ஆவியில் உண்மையாக ஞானஸ்நானம் பெற்றதைச் சோதித்தல்
ஆவியில் உண்மையாக ஞானஸ்நானம் பெற்றதைச் சோதித்தல்:
அப் 10:44-46 "இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த
விருத்த சேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்துப் பிரமித்தார்கள்.”.
பரிசுத்த ஆவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் அனைத்தையும் சோதித்து, அளவிட்டுப் பார்க்க வேண்டும் என்று வேதாகமம் வலியுறுத்துகிறது. (1தெச 5:19-21; 1 கொரி 14:29) "நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்ற சோதித்து அறியுங்கள்." (1 யோவா 4:1) "பரிசுத்த ஆவியினால் பெற்ற ஞானஸ்நானம்" தேவனிடத்திலிருந்து வந்ததா என்று சோதித்தறிய வேதாகமம் கூறும் கொள்ளக்கள்
பின்வருமாறு:
1) ஒரு உண்மையான பரிசுத்த ஆவியில் பெற்ற ஞானஸ்நானமாக இருக்குமானால் பிதாவாகிய தேவனையும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் முன்னைவிட அதிகமாக நேசிக்கவும், பெருமைப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விருப்பம் உண்டாகும். (யோவா 16:13,14; அப் 2:11,36, 4:12, 7:55,56, 10:44-46), நம்முடைய இருதயங்களில் தேவன் மீதுள்ள அன்பை வளரச் செய்வது பரிசுத்த ஆவியே. (ரோம 5:5) இதற்கு மாறாக, பரிசுத்த ஆவியில் பெறப்பட்டதென்று கூறப்படும் ஒரு ஞானஸ்நானம், நம்முடைய ஜெபங்களையும், இறைவழிபாடுகளையும், துதித்தலையும் வேறு எவர் மீதோ, அல்லது எவற்றின் மீதோ இருக்கும்படி திருப்பினால் அவை தேவன் பேரில் அல்லது இயேசு கிறிஸ்துன்பேரில் செய்யப்படாவிட்டால், அந்த ஞானஸ்நானம் தேவனிடமிருந்து பெறப்பட்டதல்ல.
2) பரிசுத்த ஆவியில் பெறப்பட்ட ஒரு உண்மையான ஞானஸ்நானம் நமது பாலோகப்பிதாவுடன் நமக்குள்ளே உறவை உணர்ந்து அவரை இன்னும் அதிமாகக் கிட்டிச் சேரத் தூண்டும். (அப் 1:4; ரோம 8:15,16) நம்முடைய அன்றாட வாழ்வில் கிறிஸ்து நம்முடன் இருந்து செயல்படுவதை நாம் அதிகமாக உணருவோம். (யோவா 14:16,23, 15:26) நாம் இருதயத்தின் ஆழத்திலிருந்து அன்புடன் "அப்பா, பிதாவே" என்ற அழைக்கும் உறவை அது வலுப்படுத்தும் (ரோம 8:15; கலா 4:6). இதற்கு மாறாகக் கிறிஸ்துவோடும், நம்முடைய பிதாவாகிய தேவனோடும் மிக அதிகமான அன்புறவை ஏற்படுத்தாத பரிசுத்த ஆவியில் பெற்ற ஞானஸ்நானம் தேவனிடமிருந்து பெறப்பட்டதல்ல
3) பரிசுத்த ஆவியில் பெறப்பட்ட உண்மையான ஞானஸ்நானம் வேதாகமத்தின்மீது நமது அன்பையும், மதிப்பையும் பெருக்கும். சத்தியத்தின் ஆவி யானவர் (யோவா 14:17) வேதாகம நூல்களை எழுதத் தூண்டியவர். (2 தீமோ 3:16; 2 பேது 1:20,21), தேவனுடைய வார்த்தையினமீது நமக்குள்ள அன்பை ஆழமுள்ளதாக்கும். (யோவா 16:13, அப் 2:42; 3:22, 1 யோவா 4:6). இதற்கு மாறாக, வேதாகமத்தை வாசிப்பதற்கு நமக்கு விருப்பமில்லாமற் செய்யும் ஆவி உண்மையான பரிசுத்த ஆவி அல்ல. அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல. (யோவா 8:31; 15:4-7).
4) உண்மையாகப் பரிசுத்த ஆவியில் பெற்ற ஞானஸ்நானம் கிறிஸ்துவைப் பின்பற்றும் மற்ற விசுவாசிகள் மீது நமது அன்பையும், கரிசனையையும் பெருக்கும். (அப் 2:42-47; 4:31-37) கிறிஸ்தவ ஐக்கியமும், கூட்டுறவும் பரிசுத்த ஆவியினால் மட்டுமே ஏற்படும். (2 கொரி 13:14). இதற்கு மாறாக கிறஸ்துவையே தங்கள் ஆண்டவராகவும், இரட்சகராகவும்ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறவர்களை நேசிக்கும் அன்பைக் குறைக்கும் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்ததல்ல. (ரோம 5:5ஐயும்; 1 யோவா 4:21ஐயும் ஒப்பிட்டுப் பார்க்கவும்.).
5) பரிசுத்த ஆவியில் உண்மையான ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் கிறிஸ்துவுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, பாவத்தைவிட்டு விலகியிருக்க வேண்டும். (அப் 2:38; 8:15-24) நாம் பரிசுத்த ஆவியினால் பரிசுத்தப்படுத்தப்படும் காலம் வரையிலும் அது நீடிக்கும். (அப் 2:40, 3:26; 5:20-22, 8:21; 26:18; கலா 5:16-25). "சரீரத்தின் துர்ச் செய்கைகளை அழிக்க வேண்டும்" "ஆவியினால் நடத்தப்ட வேண்டும்" (ரோம 8:13,14, கலா 5:24-25) இதற்கு மாறாக, பாவத்திலிருந்தும், துர்ச்செய்கையிலிருந்தும் விடுபடாமலும், பாவத்தன்மையிலேயே தன் வாழ்க்கையை நடத்துகிறவர்கள் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறவர்களல்ல. (அப் 2:38-40; 8:18-23; ரோம 6:22,23; 8:2-15). அந்த மனிதனிடம் இருக்கும் சக்தி தேவனைத் தவிர வேறு ஏதோ இடத்திலிருந்து அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாத்தானின் வஞ்சிக்கும் கிரியையாகும். (சங் 5:4-5; உபா 11:13-15; 2 தெச 2:9,10)
6) உண்மையாக பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற ஒருவரது உள்ளத்தில் இவ்வுலகத்தின் மாயச்சிற்றின்பங்கள், பாவச் செயல்கள், தேவனற்ற உல்லாசங்கள் அனைத்தின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தும். அவர்கள் உலக சம்பத்தைத்தேட மாட்டார்கள். புகழை நாட மாட்டார்கள். (அப் 4:32-37,8:14-24; 20:33; 1 யோவா 2:15-17). இதற்கு மாறாக ஒருவன் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளதாகக் கூறிக்கொண்டு, உலசுக்காரியங்கள் அனைத்தின் மீதும் பற்றும், பாசமும், நாட்டமும் வைத்திருப்பானானால், உலகக் கொள்கைகளை ஏற்றுப் பின்பற்றுவானானால் அவனிடத்தில் இருக்கும் ஆவி தேவனிடத்திலிருந்து யந்ததல்ல. "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." (1 கொரி 2:12).
7) ஒரு உண்மையான பரிசுத்த ஆவியில் பெற்ற ஞானஸ்நானம் நம்மிடத்தில் ஆண்டவராகிய இயேசுவின் இரட்சிக்கும் பணியைக் குறித்துசாட்சி கொடுப்பதற்கு வேண்டிய ஆசையையும், வல்லமையையும் தரும். (லூக் 4:18; அப் 14-8, 21-4,37-42 4:8-33; ரோம 9:1-3; 10:1) இதற்கு மாறாக,
மற்றவர்கள் இயேசுவின் இரட்சிப்புக்குள் நுழைவதைக் காண விரும்பாத ஆவி தேவனிடமிருந்து வந்ததல்ல. (அப் 4.20இன் குறிப்பு).
8) உண்மையாகப் பரிசுத்த ஆவியில் நாம் ஞானஸ்நானம் பெற்றிருந்தால் தேவனுடைய இராஜ்யத்தில் ஆவியின் கிரியைகள் நமக்கு அதிகம்
பிரியமாயிருக்கும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஆவியின் வரங்கள் செயல்படும். குறிப்பாக அந்நியபாஷை பேசுதல், இது அப்போஸ்தலன் நடபடி புத்தகத்தில் பரிசுத்த ஆவி நம்மில் நிறைவதற்கு ஒரு அடையாளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (அப் 24:16-18,43; 4:29-30, 5:12-16, 6:8, 8:5-7, 10:36 44-46; 1 கொரி 12-14; கலா 3:5;) இதற்கு மாறாக நம்முடைய வாழ்க்கையில் ஆவியின் வெளிப்பாடாயிருக்கும் காரியங்கள் நடைபெறவில்லையானால், அது புதிய ஏற்பாட்டு விசுவாசி களின் அனுபவத்துக்கு மாறானது. அப்போஸ்தலர் நடபடி புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கொள்கைக்கும் முரணானது. (அப் 2.4.18: 10:45,46, 19:6)
9) பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்றவர்கள், தம்முடைய வாழ்வில் பரிசுத்த ஆவியின் கிரியைகள், வழிகாட்டுதல், ஆவியின் பிரசன்னம் இவற்றை உணர்ந்து அனுபவிப்பார்கள். புதிய எற்பாட்டு விசுவாசிகள் ஆவியினால் நிரப்பட்டபின், தொடர்ந்து ஆவியின் பிரசன்னத்தையும், வளை யையும், வழிகாட்டுதலையும் அறிந்து அனுபவித்தார்கள். (அப் 2:4,16-18; 4:31; 6:5; 9:31, 10:10, 13:2,4,52, 15:28; 16:6,7; 20:23) இதற்கு மாறாகத் தங்கள் வாழ்வில் ஆவியின் பிரசன்னத்தை உணராமலும், அவருடைய வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செய்யவும், கீழ்ப்படியவும் மனமில்லாதவர்கள் தேவனுக்கு முன்பாக நம்முடைய லட்சியத்தை வலுப்படுத்தி அவரை விசனப்படுத்தவோ, அல்லது அவருடைய அக்கினியை அவித்துப் போடவோ செய்யாத வாழ்க்கை வாழ நினையாதவர்கள். பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்றவர்கல்ல. அவரிடம் இருக்கும் ஆவி தேவனிடமிருந்து வந்ததல்ல
(எபே 4:30; 1தெச 5:19;).
என்பதை புரிந்து கொள்ளுங்கள் தொடர்ந்து வேதத்தை வாசித்து தியானியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
WhatsApp 9841 711 591.
Comments