தேவனுடைய இரட்சிப்பு திட்டத்தில் இஸ்ரயேல்.
தேவனுடைய இரட்சிப்புத் திட்டத்தில் இஸ்ரவேல்
ரோமர் 9:6 "தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.”
முகவுரை.
ரோமர் 9-11 அதிகாரங்களில் இஸ்ரவேலர் கடந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்காலத்தில் அவர்கள் சுவிஷேத்தைப் புறக்கணிப்பது. அவர்களின் வருங்கால இரட்சிப்பு பற்றிய பிரச்சனைகளைப் பற்றி பவுல் தெரிவிக்கிறான். சுவிசேஷத்தில் இஸ்ரவேலருக்கு எந்தப்பங்கும் இல்லாமலிருக்கும்
போது, தேவன் ஆபிரகாமுக்கும், இஸ்ரவேல் ஜனத்துக்கும் கொடுத்த வாக்குத்தத்தங்கள் எப்படி நிறைவேறும் என்று கேள்விகேட்ட யூத விசுவாசிகளுக்கு பதிலளிக்கும்படியாக இந்த மூன்று அதிகாரங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த கட்டுரை பவுலின் விவாதத்தைச் சுருக்கமாகத் தருகிறது.
மேலெழுந்தவாரியான கண்ணோட்டம்: தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் இஸ்ரவேலர் பற்றிய பவுலின் விவாதத்தில் மூன்று வெவ்வேறான ஆதாரப்பொருள்கள் உள்ளன.
1) முதலாவது
(ரோம 9:6-29) கடந்த காலத்தில் இஸ்ரவேலர் தெரிந்து கொள்ளப்பட்டது பற்றிய ஆராய்ச்சியாகும்.
அ) 9.6-13ல் இஸ்ரவேல ருக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் தேசத்தில் விசுவாசமுள்ளவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. அது வாக்குத் தத்தத்துக்கு உண்மையாய் நடந்துகொண்ட இஸ்ரவேலருக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது. (ஆதி 12:1-3; 17:19) எப்போதும் இஸ்ரவேலருக்குள்ளே ஒரு இஸ்ரவேலன் வாக்குத்தத்ததைப் பெற்றுக் கொண்டவனாக இருந்திருக்கிறான்.
ஆ) ரோமர் 9:14-29ல், தேவன் தாம் செய்ய விரும்புகிறபடியே தனிப்பட்ட நபருக்கும் தேசத்துக்கும் செய்ய அவருக்கு உரிமை உண்டு என்பதைப் பவுல் சுட்டிக் காண்பிக்கிறான். இஸ்ரவேலர் கீழ்ப்படிய மறுத்தால் அவர்களைப் புறக்கணிக்க, அவருக்கு உரிமை உண்டென்றும், அவர் விரும்பினால் புறஜாதியினருக்கு இரக்கம் காண்பித்து அவர்களுக்கு இரட்சிப்பை அருளிச் செய்ய அவருக்கு உரிமை உண்டென்றும் கூறுகிறான்.
2) இரண்டாவதான பெரும்பகுதியில் (ரோம 9:30-10:21) தற்போது இஸ்ரவேலர் சுவிசேஷத்தை அசட்டை செய்வதைக் குறித்து அலசிப் பார்க்கிறான். அவர்கள் கிறிஸ்துவுக்குத் தக்கவாறு பதிலளிக்கத் தவறியதன் காரணம் தேவனுடைய நிபந்தனையற்ற தீர்மானத்தினாலல்ல, ஆனால் அவர்களுடைய சொந்த அவிசுவாசமும், கீழ்ப்படியாமையுமாகும். (ரோம 10:3).
3) கடைசியாக பவுல், இஸ்ரவேலரின் புறக்கணிப்பு முழுமையானது அல்ல, அது தற்காலிகமானது என்று (ரோம 11)ல் விவரிக்கிறான். கிறிஸ்து வினாலுண்டான தேவனுடைய இரட்சிப்பை இஸ்ரவேலர் முடிவில் ஏற்றுக் கொள்வார்கள். அவருடைய விவாதத்தில் பல படிகள் உள்ளன.
அ) தேவன் உண்மையான இஸ்ரவேலனைத் தள்ளிவிட மாட்டார். ஏனென்றால் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுவதின் மூலம் தமக்கு விசுவாசமாய் நிலைத்திருக்கும் "கொஞ்சம் பேருக்கும்" அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். (ரோம11:1-6)
ஆ) இஸ்ரவேலில் பெரும்பான்மையினர் தற்போது தேவனால் கடினப்படுத்தப் பட்டிருப்பதின் காரணம், அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க மறுத்ததுதான்.
(ரோம 11:7-10; 9:31-10:21)
இ) இஸ்ரவேலின் அக்கிரமத்தைத் தேவன் (அதாவது கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தது) உலகத்துக்கு இரட்சிப்பை அறிவிக்கும் வாய்ப்பாக மாற்றினார். (ரோம 11:11-12,15)
ஈ) இஸ்ரவேல் மக்களுடைய தற் போதைய அவிசுவாசத்தின் நாட்களில், யூதர்கள், புறஜாதிகள் ஆகிய இருபாலாரின் இரட்சிப்பும் (ரோம10:12-13) அவரவர் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தைப் பொறுத்ததே.
(ரோம11:13-24)
உ) வருங்காலத்தில் இஸ்ரவேல் மக்களின் ஒரு பகுதியினர் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பார்கள்
(ரோம 11:25-29)
ஊ) தேவனுடைய உண்மையான நோக்கம் என்னவென்றால் யூதர்கள், புறஜாதியார் ஆகிய இருபாலாரின் மேலும் இரக்கமாயிருந்து, கிறிஸ்து வில் விசுவாசம் வைக்கும் எல்லா மக்களையும் தம்முடைய இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வதாகும். (ரோம 11:30-36; 10:12-13; 11:20-24)
நாம் அறிவது:
ரோமர் புத்தகத்தின் இந்த மூன்று அதிகாரங்களிலும், அநேக விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன
1) இஸ்ரவேலரைப் பற்றிய இந்த விவாதம் தனிப்பட்ட மக்களின் சரீர மரணத்துக்குப்பின் உள்ள நித்திய ஜீவன் பற்றியோ அல்லது மரணத்தைப் பற்றியோ முக்கியமாகக் குறிப்பது அல்ல. அதைக் காட்டிலும் பவுல், சரித்திர பூர்வமாக தேசங்களையும், மக்களையும் தேவன் நிர்வகிக்கும் விதம் பற்றியே முக்கியமாக விவாதிக்கிறான். அதாவது, சில குறிப்பிட்ட தேசங்களையும், மக்களையும் தேவன் தெரிந்தெடுத்து உபயோகப்படுத்தும் அவருடைய உரிமை பற்றியதாகும். உதாரணமாக, தனிப்பட்ட மனிதனாகிய யாக்கோபை, ஏசாவுக்கு மேலாகத் தேர்ந்தெடுத்தது (ரோம 9:11) அவர்களிலிருந்து உருவாகிய இஸ்ரவேல் தேசத்தையும், ஏதோம் தேசத்தையும் நிலைநிறுத்தி, அவைகளைப் பயன்படுத்தும் நோக்கத்தோடு தேர்ந்தெடுத்ததாகும்.அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் நித்தியகால இலக்கான இரட்சிப்புக்கோ அல்லது ஆக்கினைத் தீர்ப்புக்கோ சம்பந்தப்பட்டதல்ல. குறிப்பிடப்படவேண்டியது என்னவென்றால் தேவன், தாம் தெரிந்து கொண்ட தனிநபரையோ, தேசத்தையோ அழைத்து அவர்களிடம் பொறுப்பைக் கொடுக்கும் உரிமை உள்ளவர் என்பதேயாகும்.
2) யூத இனத்தாருக்காக இடைவிடாத மனவேதனையும், மிகுந்த துக்கமும் கொண்டுள்ளதாகப் (9:1-3) பவுல் தெரிவிக்கிறான். தன் தேசத்து மக்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று பவுல் வேண்டிக்கொள்கிற அந்த உண்மையிலிருந்து, தாங்கள் பிறப்பதற்கு முன்னதாகவே எல்லா மக்களும் பரலோகத் திற்கோ, நரகத்திற்கோ முன்குறிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று போதிக்கிற முன் தீர்மானிக்கும் வேத சாஸ்திர பகுதியை அவன் நம்பவில்லை என்று தெரிகிறது அதற்கும் மேலாக யூத மக்களைப் பற்றிய தேவனுடைய ஆசையின் (ரோம 10:21; லூக் 19:41) பிரதிபலிப்பே பவுலின் இருதயபூர்வமான விருப்பமும், ஜெபமு மாகும். சிலமக்கள், உலகத்திற்கு வருவதற்கு முன்னமே, நாகத்திற்கென்று முன் தீர்மானிக்கப்பட்டுள்ளார்கள் என்று புதிய ஏற்பாடு எந்த இடத்திலும் கூறவில்லை.
3) இந்த முழு விவாதத்திலும், மிக முக்கியமான ஆதாரப் பொருள் விசுவாசத்தின் பலன் ஆகும். இஸ்ரவேலரில் பெரும்பான்மைப் பகுதியினரின் ஆவிக்குரிய இழந்துபோன நிலை, தேவனுடைய தன்னிச்சையான விதிக்குக் கட்டுப்படாத ஏதோ ஒரு தீர்மானத்தினால் திட்டமிடப்பட்டதோ, குறிக்கப் பட்டதோ இல்லை, ஆனால், அது கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தினால் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்துக்குக் கீழ்ப்படிய அவர்கள் மனமற்றவர் களாயிருந்தததின் விளைவேயாகும். (ரோம, 9:33; 10:3; 11:20) அநேக புறஜாதிகள் தேவனுடைய விசுவாசத்தின் வழியை ஏற்றுக்கொண்டு, விசு வாசத்தினால் வரும் நீதியைச் சுதந்தரித்துக் கொண்டார்கள். அவர்கள் விசுவாசத்தினால் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, "ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளை களாக" ஆனார்கள். (9:25-26). தேவனுடைய அழைப்பையும் தெரிந்தெடுத்தலையும் பொறுத்தமட்டில் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிவதின் முக்கிய தத்துவத்தை அது கீழே கோடிட்டுக் காட்டுகிறது.
(1:5; 16:26).
4) தன்னுடைய அவிசுவாசத்தில் தொடர்வதை நிறுத்திவிட்டால் இஸ்ரவேல் தேசத்துக்கு இன்னும் நம்பிக்கை உண்டாயிருக்கும். (ரோம 1:23) அதேபோல், தேவனுடைய சபையில் இப்போது பங்குள்ளவர்களாமிருக்கும் புறஜாதியான விசுவாசிகளும் கூட இரட்சிப்பிலிருந்து துண்டிக்கப்படவும்
சாத்தியமுண்டு என்று எச்சரிக்கப்படுகிறார்கள். ஆகவே, இஸ்ரவேலரைப் போலவே அவர்களும் பயத்தோடு விசுவாசத்தில் ஜாக்கிரதையோடு தொடரவேண்டும். (11:20-23). அந்த எச்சரிக்கை பவுல் எழுதிய காலத்தில் எவ்வளவு உறுதியாயிருந்ததோ அதேபோல் இன்றைக்கும் ஸ்திராமாயுள்ளது.
5) இஸ்ரவேலர் மேசியாவை ஏற்றுக் கொள்வதின் மூலம் அவர்களுடைய மீட்பு அதிசயிக்கத்தக்கதாக நடைபெறும் என்பதற்குரிய வேதவாக்கியங்கள். வாக்குத்தத்தங்களினால் நிறைந்திருக்கின்றன. இந்த மீட்பு கிறிஸ்துவின் வருகைக்கு சற்று முன்பு மகா உபத்திரவ நாட்களின் முடிவில் நடைபெறும் (ஏசா 11:10-16, 24:17-24, 49:22-26, எரே 31:31-34, எசே 37:12-14, ரோம 1126, வெளி 12:6;) ஆகியவற்றைப் பார்க்கவும்).
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
WhatsApp
9841 711 591.
Comments