அறியாத ஒருவர் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள போதகர் செய்ய வேண்டிய வேலை

தேவனாகிய கர்த்தர் அருளும் இரட்சிப்பை ஒரு மனிதன் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வேதாகமத்தின் அடிப்படையில் சில முக்கிய குறிப்புகளாக காணலாம்:

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தல்:
இரட்சிப்புக்கு முதல் படி இயேசுவே இரட்சகர் என்று நம்புவதாகும். "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று அப்போஸ்தலர் 16:31 கூறுகிறது.

விசுவாசம் எப்படி வருகிறது ?
தேவனுடைய வசனத்தைக் கேட்பதன் மூலம்: 
விசுவாசம் உண்டாவதற்கு மிக முக்கியமான வழி தேவனுடைய வார்த்தையைக் கேட்பதாகும். "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர் 10:17).
யார் மூலமாக நாம் 

வசனத்தை கேட்கிறோம் ?
பிரசங்கிகள் மற்றும் போதகர்கள் மூலம்:
 தேவன் தமது வார்த்தையை அறிவிக்க ஊழியர்களை அனுப்புகிறார். "பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேட்பார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?" (ரோமர் 10:14-15).

1)கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அனுப்பினார்: 
இயேசுவே சீஷர்களைத் தெரிந்து கொண்டு அவர்களை நற்செய்தியை அறிவிக்க அனுப்பினார். "அவர் அவர்களை நோக்கி: ... இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்" (லூக்கா 10:2-3).

கட்டளை கொடுத்து புறப்பட்டு போகச் சொன்னார்:
மத்தேயு 28:19-20
ஆகையால், "நீங்கள் புறப்பட்டுப்போய்," சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

இயேசு கிறிஸ்து 
பிதாவாகிய தேவனிடம் வேலை ஆட்களை அனுப்பும்படி ஜெபிக்க சொன்னார்: 
அறுவடைக்கு எஜமானாகிய தேவன் ஆட்களை அனுப்புகிறார். "அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்" (மத்தேயு 9:38).

அனுப்பப்படாவிட்டால் பிரசங்கம்(நற்செய்தி (அ) சுவிசேஷம் இல்லை: 
தேவனால் அனுப்பப்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை ரோமர் 10:15 உறுதிப்படுத்துகிறது: "அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?". 
பிரசங்கம் அல்லது சுவிசேஷம் அறிவிக்கப்படாமல் அதை ஒரு மனிதன் கேள்விப்படாமல் எப்படி இரட்சிக்கப்பட முடியும் என ஒவ்வொரு தேவ ஊழியர்களிடமும் கேள்வி கேட்கிறது.

நூதனமான போதனைகளும் செயல்பாடுகளும்:

1) ஒருவருக்கு சுவிசேஷத்தை அறிவிக்காமல் ஜெபத்தின் மூலமாக ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியும் என ஜெபத்தை முக்கிய படுத்துவது. 

2) நற்கிரியைகளின் மூலம் ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியும் என போதிக்கப்படுகிறது. 

3) உண்மையாய் வாழ்ந்தால் போதும் நமக்கு இரட்சிப்பு உண்டு என்று போதிக்கப்படுகிறது. 

வேதம் தெளிவான பதிலை நமக்கு சொல்லுகிறது.
(எபேசியர் 2:8-9)
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; "இது உங்களால் உண்டானதல்ல", இது தேவனுடைய ஈவு;
"ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல";

பாவங்களை அறிக்கை செய்தல்:
நம்முடைய பாவங்களை மறைக்காமல் தேவனிடத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுள்ளவருமாயிருக்கிறார்" (1 யோவான் 1:9).
மனந்திரும்புதல்:
பாவ வழிகளை விட்டு விலகி தேவனிடம் திரும்புவதே மனந்திரும்புதல். "நீங்கள் மனந்திரும்பி, உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு குணப்படுங்கள்" (அப்போஸ்தலர் 3:19).

இயேசுவை கர்த்தர் என்று வாயினால் அறிக்கை செய்தல்:
இருதயத்தில் விசுவாசிப்பதுடன், அதை நாவினால் அறிக்கை செய்ய வேண்டும். "இயேசுவைக் கர்த்தரென்று நீ உன் வாயினால் அறிக்கைபண்ணி, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் 10:9).

மறுபடியும் பிறத்தல் (ஆவியினால் பிறத்தல்):
இரட்சிப்பு என்பது ஆவிக்குரிய மறுபிறப்பு. "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்" என்று இயேசு யோவான் 3:5-ல் கூறுகிறார்.

கிருபையினால் வரும் ஈவாக ஏற்றுக்கொள்வது:
இரட்சிப்பு என்பது நம்முடைய கிரியைகளால் அல்ல, அது தேவனுடைய இலவச ஈவு. "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" (எபேசியர் 2:8).

திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெறுதல்:
விசுவாசத்தின் வெளிப்பாடாக திருமுழுக்கு பெறுவது அவசியம். "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்" (மாற்கு 16:16). 
நாம் பார்த்த எல்லா நிலைகளும் ஒரு மனிதன் கர்த்தருடைய இரட்சிப்பிற்குள் கடந்து வர வேதாகமம் காட்டும் வழியாகும்.
தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதர சிலுவை ராஜா
WhatsApp 9841 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை