தையினால் சுத்திகரிப்பு:
ஒரு இளைஞன்(வாலிபன்) தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? தேவனுடைய வசனத்தின்படி தன்னை எச்சரித்துக்கொள்வதினாலேயே.
 (சங்கீதம் 119:9) 

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படுதல்:
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். "நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், அவர் நம்மைச் சுத்திகரிக்க உண்மையுள்ளவராயிருக்கிறார்". 
(1 யோவான் 1:7-9) 

மனம் புதிதாகிறதினால் மறுரூபமாதல்:
நீங்கள் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினால் மறுரூபமாகுங்கள். 
(ரோமர் 12:2)

மாம்சத்தின் இச்சைகளைத் தவிர்க்குதல்:
ஆவிக்கேற்றபடி நடங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றமாட்டீர்கள். உலகத்திலுள்ள யாவும் பிதாவினால் உண்டானவையல்ல. 
(கலாத்தியர் 5:16) 

பரிசுத்தத்தை நாடுதல்:
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
 (எபிரெயர் 12:14 )

தேவ பயத்தோடு சுத்திகரித்துக்கொள்ளுதல்:
பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, தேவபயத்தோடே பரிசுத்தமாகுதலை பூரணப்படுத்தக்கடவோம். 
(2 கொரி 7:1)

உலக சிநேகத்தைத் தவிர்த்தல்:
உலகத்தின் சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? உலகத்திற்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைவனாகிறான். 
(யாக்கோபு 4:4)

தீமையை விட்டு விலகுதல்:
தீமையை விட்டு விலகி, நன்மையைச் செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடரு. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. (1 பேதுரு 3:11-12)

ஜெபத்தினால் விழித்திருத்தல்:
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது. 
(மத்தேயு 26:41) 

மேலானவைகளையே நாடுதல்:
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கிறிஸ்துவோடேகூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். 
(கொலோ 3:1-2)

இந்த வசனங்களை நீங்கள் தியானித்து, உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும்போது, தேவன் உங்களைப் பரிசுத்த பாதையில் நடத்துவார். என்பது நிச்சயமானது. மேலும் அறிந்து கொள்ள வேதத்தை தேடி வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா. WhatsApp 9841 71 1591

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை