வசனத்தை கொண்டு எதிர் வாதம்
வேத வசனங்களை ஆதாரமாகக் கொண்டு பேசினாலும், அதற்குப் பதில் வசனங்களைக் கொண்டே எதிர்வாதம் செய்பவர்கள் மற்றும் வீண் விவாதங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து வேதம் தரும் சிலமுக்கியமான ஆலோசனைகள்:
சத்தியத்தைப் புரட்டுதல்:
வேத அறிவில் உறுதி இல்லாதவர்கள் தங்களுக்குக் கேடுண்டாகும்படி திருவசனங்களைத் தாறுமாறாகப் புரட்டுவார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது.
( 2 பேதுரு 3:16)
புத்தியில்லாத விவாதம்:
வீணான தர்க்கங்களும், வேதவசனம் குறித்த தேவையற்ற வாக்குவாதங்களும் எதற்கும் பிரயோஜனப்படாது, அவை கேட்பவர்களைக் கெடுப்பதற்கு மட்டுமே ஏதுவாகும்.
(2 தீமோத் 2:14)
தர்க்கங்களைத் தள்ளிவிடுதல்:
சண்டைகளை உண்டாக்குகிற புத்தியில்லாத மற்றும் அறிவில்லாத தர்க்கங்களுக்கு விலகியிருக்க வேண்டும் என பவுல் அறிவுறுத்துகிறார்.
(2 தீமோ 2:23)
சாந்தத்துடன் பதில் சொல்லுதல்:
எதிர்த்துப் பேசுகிறவர்களுக்குச் சாந்தமாய் உபதேசிக்க வேண்டும். ஒருவேளை தேவன் அவர்களுக்குச் சத்தியத்தை அறியும் மனந்திரும்புதலைக் கட்டளையிடலாம்.
( 2 தீமோ 2:25)
மூடனுக்குப் பதில் சொல்லாதே:
மூடனுடைய மதியீனத்தின்படி அவனுக்குப் பதில் சொல்லாதே; சொன்னால் நீயும் அவனைப் போலாவாய் என்று நீதிமொழிகள் கூறுகிறது.
(நீதிமொழி 26:4)
பிரிவினை உண்டாக்குகிறவனை விலக்கு:
ஒருவன் தொடர்ந்து வீண் விவாதங்களைச் செய்து பிரிவினையை உண்டாக்கினால், ஒன்று இரண்டு முறை எச்சரித்த பின் அவனை விட்டு விலக வேண்டும்.
(தீத்து 3:10)
அமைதியே மேன்மை:
வாக்குவாதத்தை நிறுத்துவது மனுஷனுக்குக் கனம்; ஆனால் மூடன் எவனும் சண்டையில் தலையிடுவான்.
(நீதிமொழி 20:3)
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், விவாதத்தைத் தொடராமல் அமைதியைக் காப்பதும், சத்தியத்தை அன்புடன் அறிவிப்பதும் மிகச் சிறந்தது. அறிவுறுத்துகிறது பரிசுத்த வேதாகமம்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments