ஆபிரகாம் அழைப்பு
ஆபிரகாம் அழைக்கப்படுதல் (ஆதி 12:1-3) "கர்த்தர் ஆபிராமை நோக்கி: “நீ உன் நேசத்தையும். உள் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன். உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்: பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்". ஆபிராம் அழைக்கப்படுதல் (பின்னால் ஆபிரகாம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆதி 17:5 பார்க்கவும்.) ஆதி 12 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. இது பழைய ஏற்பாட்டில் தேவனுடைய நோக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு புதிய அதிகாரத்தைத் தொடங்கி வைக்கிறது. தேவன் மனித இனத்தை மீட்டு இரட்சிப்பதைத் தம் நோக்கமாகக் கொண்டுள்ளார். தேவன் தம்மை அறிந்து தம்மை ஆழ்ந்த விசுவாசத்துடனும், உண்மையுடனும் சேவிக்கும் ஒரு மனுஷனைப் பெற நினைத்தார், இந்த மனுஷனிடத்திலிருந்து, ஒரு குடும்பம் தோன்றும், அது தேவனை அறிந்து, தேவனைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பித்து, கர்த்தருடைய வழிகளை ...