விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகள் (3)

அப்போஸ்தலனாகிய பேதுரு தனது நிருபங்களில் திருச்சபை விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டிய ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களை மேலும் சில குறிப்புகளாக இங்கே காணலாம்:


1. விசுவாசத்தின் பரீட்சை பொன்னைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றது
நமது விசுவாசம் சோதிக்கப்படும்போது அது அழிந்துபோகும் பொன்னைப் பார்க்கிலும் அதிக மதிப்பானது. நெருப்பினால் சுத்திகரிக்கப்படும் பொன்னைப்போல, சோதனைகள் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்துகின்றன.
வசனம்: "அழிந்துபோகிற பொன் நெருப்பினால் சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு..." 

(1 பேதுரு 1:7).


2. புதிய எருசலேமின் ஜீவனுள்ள கற்கள்

விசுவாசிகள் ஒவ்வொருவரும் ஒரு ஆவிக்குரிய மாளிகையாகக் கட்டப்படுவதற்கு "ஜீவனுள்ள கற்களாக" இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து அந்த மாளிகையின் மூலைக்கல்லாக இருக்கிறார்.
வசனம்: "நீங்களும் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்... கட்டப்பட்டு வருகிறீர்கள்"

 (1 பேதுரு 2:5).


3.
தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியும் ராஜரீக ஆசாரியக்கூட்டமும்
கிறிஸ்தவர்கள்
உலகத்தாரைப் போன்றவர்கள் அல்ல; அவர்கள் தேவனுடைய சொந்த ஜனங்கள், அரச குலத்தைச் சேர்ந்த ஆசாரியர்கள் என்ற உன்னத அடையாளத்தை பேதுரு வெளிப்படுத்துகிறார்.
வசனம்: "நீங்களோ... தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீக ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" 

(1 பேதுரு 2:9).


4. அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிதல்
தேவனுடைய நாமத்திற்குத் தூஷணம் உண்டாகாதபடி, மனுஷருடைய கட்டளைகளுக்கும், அதிகாரிகளுக்கும் விசுவாசிகள் கீழ்ப்படிய வேண்டும் என்பது பேதுருவின் முக்கிய சத்தியமாகும்.
வசனம்: "நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்" 

(1 பேதுரு 2:13).


5. கிறிஸ்துவின் பாடுகளில் பங்கடைதல்
கிறிஸ்து நமக்காகப் பாடுபட்டது நமக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. நாமும் நீதிக்காகப் பாடுபடும்போது அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வசனம்: "கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்" (1 பேதுரு 2:21).


6. கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருடம் போன்றது

தேவன் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றத் தாமதிக்கிறார் என்று எண்ணுபவர்களுக்கு, காலத்தைப் பற்றிய தேவனுடைய பார்வையை பேதுரு விளக்குகிறார்.
வசனம்: "கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்" 

(2 பேதுரு 3:8).


7. புதிய வானமும் புதிய பூமியும்

இந்த உலகம் நெருப்பிற்கு இரையாகும் என்றும், நீதியுள்ள புதிய வானமும் புதிய பூமியும் வரும் என்றும் பேதுரு தீர்க்கதரிசனமாக உரைக்கிறார்.
வசனம்: "அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்" 

(2 பேதுரு 3:13).


இந்த சத்தியங்கள் விசுவாசிகள் தற்காலிக உலகை நோக்காமல், நித்தியமான தேவனுடைய ராஜ்யத்தை நோக்கி ஓட உதவுகின்றன. என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து வேதத்தை வாசிங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை