விசுவாசமும் கிருபையும்.
விசுவாசமும் கிருபையும்
ரோமர் 5:21 “ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது போல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது."
நம்முடைய இரட்சிப்பு தேவனுடைய கிருபையினாலே ஒரு ஈவாக நமக்கு வருகிறது. ஆனால் மனிதர் தம் விசுவாசத்தின் மூலமாகத்தான் அதைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளமுடியும். இரட்சிப்பின் செயல்முறையை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் இந்த இரண்டு வார்த்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இரட்சிப்புக்கேதுவான விசுவாசம்: இரட்சிப்புக்கென்று தேவன் விரும்பும் ஒரே நிபந்தனை, இயேசு கிறிஸ்துவில் விசுவாசமாகும். விசுவாசம் என்பது இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடுவது மாத்திரமல்லாமல், ஆண்டவரும், இரட்சகருமாகிய கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பும் விசுவாசியின் இருதயத்திலிருந்து வரும் ஒரு கிரியையுமாகும். (மத் 4:19; 16:24; லூக் 9:23-25; யோவா 10:4,27, 12:26; வெளி 14:4)
1) விசுவாசத்தைப் பற்றி பதிய ஏற்பாட்டின் கருத்துப்படி நான்கு முக்கிய மூலக்கொள்கைகள் உள்ளன.
அவை
அ)சிலுவையிலறையப்பட்டு, மரித்தோரிலிருந்து எழும்பிய கிறிஸ்துவைத் தம் சொந்த ஆண்டவரும், இரட்சகருமாக உறுதியாக விசுவாசித்து நம்புவதே விசுவாசமாகும். (ரோம 1:17) இருதயத்தின் ஆழத்திலிருந்து விசுவாசிப்பது அதில் அடங்கியுள்ளது. (ரோம 6:17, எபே 6:6; எபி 10:22) அதாலது, புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. போல, கிறிஸ்துவுக்கு நம் சுய சித்தத்தைக் கீழ்ப்படுத்தி, நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுப்பதாகும்.
ஆ) விசுவாசத்தில் மனந்திரும்புதல் உள்ளடங்கும் அதாவது பாவத்திலிருந்து மெய் மனஸ்தாபத்தோடு மனந்திரும்பி (அப் 17:30; 2 கொரி 7:10), கிறிஸ்துவின் மூலம் தேவனிடமாகத் திரும்புவது ஆகும். இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் எப்போதும் பாவத்துக்கு மனஸ்தாபப்படும் ஒரு விசுவாசம். (அப் 2:37-38; மத் 3:2)
இ) விசுவாசத்தில், இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிதல் உள்ளடங்கும். நம் விசுவாசத்தின் மூலமும் தேவனிடம் நமக்கிருக்கும் நன்றியறிதலின் மூலமும் பரிசுத்த ஆவியின் மறுஜென்மக் கிரியையின் மூலமும் அருளப்பட்ட ஜீவனுக்குரிய ஒரு வழியாக அந்தக் கீழ்ப்படிதல் உள்ளது. (யோவா 3:3-6; 14:15,21-24; எபி 5:8-9) அது ஒரு 'விசுவாசத்திற்கு கீழ்ப்படிதல்" ஆகும். (ரோம 15) ஆகவே விசுவாசமும், கீழ்ப்படிதலும் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதபடி இணைந்ததாகும். (ரோம 16:25). பரிசுத்தமாக்குதலுக்கு ஒப்புக் கொடுக்கப்படாத இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் முறை தவறினதும், சாத்தியமில்லாததுமாகும்.
ஈ) விசுவாசத்தில், இயேசு கிறிஸ்துவிடமுள்ள ஒரு இருதய பூர்வமான சொந்த பக்தியும், பற்றுதலும் உள்ளடங்கும். அவரிடமுள்ள நம்பிக்கை, அன்பு, நன்றி, உண்மைப் பற்றின் மூலம் அது வெளிப்படுகிறது. முடிவான சுருத்தில், விசுவாசத்தையும், அன்பையும் சரியானபடி வேறுபடுத்த முடியாது. அது கிறிஸ்துவுக்காகத் தன்னையே கொடுக்கும் சொந்த தியாகச் செயலாகும். (மத் 22:37; யோவா 21:15-17; அப் 8:37; ரோம 6:17; கலா 2:20; எபே 6:6; 1 1:8).
2) ஆண்டவரும், இரட்சகருமாக இயேசுவை விசுவாசிப்பது ஒரு தனிப்பட்ட நேரத்தில் நடக்கும் கிரியையாகவும், அது தொடர்ந்து வாழ்க்கையில் இருக்கவேண்டிய மனப்பான்மையுமாகும். அது நாளுக்குநாள் வளர்ந்து பலப்படுத்தப்பட வேண்டும். (யோவா 1:12) நமக்காக மரித்த, திட்டவட்டமான ஒருவரிடம் நாம் விசுவாசம் வைத்திருப்பதால் (ரோம 4:25; 8:32; 1 தெச 5:9-10), நம் விசுவாசம் மேலும் பெருக வேண்டும்.(ரோம 4:20; 2 தெச 1:3; 1பேது 1:3-9). நம்பிக்கையும், கீழ்ப்படிதலும் விருத்தியாகி பற்றுதலும், பக்தியுமாக மாறுகிறது.
(ரோம 14:8; 2 கொரி 5:15;) பற்றுதலும், பக்தியும் விருத்தியாகி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கிய சிநேக உணர்ச்சியும், அன்புமாக மாறுகிறது. (பிலி 1:21; 3:8-10; யோவா 15:4ன் பின்குறிப்பு: கலா 2:20, ஐ பார்க்கவும) இந்த விசுவாசம், கிறிஸ்துவுக்குள், தேவனோடு ஒரு புதிய தொடர்பை நமக்குள் கொண்டு வந்து நம்மை அவருடைய கோபத்திற்கு விலக்கி விடுகிறது. (ரோம 1:18; 8:1) அந்த புதிய தொடர்பினால் நாம் பாவத்திற்கு மரித்திருக்கிறோம். (ரோம 6:1-18) பரிசுத்தாவியானவர் நமக்குள்ளே வாசம் செய்கிறார்.
(கலா 3:5;4:6).
கிருபை:
பழைய ஏற்பாட்டில் தேவன் தம் மக்களுக்கு அன்பைக் காண்பித்து, தம்மை கிருபையும் இரக்கமுமுள்ள தேவனாக வெளிப்படுத்தினார். அவர் அவ்வாறு நடந்து கொண்டது அவர்கள் அதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் என்பதற்காக அல்ல, ஆனால் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை உண்மையாக நிறைவேற்றும்படி விருப்பம் கொண்டதினாலேயே ஆகும். (யாத் 6:9) புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் அதைப் பற்றி தொடர்ந்து எழுதினார்கள்; கிருபை என்பது விசுவாசிகளுக்கு, பரிசுத்த ஆவியினால், கிறிஸ்து இயேசுவின் மூலம் கொடுக்கப்படும். தேவனுடைய பிரசன்னமும், அன்புமாகும், அது அவர்களுக்கு இரக்கத்தையும், பாவமன்னிப்பையும் அருளிச் செய்து, தேவனுடைய சித்தத்தைச் செய்ய ஆசையையும், வல்லமையையும் தருகிறது. (யோவா 3:15; 1 கொரி 15:10; பிலி 2:13; 1 தீமோ 1:15-16,) கிறிஸ்துவ வாழ்க்கையின்
தொடக்கமுதல் முடிவு வரையுள்ள முழு நடவடிக்கையும் இந்த கிருபையைச் சார்ந்துள்ளது.
1) தேவன், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க எதுவாயிருக்குப்படி (எபே 2:8-9; தீத் 211; 3:4) ஒரு அளவான கிருபையை அவிசுவாசிகளுக்கு ஈவாய் அளிக்கிறார். (1கொரி:4)
2) தேவன், விசுவாசிகள் "பாவத்திலிருந்து விடுதலையடைய" (ரோம 6:20,22)வும் தம்முடைய நல்ல நோக்கத்துக்கு ஏற்றவாறு அவர்கள் திட்ட மிடவும், செயல்படவும் கிருபையரிக்கிறார். (பிலி 2:13; தீத் 2:11-12, மத் 7:21) மேலும் நாம் ஜெபிக்கவும் (சக 12:10) கிறிஸ்துவில் வளரவும் (2 பேது 3:18), கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்கவும் (அப் 4:33, 1:23) கிருபை அளிக்கிறார்.
3) தேவனுடைய கிருபையை ஆசையோடு விரும்பி. அதைத் தேட வேண்டும். (எபி 4:16) தேவனுடைய கிருபையைப் பெறுவதற்கான சில வழிகள் (அதாவது கிருபைக்கான உபகரணங்கள்) பின்வருமாறு அவை பரிசுத்த வேதவாக்கியங்களைப் படித்து, கீழ்ப்படிவது (யோவா 15:1-11, 20:31; 2 தீமோ 3:15) அறிவிக்கப்படும் சுவிசேஷத்தைக் கேட்பது
(லூக்.24:47; அப் 1:8; ரோம 1:16; 1 கொரி 1:17-18),
ஜெபிப்பது (எபி. 4:16; யூதா 20),
உபவாசிப்பது (மத் 4:2; 6:16)
கிறிஸ்துவைத் தொழுது கொள்வது (கொலோ 3:16) தொடாந்து பரித்தாவியினால் நிறைந்திருப்பது. (எபே.5:18) கர்த்தருடைய இராப் போஜனத்தில் பங்கு கொள்ளுவது (அப் 2:42; எபே 2:9)
ஆகியவையாகும்.
4) விசுவாசியினால் தேவனுடைய கிருபை தடுக்கப்படவும்
(எபி 12:15), வீணடிக்கப்படவும்
(2 கொரி 6:1),
அவித்துப் போடப்படவும் (1 தெச 5:19)
புறக் கணித்துத் தள்ளப்படவும், (கலா 2:21)
விசுவாசியினால் கைவிடப்படவும்
(கலா 5:4) முடியும்: என போதிக்கிறது. வேதத்தை காத்துக் கொள்ளும் அதே போல் கிருபையையும் இழந்து விடாதீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
WhatsApp 9841 711 591
Comments