மேசியாவே வாக்குத்தத்தம்.

உலகம் பல வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றலாம், ஆனால் காலங்கள் தோன்றுவதற்கு முன்பே தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் ஒன்றே ஒன்றுதான், அது - இயேசு கிறிஸ்து. ஆதியாகமம் முதல் மல்கியா வரை உள்ள 39 புத்தகங்களிலும், சுமார் 300-க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் ஒரு புள்ளியில் வந்து இணைகின்றன; அந்தப் புள்ளிதான் கல்வாரி நாயகன் இயேசு. தீர்க்கதரிசிகள் தங்களுக்குத் தெரிந்ததைக் கூறவில்லை, வரப்போகிற மேசியாவின் நிழலையே கண்டார்கள். இன்று அந்த நிழல் அல்ல, நிஜமான கிறிஸ்துவை நம் வாழ்வில் எப்படிப் பெற்றுக்கொண்டோம்
சில குறிப்புகளாக பார்ப்போம்.

ஸ்திரீயின் வித்தாக வாக்களிக்கப்பட்டவர்:
ஏதேன் தோட்டத்தில் மனிதன் பாவம் செய்தபோதே, சாத்தானை நசுக்க ஒரு மீட்பர் வருவார் என்று முதல் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. 
(ஆதியா 3:15) 
வசனத்தின்படி "ஸ்திரீயின் வித்து" என்பது இயேசுவையே குறிக்கிறது.

கன்னி மரியாவின் மகனாகப் பிறத்தல்:
"இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்" என்று ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தார் (ஏசாயா 7:14).
இது இயேசுவின் பிறப்பின் மூலம் நிறைவேறியது.

பெத்லகேமில் பிறப்பார் என்ற முன்னறிவிப்பு:
மீகா தீர்க்கதரிசி இயேசு பிறக்கும் இடத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே துல்லியமாகக் குறிப்பிட்டார்
(மீகா 5:2).
இது யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபோது உண்மையானது.

தாவீதின் வம்சத்தில் வருபவர்:
மேசியா தாவீதின் சந்ததியில் வருவார் என்பது தேவனுடைய மாறாத வாக்குத்தத்தம்
(2 சாமு 7:12-13).
புதிய ஏற்பாடு இயேசுவை "தாவீதின் குமாரன்" என்று உறுதிப்படுத்துகிறது.

அற்புதங்களைச் செய்யும் மேசியா:
குருடர் காண்பார்கள், செவிடர் கேட்பார்கள் போன்ற அற்புதங்களை மேசியா செய்வார் என்று தீர்க்கதரிசனம் கூறப்பட்டது
(ஏசாயா 35:5-6). இயேசுவின் ஊழியத்தில் இவை அப்படியே நிறைவேறின.

மன்னிக்க முடியாத துரோகம் மற்றும் விலைமதிப்பு:
மேசியா 30 வெள்ளிக்காசுகளுக்காகக் காட்டிக்கொடுக்கப்படுவார் என்று சகரியா தீர்க்கதரிசி கூறினார் (சகரியா 11:12-13). யூதாஸ் காரியோத்து இயேசுவை அந்த விலைக்குக் காட்டிக்கொடுத்தான்.

பாடுபடும் ஊழியக்காரன்:
நமது அக்கிரமங்களுக்காக அவர் அடிக்கப்பட்டார் என்பதையும், அவர் மௌனமாகப் பாடுகளைச் சகிப்பார் என்பதையும்
ஏசாயா 53 ஆம் அதிகாரம் தெளிவாக விளக்குகிறது
(ஏசாயா 53:5,7).

சிலுவை மரணம் மற்றும் ஆடைக்காகச் சீட்டுப் போடுதல்:
இயேசுவின் கைகளும் கால்களும் குத்தப்படும் என்றும், அவருடைய ஆடைக்காகச் சீட்டுப் போடுவார்கள் என்றும் தாவீது ராஜா முன்னறிவித்தார் (சங்கீதம் 22:16,18). இது சிலுவையில் நிறைவேறியது.

உயிர்த்தெழுதலின் வாக்குத்தத்தம்:
"நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காணவொட்டீர்" என்ற
 (சங்கீதம் 16:10) 
வசனம் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது.

நித்திய ராஜா மற்றும் சமாதானப் பிரபு:
அவர் நித்திய காலமாக ஆளுவார் என்றும், அவருக்கு 'சமாதானப் பிரபு' என்று பெயரிடப்படும் என்றும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது (ஏசாயா 9:6).
சகல அதிகாரமும் கொண்டவராக இயேசு இன்றும் ஆளுகிறார். 
தேவனுடைய எல்லா வாக்குத்தத்தங்களும் இயேசு கிறிஸ்துவுக்குள் "ஆமென்" என்றும் "ஆம்" என்றும் இருக்கிறது
(2 கொரி 1:20). 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா

WhatsApp 9841 711 591.


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை