விசுவாசிகளுக்கான ஆவிக்குரிய வரங்கள்.
விசுவாசிகளுக்கான ஆவிக்குரிய வரங்கள்:
1 கொரி 12:7 "ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது".
பொதுவான தோற்றம்: விசுவாசிகளுக்குக் கொடுக்கப்படும் பலவிதமான ஆவிக்குரிய வரங்கள் மூலம் பரிசுத்த ஆவி யானவர் வெளிப்படுகிறார். (1கொரி 12:7) இவ்விதமான ஆவியானவரின் வெளிப்பாடுகள், சபை கட்டுப்படுவதற்கும், அது தூய்மைப்படுத்தப்படுவதற்குமான நோக்கத்தோடு செயல்படுகின்றன.
(1 கொரி 12:7; 14:26) இந்த ஆவிக்குரிய வரங்கள் (ரோம 12:6-8 இலும் எபே 4:11 இலும்) குறிப்பிடப்பட்டுள்ள வரங்களும் ஊழியமும் போலாவை அல்ல. அதில் ஒரு விசுவாசி சபையில் நிரந்தரமாய் ஊழியஞ்செய்ய வல்லமையும் தகுதியும் பெறுகிறார். 1கொரி 12:8-10ல் கொடுக்கப்பட்ட பட்டியல் பூரணமானதல்ல, வரங்கள் வித்தியாசமான முறையில், சேர்ந்தும் வரும்.
(1) ஆவியானவரின் சித்தப்படி
(1 கொரி 12:11) தேவைகள் உண்டாகும் போதும், விசுவாசியின் மிகுந்த ஆவலுக்குத் தக்கதாகவும் ஆவியின் வெளிப்பாடுகள் கொடுக்கப்படுகின்றன. (12:31:14:1).
(2) சில வரங்கள் ஒழுங்கான அடிப்படையில் சாதாரணமாக ஒரு தனிநபர் மூலம் வெளிப்படலாம். விசேஷ தேவை களுக்கு, ஒரு விசுவாசியிடம் ஒரு வரத்திற்கு மேல் அதிகமாக, ஊழியத்திற்கென கொடுக்கப்படலாம். விசுவாசி ஒரு வரத்திற்கு மாத்திரமல்ல. பல "வரங்கள்" பெற ஆசையோடு இருக்க வேண்டும்.
(1 கொரி 12:31, 14:1)
(3) ஒருவர் ஒரு அதிசயக்கத்தக்க வரத்தைச் செயல்படுத்துவதினால் அதிசயம் குறைவான வரங்களை உடையவரை விட, மேலாக ஆவிக்குரியவர் என்று நாமாக நினைப்பது வேத வசனங்களுக்குப் புறம்பானதும், ஞானமற்றதுமானதாகும். மேலும், ஒருவர் வரம் உள்ளவராயிருப்பதால் அவர் செய்வது, போதிப்பது. எல்லாவற்றையும் தேவன் அங்கீகரிக்கிறார் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. ஆவிக்குரிய வரங்களை, கிறிஸ்தவ நன்னடத்தைக்கும், பரிசுத்தமாகுதலுக்கும் நேராக நடத்தும் ஆவியின் கனியோடு குழப்பக் கூடாது.
(கலா 5:22-23),
(4) வரங்களின் மூலம் வரும் ஆவியானவரின் வெளிப்பாடு சாத்தானாலோ, கிறிஸ்துவின் ஊழியக்காரர்போல வேஷமணிந்த கள்ள வேலைக்காரராலோ, அதைப் போலவே செயல்படுத்தப்படலாம். பிறரை ஏமாற்ற முடியும். (மத் 7:21-23; 24:11,24; 2 கொரி 11:13-15; 2 தெச 2:8-10), விசுவாசி, ஆவிக்குரிய வெளிப்பாடு ஒவ்வொன்றையும் நம்பிவிடக்கூடாது, ஆனால் “உலகத்தில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவி கள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்."
(1 யோவா 4:1; 1 தெச 5:20-21;)
தனி நபருக்குரிய வரங்கள்:
1 கொரி 12:8-10 இல் பவுல் விசுவாசிகளுக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பலவிதமான வரங்களைப் பட்டியல் படுத்துகிறான். அவற்றின் குணாதிசயங்களை இங்கு வரையறுக்காவிட்டாலும் அவைகள் எப்படிப் பட்டவைகள் என்று வேதவசனங்களின் மற்ற பகுதிகளிலிருந்து ஆராய்ந்து சேகரிக்கமுடியும்.
(1) ஞானத்தைப் போதிக்கும் வசனம். இது பரிசுத்த ஆவியின் கிரியையினால் பேசப்படும் ஞானமுள்ள பேச்சாகும். இது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அல்லது பிரச்சனையில் தேவனுடைய வார்த்தை அல்லது பரிசுத்த ஆவியின் ஞானம் வெளிப்படுவதைக் குறிக்கிறது.
(அப் 6:10; 15:13-22) ஆயினும், அது அன்றாட வாழ்க்கையில் பயன்படும் தேவனுடைய ஞானத்தைப் போலுள்ளது அல்ல. அது தேவனுடைய வழிகளையும், வார்த்தையையும் ஊக்கத்தோடு படித்து தியானிப்பதாலும், ஜெபத்தினாலும் பெற்றுக்கொள்ளப்படுகிறது. (யாக் 1:5-6).
(2) அறிவை உணர்த்தும் வசனம் இது மக்களைப் பற்றியும், சூழ்நிலைகளைப் பற்றியும், அல்லது வேதாகம சத்தியத்தைப் பற்றியும் அறிவை உண் டாக்கக்கூடிய, பரிசுத்தாவியினால் அருளப்படும் வார்த்தைகள். இது தீர்க்க தரிசனத்தோடு அடிக்கடி நெருங்கிய தொடர்போடுள்ளது. (அப் 5:1-10 10:47-48; 15:7-11; 1கொரி 14:24-25).
(3) விசுவாசம். இது இரட்சிப்புக் கேதுவான விசுவாசம் அல்ல. ஆனால், இது கிறிஸ்தவன் அசாதாரணமான, அற்புதங்களுக்கு தேவனை விசு வாசிக்கும்படி செய்யும் பரிசுத்தாவியினால் கொடுக்கப்பட்ட ஒரு சிறப்பான, இயற்கைக்கு அப்பாற்பட்ட, மேலான விசுவாசமாகும். இது "மலைகளைப் பேர்க்கத்தக்கதான "ஒரு விசுவாசம்
(1 கொரி 13:2)
இது அடிக்கடி மற்ற வெளிப்பாடுகளான சுகமாக்குதல், அற்புதங்கள் நடப்பித்தல் போன்றவைகளோடு கலந்து காணப்படுகிறது.
(மத் 17:20. மாற் 11:22-24; லூக் 17:6).
(4) குணமாக்கும் வரங்கள்.
இந்த வரங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட மேலான சக்தியினால் சரீர சுகம் திரும்பக் கிடைக்கும்படி சபைக்கு அருளப்பட்டவை.
(மத் 4:23-25, 10:1; அப் 3:6-8, 4:30)
பன்மை (வரங்கள்) பயன்படுத்தப்பட்டிருப்பது பலவகைப்பட்ட நோய்களைக் குணமாக்குவதைக் குறிக்கிறதோடு, ஒவ்வொரு சுகமாக்கும் செயலும் தேவனிடமிருந்து வரும் சிறப்பான வரம் என்றும் தெரிவிக்கிறது. குணமாக்கும் வரம், சபையாகிய சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஒரு தனிப்பட்ட வழியில் கொடுக்கப்படாவிட்டாலும் (1 கொரி 12:11,30), எல்லா அங்கத்தினரும் வியாதியா இருப்பவருக்கு ஜெபிக்கலாம். விசுவாசம் அங்கே இருக்கும்போது, வியாதியுள்ளோர் சுசுமாவார்கள். ஆரோக்கியம்,
(யாக் 5:14-16) இல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும்போது கூட வரும்.
(5) அற்புதங்களைச் செய்யும் சக்தி, இயற்கையின் சாதாரண நிலையை மாற்றும், இயற்கைக்கு அப்பாற்பட்ட, மேலான சக்தியினால் செய்யப்படும் செயல்கள். அவை சாத்தானுக்கும், தீய ஆவிகளுக்கும் விரோதமாக, தேவனுடைய இராஜ்யம் வெளிப்படும்படியான தெய்வீக செயல்களைக் கொண்டது.
(6) தீர்க்கதரிசனம் உரைத்தல். தீர்க்கதரிசனம் உரைத்தலில் ஆவியானவரின் தற்காலிகமான வெளிப்பாடாகிய தீர்க்க தரிசனத்துக்கும் (1 கொரி 12:10), சபையின் ஊழிய வரமாகிய தீர்க்கதரிசனத்துக்கும் (எபே 4:11) உள்ள வேறுபாட்டை நாம் அறியவேண்டும். ஊழிய வரமாக, தீர்க்கதரிசனம் உரைத்தல், சில விசுவாசிகளுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சபைக்குள்ளாக தீர்க்கதரிசியாக செயல்புரியவேண்டும். ஆவியினால் நிரப்பப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஆவிக்குரிய ஒரு வெளிப்பாடாக தீர்க்கதரிசனம் உரைப்பது சாத்தியமாகும்.
(அப் 2:17-16).
ஆவிக்குரிய வெளிப்பாடாக தீர்க்கதரிசனம் உரைப்பது:
(அ) தீர்க்கதரிசனம், பரிசுத்தாவியின் தூண்டுதலினால் ஒரு விசுவாசி, தேவளிடமிருந்து நேரிடையாக ஒரு வார்த்தையையோ, ஒரு வெளிப்பாட்டையோ கொண்டு வரக்கூடிய, ஒரு விசேஷித்த வரமாகும்.
(1 கொரி 14:24-25, 29-31),
அது ஏற்கெனவே ஆயத்தம் பண்ணப்பட்டு கொடுக்கப்படும் பிரசங்கம் அல்ல.
(ஆ) பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் தீர்க்கதரிசனம், முக்கியமாக வருங்காலத்தை முன்கூட்டியே சொல்லுவது அல்ல, ஆனால் தேவனுடைய சித்தத்தை அறிவிப்பதும், தேவனுடைய மக்கள் நீதி, விசுவாசம், சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்ளும்படி உற்சாகப்படுத்தி, தைரிய மூட்டுவதுமாகும்.
(இ) ஒரு மனிதனுடைய இருதயத்தின் நிலை மையை, அந்த செய்தி வெளிப்படுத்தும் (14:25) அல்லது அவன் பெலப்பட தைரியமடைய, ஆறுதலடைய, எச்சரிக்கப்பட நியாயந்தீர்க்கப்பட உதவும். (14:3: 25-26, 31)
(ஈ) சபையில் அப்படிப்பட்ட தவறில்லாத செய்தி கிடைக்காமலுமிருக்கும், ஏனென்றால் அநேக கள்ள தீர்க்கதரிசிகள் சபையில் நுழைவாரர்கள்.
(1 யோவா 4:1)
ஆகவே, எல்லா தீர்க்கதரிசனமும், அது தேவனுடைய வார்த்தைக்கு ஒத்திருக்கிறதா
(1 யோவா 4:1) என்றும், அது தேவ பக்திக்கேதுவான வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கக்கூடியதா (1 தீமோ 6:3) என்றும், அது கிறிஸ்துவின் ஆளுகைக்குள்ளடங்கி உண்மையான நல்வாழ்க்கை நடத்தும் ஒருவரால் உரைக்கப்படுகிறதா
(1 கொரி 12:3)
என்றும், எல்லா தீர்க்கதரிசனமும், அதனுடைய போலியில்லாத உண்மைத்தன்மையோடு இருக்கிறதா என்றும் பரிசோதிக்கப்படவேண்டும்.
(உ) தீர்க்கதரிசனம் தேவனுடைய சித்தத்தின் கீழடங்கி செயல்படுகிறதே யொழிய, மனிதருடைய சித்தத்தினால் செயல்படுவது இல்லை. புதிய ஏற்பாடு ஒருபோதும் தீர்க்கதரிசிகள் என்று சொல்லப்படுபவரிடம் சபை வெளிப்பாட்டையோ, வழிகாட்டுதலையோ ஊக்கமாக நாடினதாகக் குறிப்பிடவில்லை.
தேவன் செய்தியை ஆரம்பிக்கும்போது மாத்திரம், சபைக்கு தீர்க்கதரிசனம் கொடுக்கப்பட்டது.
(1 கொரி 12:11; 2 பேது 121).
(7) ஆவிகளைப் பகுத்தறிதல். இந்த வரம் சரியானபடி தீர்க்கதரிசனங்களைப் பகுத்தறிந்து, நியாயந்தீர்க்கவும், சொல்லப்படும் வார்த்தைகள் பரிசுத்தாவியினால் உண்டானதா இல்லையா என்று பகுத்தறியவும் பயன்படும் ஆவியினால் கொடுக்கப்பட்ட ஒரு சிறப்பான தகுதியாகும்.
(1 கொரி 14:29; 1 யோவா 4:1 ஐயும் பார்க்கவும்.) வேதாகமம் கூறும் கிறிஸ்தவத்தைத் திரித்துக் கூறுபவர்களும் அதிக மாகப் பெருகும்போது (1 தீமோ 4:1ன்படி சபைக்கு இந்த வரம். அதிக முக்கியமானதாக இருக்கும்.
(8) பற்பல பாஷைகளைப் பேசுவது. பரிசுத்தாவியினால் இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடாக பற்பல பாஷைகளைப் பேசுவது
(கிரே கிளாஸா. மொழி என்றும் அர்த்தம்) பற்றிய விஷயத்தில், பின்வருபவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
(அ) பற்பல பாஷைகள் என்னும்போது தற்போது பேசப்படும் ஒரு மொழியாகவோ (அப் 2:4-6) அல்லது பூமியில் அறியப்படாத ஒரு மொழியாகவோ உதாரணம் "தூதர் பாஷைகளாகவோ இருக்கலாம்"
(1 கொரி 13:1, 14ம் அதிகாரங்களில் அப்படிப்பட்ட பேச்சு கற்றுக்கொள்ளப்பட்ட தொன்றல்ல, ஆனால் அதைப் பேசுகிறவர்களுக்கும் (14:14), அதைக் கேட்கிறவர்களுக்கும் (14:16) பொதுவாக புரியாததாகும்.
(ஆ) அந்நிய பாஷைகளில் பேசுவதால் மனிதருடைய ஆவியும், தேவனுடைய ஆவியும் ஒன்றாகக் கலந்து இணைகிறது. ஆகவே, விசுவாசி தேவனிடம் நேரிடையாக ஐக்கியம் கொள்கிறார். (அதாவது ஜெபத்திலும், ஸ்தோத்தரிப்பதிலும், ஆசீர் வதிப்பதிலும், நன்றி செலுத்துவதிலும்) அவர் தன் மனதி லிருந்து பேசாமல், அவருடைய ஆவியின் மட்டத்திலிருந்து வெளியிடவோ அல்லது பேசவோ செய்கிறார். (1கொரி 14:2,14) அவர் தன் மனதளவில் செயல்படாமல் பரிசுத்தாவியின் நேரிடையான தூண்டுதலினால் ஒருவருக்காகவோ, அல்லது மற்றவர்களுக்காகவோ ஜெபிப்பார். (1 கொரி 14:2,4,15,28: யூதா 20).
(இ) சபையில் அந்நிய பாஷை பேசுவதோடு, சபையிலுள்ள விசுவாசிகளுக்கு பேசப்படுகிறவைகளின் சாராம்சத்தையும், அர்த்தத்தையும் பரிசுத்தாவியின் அருளினால் மொழிபெயர்ப்பதும் சேர்ந்து வரவேண்டும். (1 கொரி 14:3; 27-28) அதில் சபையினருக்கு ஒரு வெளிப்பாடு, அறிவு, தீர்க்கதரிசனம் அல்லது போதகம் ஆகியவை அடங்கி யிருக்கும். (1 கொரி 14:6).
(ஈ) சபையினரின் நடுவே அந்நிய பாஷை பேசுவது ஒழுங்குபடுத்தப்படவேண்டும். பேசுபவர் ஒருபோதும் "பரவசப்பட்டோ", அல்லது "அடக்கமுடியாத நிலையிலோ" இருக்கக் கூடாது. (1 கொரி 14:27-28;)
(9) பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்,
இது அந்நிய பாஷைகளில் பேசப்பட்டவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அறிவிக்கத்தக்கதாக ஆவியானவரால் கொடுக்கப்பட்ட திறமையாகும். சபையினருக்காக மொழி பெயர்க்கும்போது, அந்நிய பாஷையில் பேசுவது ஆராதிப்பதற்கும், ஜெபத்திற்கும், வழிகாட்டக் கூடியதாக அல்லது தீர்க்கதரிசனமாக செயல்படுகிறது. அதனால், சரீரமாகிய விசுவாசிகள் ஆவியினால் அருளப்பட்ட இப்படிப்பட்ட வெளிப்பாடுகளில் பங்கு கொள்ள முடியும். (14:6,13) இந்த வரம் அந்நிய பாஷைகளில் பேசுகிற ஒருவருக்காவது அல்லது வேறு யாருக்காவது அருளப்படும். அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதை மொழி பெயர்க்கும் வரத்தையும் பெறும்படி ஜெபிக்கவேண்டும்.
(1 கொரி 14:13).
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
WhatsApp 9841 711 591
Comments