விசுவாசிகள் ஆவிக்குரியவர்களாக பிரிக்கப்படுதல்

விசுவாசிகள் ஆவிக்குரியவர்களாகப் பிரிக்கப்படுதல்

2 கொரி 6:17-18 “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக் கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும், குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்."

தம் மக்களோடு தேவன் கொள்ளும் தொடர்புக்குத் தீமையை விட்டுப் பிரிந்து போகும் எண்ணம், அடிப்படையானதாகும். வேதாகமத்தின்படி, பிரிவினை இரண்டு பரிமாணங்களையுடையது. ஒன்று எதிர்மறையானது. அடுத்தது, உடன்பாடானது. 

அ) இயேசு கிறிஸ்துவுக்கும், நீதிக்கும், தேவனுடைய வார்த்தைக்கும் விரோதமாக இருக்கக்கூடிய பாவம், மற்றும் எந்த காரியத்திலிருந்தும், ஒழுக்க நெறியிலும், ஆவிக்குரிய விதத்திலும் நீங்கள் பிரிந்து போவது;

ஆ) அர்ப்பணிப்பு, ஆராதனை, ஊழியம் ஆகியவற்றின் மூலம் மிகவும் நெருங்கிய, அன்புள்ள ஐக்கியத்தோடு தேவனிடம் நெருங்கி வருவது. இந்த இரண்டு விதங்களிலும் பிரிந்து போகும்போது, தேவன் நம்முடைய பரலோக பிதாவாய் இருக்கிறார், அவர் நம்மோடு வசிக்கிறார். அவர் நம் தேவன், நாம் அவருடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம் என்கிற தொடர்பு ஏற்படுகிறது. (2கொரி 6:16-18).

1) பழைய ஏற்பாட்டில் பிரிந்து போகுதல் தேவனுடைய மக்களுக்குத் தொடர்ந்து தேவைப்பட்டதொன்றாகும். (யாத் 23:24; லேவி 1:44; உபா 7:3;எஸ்றா 9:2 ஆகியவற்றைப் பார்க்கவும்) அவர்கள் தேவனுடைய சொந்த மக்களாக உரிமையோடு இருக்கும்படி, பரிசுத்தமாகவும், வித்தியாசமாகவும், மற்ற எல்லா மக்களிடமிருந்தும் பிரிந்திருக்கும்படி எதிர்பார்க்கப் பட்டார்கள், அசீரியா, பாபிலோன் என்ற தேசங்களுக்கு நாடு கடத்தப்படும்படியாக தேவன் அவருடைய மக்களைத் தண்டித்ததின் முக்கிய காரணம், அவர்கள் தொடர்ந்து தங்களைச் சுற்றியுள்ள மக்களின் விக்கிரகாராதனை, பொல்லாத வாழ்க்கை முறைகளோடு தங்களையும் ஈடுபடுத்த விரும்பியதுதான். 
(2 இரா 17:7-8; 24:3; 2 நாளா 36:14; எரே 2:5,13; எசே 23:2;ஓசி 7:6; ஆகியவற்றைப் பார்க்கவும்).

2) புதிய ஏற்பாட்டில் தேவன், பின்வருவனவற்றிலிருந்து விசுவாசி பிரிந்து செல்ல வேண்டுமென்று கட்டளையிட்டார்:- 

அ) சீர்கெட்ட உலகமுறைமைகளிலிருந்தும், பரிசுத்தமில்லாத காரியங்களில் ஒத்துப் போவதிலிருந்தும் (யோவா 17:15-16; 2 தீமோ 3:1-5; யாக் 1:27, 4:4 )

ஆ) சபையிலுள்ளவர்கள் எவரேனும் பாவஞ்செய்துவிட்டு, மனந்திரும்ப மறுத்தால், அவர்களிடமிருந்தும் (மத் 18:15-17; 1 கொரி 5:9-11, 2 தெச. 3:6-15) 

இ) இறையியலிலுள்ள பிழைகளைப் போதித்து, வேதாகம சத்தியங்களை மறுதலிக்கும் கள்ள போதகர்கள், சபைகள் அல்லது வழிபாட்டு அமைப்புகளிடமிருந்தும் பிரிந்து போக வேண்டும்.
( மத் 7:15; ரோம 16:17; கலா 1:9; தீத் 3:9-11; 2 பேது 2:17-22; 1 யோவா 4:1; 2 யோவா 10-11 யூதா 12-13). 3) 
பிரிந்து போவதில் 
நம் மனப்பான்மை பின்வருவனவாக இருக்க வேண்டும்:- 

அ) பாவத்தின் மேலும், அநீதியின் மேலும், சீர்கேடான உலகமுறைமைகளிலும் வெறுப்பு (ரோம 12:9; எபி 1:9; 1 யோவா 2:15), 

ஆ) தவறான போதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் (கலா 1:9), 

இ) நாம் யாரிடத்திலிருந்து பிரிந்து போகிறோமோ அவர்களிடம் உண்மையான அன்பு (யோவா 3:16; 1 கொரி 5:5; கலா 6:1; ரோம் 9:1-3, 2 கொரி 2:1-8; 1:28-29,
யூதா 22) 

ஈ) பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்துவது 
(2 கொரி 7:1) ஆகிய மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும். 

4) தேவனுடைய மக்களாகிய நாம் பிரிந்து போவதின் நோக்கம் பின்வருவனவாக இருக்க வேண்டும்:- 

அ) இரட்சிப்பில் நிலை கொண்டிருப்பது 
(1தீமோ 4:16; 
வெளி 2:14-17); 
விசுவாசத்தில் நிலைத்திருப்பது (1தீமோ 1:19;6:10,20-21); பரிசுத்தத்தில் நிலைத்திருப்பது (யோவா 17:14-21; 2 கொரி 7:36 

ஆ) நம் ஆண்டவரும் தகப்பனுமாகிய தேவனுக்காகவே முழுமையாக வாழ்வது (மத் 22:37; 2 கொரி 6:16-18); 

இ) சுவிசேஷத்தின் சத்தியத்தையும்,
ஆசீர்வாதங்களையும், விசுவாசிக்காத உலகத்தினர் ஏற்றுக்கொள்ளச் செய்வது ஆகியவை ஆகும். (யோவா 17:21; பிலி 2:15). 

5) நாம் சரியானபடி பிரிந்து போனோமானால், தேவனே நம் அருகாமையில் வந்து நமக்கு பாதுகாப்பு, ஆசீர்வாதம், தகப்பனின் கரிசனை ஆகியவற்றால் வெகுமதி அளிப்பார். ஒரு நல்ல தகப்பனைப்போல எல்லா வகையிலும் அவர் இருக்கப் போவதாக வாக்குத்தத்தம் கொடுக்கிறார். அவர் நம் ஆலோசகராகவும், வழிகாட்டியுமாய் இருப்பார், தம் சொந்த பிள்ளைகளைப் போல் நம்மில் அன்பு செலுத்தி நம்மை நினைவு கூர்வார்.
 (2 கொரி6:16-18). 

6) விசுவாசிகள் தாங்கள் தீமையை விட்டுப்பிரிந்து போக மறுத்தால் தேவனோடுள்ள ஐக்கியத்தையும் 
(2 கொரி 6:16), பிதாவால் ஏற்றுக் கொள்ளப்படுவதையும், (6:17), பிள்ளைகளுக்குரிய உரிமைகளையும் நிச்சயமாக இழக்க நேரிடும். 
(6:18; ரோம 8:15-16).
மேலும் அறிந்து கொள்ள வேதத்தை தொடர்ந்து வாசிப்போம் 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா. WhatsApp 9841711591

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை