கிறிஸ்தவத்தை காப்பாற்றுவது எது ?
கிறிஸ்தவத்தின் மார்க்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பாளர்கள் எழும்பி விட்டனர். என்பது உண்மையிலும் உண்மை. அதனுடைய பிடியில் சிக்கி, அடி பாடுபட்டு, அவமானம் அடைவதையும், சபைகள் உடைக்கப்படுவதையும், சில ஊழியர்கள் கொல்லப்படுவதையும் கிறிஸ்தவ கட்சியினால் அல்லது கிறிஸ்தவ அமைப்புகளினால் காப்பாற்ற முடியுமா ? உண்மையாகவே கிறிஸ்தவத்தையும் திருச்சபையையும் காப்பது எது என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் இதோ: இயேசுவே திருச்சபையின் அஸ்திவாரம்: மனித அமைப்புகள் அல்ல, இயேசு கிறிஸ்துவே திருச்சபையின் மூலைக்கல்லும் அஸ்திவாரமுமாய் இருக்கிறார். "இந்தக் கன்மலையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" (மத்தேயு 16:18). வார்த்தையின் வல்லமை: உலகம் அழியலாம், ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகள் என்றும் நிலைத்திருக்கும். அந்த வார்த்தையே திருச்சபையைப் பாதுகாக்கிறது. "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை" (மத்தேயு 24:35). கிறிஸ்துவே தலையாயவர்: திருச்சபை என்பது ஒரு நிறுவனம் அல்ல, அது கிறிஸ்துவின் சரீரம். அதற்கு அவரே தலை. ...