மூன்று வகையான மக்கள்



மூன்று வகையான மக்கள்:
1 கொரி 2:14-15 "ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்."

அடிப்படையான பிரிவு: மனிதர் யாவரையும் வேதாகமம் இரண்டு வகுப்பினராகப் பிரிக்கின்றது.

(1) ஜென்ம சுபாவமுள்ள அல்லது மாம்சீகமான ஆண் அல்லது பெண் என்பது (கிரேக்க மொழியில் சுகிகோஸ்; 1 கொரி 2:14) மறுபிறப்படையாத மனிதரைக் குறிக்கிறது. அதாவது ஒருவர் தம் இயற்கை சுபாவத்தினால் நடத்தப்படுவது. 
(2 பேது 2:12) இப்படிப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க மாட்டார்கள் (ரோம 8:9), சாத்தானின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறார்கள். (அப் 26.18) சரீரத்துக்கும், அதன் இச்சைகளுக்கும் அடிமைப்பட்டிருக்கிறார்கள். (எபே 2:3) அவனோ அவளோ உலகத்துக்குச் சொந்தமானவர்கள், அதனிடம் அனுதாபமுள்ளவர்கள் (யாக் 4:4), ஆவியானவருடைய நீதியின் வழிகளைப் புறக்கணிக்கிறவர்கள். (1 கொரி 2:14) ஆவியில்லாத மனிதன் தேவனையும், அவருடைய வழிகளையும் அறிந்துகொள்ள மாட்டான். ஆனால், அதற்குப் பதிலாக மனிதனின் பகுத்தறிவு, உணர்ச்சிகளைச் சார்ந்து இருக்கிறான்.

(2) ஆவிக்குரிய ஆணோ அல்லது பெண்ணோ (கிரேக்க மொழியில் நிமற்றிகோஸ், 1 கொரி 2:15; 3:1) மறுபடியும் பிறந்த மனிதனை அதாவது பரிசுத்த ஆவியுள்ள மனிதனை அடையாளம் கண்டுகொள்கிறான். இந்த மனிதன் ஆவிக்குரிய சிந்தை கொண்டவனாக, தேவனுடைய நினைவுகளின் படி நினைக்கிறவனாகவும் (1 கொரி 2:11-13), தேவனுடைய ஆவியின்படி நடக்கிறவனாகவும் (ரோம 8:4-17; கலா 5:16-26) இருக்கிறான். அப்படிப்பட்ட தனி மனிதன் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, உள்ளத்துக்குள் வாசம் பண்ணும் ஆவியானவரின் வழிநடத்துதலின்படி நடக்க முயற்சித்து, சிற்றின்ப ஆசைகளையும், பாவத்தின் ஆளுகையையும் எதிர்க்கிறான். 
(ரோம 8:13-14)

எவ்வாறு ஒருவர் ஆவிக்குரிய மனிதனாக, பெண்ணாக மாறுகிறார்?
 ஒரு மனிதன் கிறிஸ்துவின் மூலம் அருளப்படும் இரட்சிப்பை விசுவாசத்தினால் ஏற்றுக் கொள்ளும் போது, அவனோ அல்லது அவளோ மறுபிறப்படைகிறார்கள்; பரிசுத்தாவி மூலம் அவனுக்கோ, அவளுக்கோ தெய்வீக ஜீவன் உள்ளே வருவதால் ஒரு திவ்விய சுபாவம் உண்டாகிறது. (2 பேது 14;) அவளோ அல்லது அவளோ மறுபடியும் பிறந்து
 (யோவா 3:3,5,7), புதுப்பிக்கப்பட்டு (ரோம 12:2) 
ஒரு புதிய சிருஷ்டியாகி 
(2 கொரி 5:17). கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனுடைய நீதியைப் பெறுகிறார்கள். 
(பிலி 3:9)

கிறிஸ்தவர்களுக்குள்ளே உள்ள மற்ற வித்தியாசங்கள். மறுபடியும் பிறந்த விசுவாசிகள் ஆவியானவரின் புதுவாழ்வைப் பெற்றிருந்தாலும் அவர் களுக்குள் தீய விருப்பங்களையுடைய மாம்சீக தன்மை தங்கி இருக்கும். 
(கலா 5:16-21) அவர்களுக்குள் இருக்கும் மாம்சீக சுபாவத்தை நல்லதாக்க முடியாது; ஆவியானவரின் வல்லமையினாலும், கிருபையினாலும் அதை சாவுக்குள்ளாக்கி மேற்கொள்ளவேண்டும். (ரோம 8:13) விசுவாசிகள் அனு தினமும் தங்களைத் தாங்களே வெறுத்து (மத் 16:24; ரோம 8:12-13; தீத்து 212) ஒவ்வொரு தடையையும் அல்லது பாவத்தையும் நீக்கியும் (எபி 12:1) எல்லா பாவச்சோதனைகளையும் எதிர்த்து நின்றும் மேற்கொள்கிறார்கள். (ரோம 13:14; கலா 5:16; 1 பேது 2:11) ஆவியானவரின் வல்லமையினால் விசுவாசிகள் மாம்சீக கிரியைகளுக்கு விரோதமாகத் தாங்களே போரிடுகிறார்கள். (ரோம 8:13-14; கலா 5:16-18), 
அதை சிலுவையிலறைகிறார்கள். 
(கலா 5:24), தினந்தோறும் அதை அழிக்கிறார்கள். (கொலோ 3:5) 
இந்த விதமான சுய மறுப்புக்கும், பரிசுத்த ஆவியானவரின் தூய்மைப்படுத்தும் வேலைக்கும் தங்களை ஒப்புக்கொடுக்கும்போது, அவர்கள் தங்கள் மாம்சீக கிரியைகளின் வல்லமையிலிருந்து விடுதலை பெற்று, ஆவிக்குரிய கிறிஸ்த வர்களாக வாழ்கிறார்கள்.
(ரோம 6:13,கலா 5:16).

இந்த மாம்சீக சுபாவத்தை மேற்கொள்ள எல்லா கிறிஸ்தவர்களும் போதுமான அளவு முயற்சி எடுப்பதில்லை. கொரிந்தியருக்கு தன் எண்ணங்களைத் தெரிவிக்கும்போது பவுல் (1 கொரி 311,3) அவர்களில் சிலர் உலகப்பிரகாரமாக, ஆவியற்ற விதமாக நடந்துகொள்கிறார்கள். (கிரேக்க மொழியில் சர்சிகோஸ்); தங்கள் மாம்சீக சுபாவத்தின் விருப்பங்களுக்கு விரோதமாகத் தொடர்ந்து போராடாமல் அடிக்கடி அவைகளில் சிலவற்றிற்காவது அடி பணிந்து விடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து கீழ்ப்படியாமையில் நிலைநிற்காவிட்டாலும், அவர்கள் தேவனுடைய மக்களாக இன்னும் இருக்க விரும்பினாலும் உலகம், மாமிசம், பிசாசுக்குத் தங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளில் ஒத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். (10:21, 2 கொரி 6:14-18; 1:3; 13:5) என்று குறிப்பிடுகிறான்.

(1) உலகப்பிரகாரமான கிறிஸ்தவர்களின் நிலைமை பாலமும், போராட்டமும் அவர்கள் வாழ்க்கையில் ஆட்சி செய்யாமலிருந்தாலும் தேவனுடைய இராஜ்யத்திலிருந்து அவர்களைப் பிரிக்கக்கூடிய பயங்கரமான விபசாரத்துக்குள்ளும் அநீதிக்குள்ளும் அவர்கள் செல்லாவிட்டாலும் 
(1கொரி 6:9-16 கலா 5:21; எபே 5:5) இந்த உலகப்பிரகாரமான கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்துவின் இரட்சிப்பை முழுமையாக அறியாத, புதிதாய் மனந்திரும்பிய வர்கள் போல நடித்துக்கொண்டு தாங்கள் கிருபையில் கொஞ்சமும் வளராதவர்கள்போல் நடந்துகொண்டார்கள். ( 1 கொரி 3:1-2) "பொறாமையும் வாக்குவாதமும்" அவர்கள் உலகப்பிரகாரமானவர்கள் என்பதைக் காட்டியது. (3:3) சபையில் காணப்படும் விபசாரத்தைக் குறித்து அலட்சியமாயிருந்து அதை சகித்துக் கொண்டார்கள். (5:1-13; 6:13-20) தேவனுடைய வார்த்தையையோ, அல்லது அவருடைய அப்போஸ்தலரையோ முழுக்கருத்தோடு ஏற்றுக்கொள்ளவில்லை. (4:18-19) அற்பமான வழக்குகளுக்கு அவர்கள் நீதி மன்றங்களுக்குச் சென்றார்கள் (6.6) பாலுறவில் ஒழுக்கக் கேடானவர்களும், மற்ற பயங்கரமான பாவஞ்செய்தவர்களும் கிறிஸ்துவின் இரட்சிப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று பவுல் கருதுவதைக் கவனிக்கவும். (1கொரி 5:1; 9-11, 6:9-10).

(2) உலகப்பிரகாரமான கிறிஸ்தவர்களின் அபாயம் கொரிந்து பட்டணத்திலுள்ள உலகப் பிரகாரமான கிறிஸ்தவர்களிடம், அவர்கள் கிறிஸ்துவிடம் உண்மையான பற்றுதலோடு இருப்பதிலிருந்து விலகி, (2 கொரி 11:3) அதிகமதிகமாக உலகத் தோடு ஒத்துப்போகக் கூடிய 
(2 கொரி 6:14-18) அபாயம் இருந்தது. இதனால் அவர்கள் தேவனால் தண்டிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்பட வேண்டியதிருக்கும். அவர்கள் உலகத்தோடு தொடர்ந்து ஒத்துப்போய்க் கொண்டிருந்தால், கடைசியாக தேவனு டைய இராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். 
(1 கொரி 6:9-10,11:31-32) உண்மையில் ஆவிக்குரிய மரணத்தை உண்டுபண்ணும் வெளிப்படையான பாவத்தைச் செய்த அவர்களில் சிலருக்கு ஆவிக்குரிய மரணம் ஏற்கெனவே ஏற்பட்டிருந்தது. 
(1 யோவா 3:15; 5.17; ரோம 8:13; 1 கொரி 5:5; 2 கொரி 12:21; 13:5)

(3) உலகப்பிரகாரமான கிறிஸ்தவர்களுக்கான எச்சரிக்கைகள் 

(அ)உலகப்பிரகாரமான கிறிஸ்தவர்கள், நேவனுக்குப் பிரியமில்லாத எல்லா வற்றிலுமிருந்து தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள மனதில்லாதிருந்தால் அவர்கள் விசுவாசத்தை விட்டு விலகிப் போகும் அபாயத்திலிருக்கிறார்கள்.என்று அறியவேண்டும். (ரோம 6:14-16; 1 கொரி 6:9-10; 2 கொரி 11:3; கலா 6:7-9; யாக் 1:12-16) 

(ஆ) இஸ்ரவேலர் பாவஞ்செய்தபடியால் தேவன் அவர்களை அழித்தார் என்ற பயங்கரமான உதாரணத்திலிருந்து அவர்கள் பாடங்கற்றுக்கொள்ள வேண்டும். (1 கொரி 10:5-12) 

(இ) தேவனுக்குரிய காரியங்களிலும் அதே நேரம் சாத்தானின் காரியங்களிலும் பங்குபெறுவது கூடாத காரியம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். (மத் 6:24; 1 கொரி 10:21) 

(ஈ) அவர்கள் முழுவதுமாக உலகத்தை விட்டுப் பிரிந்து 
(2 கொரி 6:14–18) “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க சுத்திகரித்துக் கொண்டு பரிசுத்தமாகுதலைத் தெய்வ பயத்தோடே பூரணப்படுத்தி” தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். 
(2 கொரி 7:1).
என்பதை வேதம் நமக்கு வலியுறுத்துகிறது. தொடர்ந்து வேதத்தை வாசித்த பயனடையுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா. WhatsApp 9841 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை