ஆபிரகாம் அழைப்பு
ஆபிரகாம் அழைக்கப்படுதல்
(ஆதி 12:1-3)
"கர்த்தர் ஆபிராமை நோக்கி: “நீ உன் நேசத்தையும். உள் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன். உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்: பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்".
ஆபிராம் அழைக்கப்படுதல் (பின்னால் ஆபிரகாம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆதி 17:5 பார்க்கவும்.) ஆதி 12 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. இது பழைய ஏற்பாட்டில் தேவனுடைய நோக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு புதிய அதிகாரத்தைத் தொடங்கி வைக்கிறது. தேவன் மனித இனத்தை மீட்டு இரட்சிப்பதைத் தம் நோக்கமாகக் கொண்டுள்ளார். தேவன் தம்மை அறிந்து தம்மை ஆழ்ந்த விசுவாசத்துடனும், உண்மையுடனும் சேவிக்கும் ஒரு மனுஷனைப் பெற நினைத்தார், இந்த மனுஷனிடத்திலிருந்து, ஒரு குடும்பம் தோன்றும், அது தேவனை அறிந்து, தேவனைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பித்து, கர்த்தருடைய வழிகளை உண்மையுடன் பின்பற்றுவதாயிருக்கும். (ஆதி 18:19,) இந்தக் குடும்பத்திலிருந்து ஒரு தெரிந்து கொள்ளப்பட்ட தேசமக்கள் தோன்றுவார்கள். அவர்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்யும்படி மற்ற தேசங்களிலுள்ள, அவபக்தியுள்ள, அஞ்ஞான மக்களின் வழிகளை விட்டு விலகியிருப்பார்கள். இந்தத் தேசத்திலிருந்து இயேசு கிறிஸ்து தோன்றுவார். அவரே உலக இரட்சகர் அவரே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட "ஸ்திரீயின் வித்து" (3:15; கலா 3:8,16,18), ஆபிரகாமை தேவன் அழைத்ததிலிருந்து அநேக முக்கியமான கொள்கைகளை நாம் அறிந்து கொள்ளலாம். அவை:
1) ஆபிரகாம் அழைக்கப்பட்டதால் அவன் பூமியில் அந்நியனும், பரதேசியுமாகும்படி, அவளை அவனுடைய தேசத்திலிருந்தும், மக்களிடமிருந்தும். வீட்டிலிருந்தும் (ஆதி 12:1) பிரிக்கப்பட்டான். (எபி 11:13). ஆபிரகாமில் தேவன் நிலைப்படுத்திய முக்கியமான கொள்கை, அவருடைய மக்கள் தங்களை தேவனுடைய சித்தத்திலிருந்து தடைசெய்யும் உலக சக்திகள் அனைத்திலுமிருந்து தங்களைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
2) தேவன் ஆபிரகாமுக்கு ஒரு இடத்தையும், அவருடைய சந்ததியின் மூலமாக ஒரு பெரிய தேசத்தையும், உலகின் தேசங்கள் அனைத்தையும் பாதிக்கக்கூடிய ஒரு ஆசீர்வாதத்தையும் வாக்குத்தத்தம் பண்ணினார்.
(ஆதி 12:2,3) இந்த வாக்குத் தத்தத்தின் கடைசிப் பகுதி கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங்கும், எல்லாத் தேசங்களுக்கும் அறிவிக்கப்படுகிறது என்பதன் மூலம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று புதிய ஏற்பாடு தெளிவாகப் போதிக்கிறது.
(அப் 3:25; கலா 3:8).
3) மேலும் ஆபிரகாம் அழைக்கப்பட்டதில் அவனுக்குப் பூமியில் ஒரு இடம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது மட்டுமல்ல, பரலோகத்தில் ஒரு இடமும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. அவனுடைய தரிசனம் பூமியில் ஒரு நிலையான வாசஸ்தலமல்ல, பரலோகத்தில் ஒரு வாசஸ்தலத்தையும், நகரத்தையும் கண்டான். அதன் அமைப்பாளரும், கட்டியெழுப்புகிறவரும் தேவனே. அது முதல் ஆபிரகாம், ஆசைப்பட்டுத் தேடியது பரலோகத்தில் ஒரு தேசம். அங்கு அவன் நித்திய காலமாகத் தன்னுடைய தேவனுடன் நீதியுடனும், சந்தோஷத்துடனும், சமாதானத்துடனும் வாழலாம்
(எபி. 11:9.10, 14-16; வெளி 21:1-4; 22:1-8), அதுவரை இந்த உலகத்தில் அவன் ஒரு அந்நியனும், பரதேசியுமாயிருப்பான் (எபி. 11:9,13).
4) ஆபிரகாம் அழைக்கப்பட்டதில் வாக்குத்தத்தங்கள் மட்டுமல்ல, அவன் செய்ய வேண்டிய கடமைகளும் இருந்தன. தேவன் ஆபிரகாமிடமிருந்து பரிபூரண விசுவாசம், தேவளே கர்த்தர் என்று தன்னை அவருக்கு அர்ப்பணித்தல், ஆகிவற்றை எதிர்பார்த்தார். இவை இருந்தால் தான் தேவனுடைய வாக்குத்தத்தங்களை அவன் பெற்றுக்கொள்ள முடியும். கீழ்ப்படிதலுக்கும், அர்ப்பணிப்புக்கும் தேவைப்பட்டது பின்வருமாறு:
அ) கர்த்தருடைய வார்த்தையில் நம்பிக்கை, தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுவது சாத்தியமல்ல என்பது போல் தோன்றினாலும், கர்த்தருடைய வார்த்தையில் முழுநம்பிக்கை கொள்வது.
(ஆதி 15:1-6; 18:10-14)
ஆ) 'உன் தேசத்தை விட்டுப் போ' என்னும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிதல்.
(ஆதி 12:4; எபி. 11:8)
இ) ஒரு நீதியுள்ள வாழ்க்கை வாழ உண்மையான முயற்சி (ஆதி 17:1,2).
5) ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களும், ஆபிரகாமின் மேல் தேவன் பொழிந்த ஆசீர்வாதங்களும் அவனுடைய சொந்த சந்ததி யாருக்கு மட்டுமல்ல, (விசுவாசமுள்ள யூதர்கள்) உண்மையான விசுவாசத்துடன்
(ஆதி 12:3) இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுகிற அனைவருக்கும் கிடைக்கிறது.
(கலா 3:14,16). ஆபிரகாமிடம் இருந்தது போன்ற விசுவாசத்தையுடைய அனைவரும் "ஆபிரகாமின் பிள்ளைகள்" ஆவார்கள். (கலா 3:7). அவர்கள் ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுவார்கள். (கலா 3.9) அவர்களும் "ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத்தத்தின் படியே சுதந்தரராயும் ஆகிறார்கள். இயேசு கிறிஸ்துவினால்" (கலா 3:29) பரிசுத்த ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தை விசுவாசத்தினரலே பெறுவதும் சாத்தியமாயிற்று. (கலா 3:14, ).
6) ஆபிரகாம் தேவன் பேரில் அசைக்கமுடியாத, விசுவாசம் வைத்திருந்தபடியால், அது அவருடைய கட்டளைக்கு அவனைத் தயங்காமல் கீழ்ப்படியச் செய்தது. எனவே தான் அவன் உலகோர் அனைவருக்கும் விசுவாசத்துக்கு ஒரு முன்னுதாரணமாய் இருக்கிறான். (ஆதி 15:6; ரோம்.4:1-5; 16-24; கலா.3:6-9; எபி. 11:8-19; யாக் 2:21-23; ஆதி 15:6, குறிப்பு). வேதாகமத்தின்படி, இயேசு கிறிஸ்துவை ஒருவன் இரட்சகராக விசுவாசிப்பதாகக், கூறிக்கொண்டு, அவரை ஆண்டவராக ஏற்று அவருக்குக் கீழ்ப்படியாவிட்டால், அவனிடம் உள்ள விசுவாசம் ஆபிரகாமின் விசுவாசத்தைப் போன்றதல்ல. இது உண்மையான இரட்சிக்கும் விசுவாசமாகாது. (யோவா. 3:36)
தேவன் தம்முடைய ஊழியர்கள் மூலமாக அதாவது சுவிசேஷத்தின் மூலமாக உங்களையும் அழைக்கிறார் அந்த அழைப்பு விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப்படுதல் நித்தியத்தை சுதந்திரிக்க நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை அறிந்து விசுவாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591
Comments