பிதாவும் மகனும்

பிதாவாகிய தேவனும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் சித்தம், வல்லமை மற்றும் கிரியைகளில் ஒன்றாகவே செயல்படுகின்றனர். இதனை விளக்கும் சில குறிப்புகள்.

படைப்பின் செயல்: 
பிதா சொல்ல, குமாரன் மூலமாக அனைத்தும் படைக்கப்பட்டது.
வசனம்: 
"சகலமும் அவர் (இயேசு) மூலமாய் உண்டாயிற்று..." (யோவான் 1:3).

ஒரே சித்தம்: 
இயேசு எப்போதும் பிதாவின் சித்தத்தையே செய்கிறார்.
வசனம்: "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" (யோவான் 10:30).

மரித்தோரை எழுப்புதல்: 
பிதாவைப் போலவே குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
வசனம்: 
"பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்" (யோவான் 5:21).

பாவங்களை மன்னிக்கும் அதிகாரம்: 
பாவங்களை மன்னிப்பதில் இருவரும் ஒருமித்த அதிகாரம் கொண்டுள்ளனர்.
வசனம்:
 "பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்று நீங்கள் அறியவேண்டும்..." (மத்தேயு 9:6).

நித்திய ஜீவன் அளித்தல்: 
இருவரும் இணைந்து விசுவாசிகளுக்கு நித்திய வாழ்வைத் தருகிறார்கள்.
வசனம்:
 "அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்... என் பிதா அவர்களை எனக்குக் கொடுத்தார்" (யோவான் 10:28-29).

வெளிப்படுத்துதல்:
 பிதாவை குமாரன் மூலமாக மட்டுமே அறிய முடியும்.
வசனம்: 
"என்னைக்கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9).

நியாயத்தீர்ப்பு வழங்குதல்:
 பிதா நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை குமாரனிடம் ஒப்படைத்துள்ளார்.
வசனம்: 
"பிதாவானவர் ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்" (யோவான் 5:22).

மனுஷகுல மீட்பு: 
உலகை மீட்க பிதா குமாரனை அனுப்பினார், குமாரன் அதற்கு கீழ்ப்படிந்தார்.
வசனம்:
 "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

பரிசுத்த ஆவியானவரை அனுப்புதல்:
 பிதாவும் குமாரனும் இணைந்து தேற்றரவாளனை அனுப்புகிறார்கள்.
வசனம்: 
"என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்..." (யோவான் 14:26), "நான் பிதாவினிடத்திலிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற தேற்றரவாளன்..." (யோவான் 15:26).

கணப்படுத்தப்படுதல்:
பிதாவைப் போலவே குமாரனும் கனப்படுத்தப்பட வேண்டும்.
வசனம்: 
"எல்லாரும் பிதாவைக்கனப்படுத்துகிறதுபோல குமாரனையும் கனப்படுத்தும்படிக்கு இப்படிச் செய்கிறார்" (யோவான் 5:23).

ஜெபங்களுக்குப் பதிலளித்தல்:
 இயேசுவின் நாமத்தில் கேட்கப்படும் போது பிதா கிரியை செய்கிறார்.
வசனம்:
 "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, பிதா குமாரனில் மகிமைப்படும்படி அதைச் செய்வேன்" (யோவான் 14:13).

பரலோக வாசம்: 
இருவரும் ஒரே சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்கள்.
வசனம்: 
"தேவனுடையவும் ஆட்டுக்குட்டியானவருடையவும் சிங்காசனம் அதிலிருக்கும்" (வெளிப் 22:3). மேலும் அறிந்து கொள்ள வேதத்தை தொடர்ந்து வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா 
WhatsApp 9841 711 591.


Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை