பஸ்கா
பஸ்கா (யாத் 12:11) "அதைப் புசிக்க வேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக் கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக் கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா". " வரலாற்றுப் பின்னணி, கிட்டதட்ட கிமு 1445 இல் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டு வெளியேறிச் சென்றது முதல், பின்னால் 'யூதர்கள்' என்று அழைக்கப்பட்ட அந்த எபிரெயர்கள் ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தில், (பொதுவாகத் பெரிய வெள்ளி, உயிர்த்தெழுந்த நாள் ஆகியவற்றிற்குச் சமீபமான காலத்தில்) பஸ்கா பண்டிகையைக் கொண்டாடி வந்துள்ளார்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் சந்ததியார் 400 வருடங்களுக்கு மேலாக எகிப்தில் அடிமைகளாயிருந்ததன்பின், தேவன் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கச் சித்தங்கொண்டார். அவர் மோசேயை எழுப்பி அவனை இந்த விடுதலைப் பயனணத்தின் தலைவனாயிருக்கும்படி ஏற்படுத்தினார். (யாத் 3,4 அதி). தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்து மோசே, பார்வோனை முகமுகமாய்ச் சந்தித்து, "என்னுடைய ஜனங்களைப் போகவிடு" என்னும்...