எல்லாவற்றிலும் வாழ்ந்து
எல்லாவற்றிலும் வாழ்ந்து.
(3யோவா 1:2)
விசுவாசிகள் ஆரோக்கியமுள்ள வர்களாகவும், அவர்களுடைய வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் அவருடைய ஆசீர்வாதங்கள் காணப்படவும் தேவன் சித்தமுள்ளவராய் இருக்கிறார். நாம் எல்லாவற்றிலேயும் வாழ்ந்து சுகித்திருக்கவே தேவன் விரும்புகிறார். அதாவது நம்முடைய வேலைகள், திட்டங்கள், நோக்கங்கள், ஊழியங்கள், குடும்ப வாழ்க்கை மற்றும் யாவும் அவருடைய சித்தத்தின் படியும், வழிநடத்துதலின்படியும் ஆசீர்வதிக்கப்படவே அவர் விரும்புகிறார். எனவே, கிறிஸ்துவின் மீட்பின் மூலம் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் நம் முடைய சரீர தேவைகள் மற்றும் ஆவிக்குரிய தேவைகள் ஆகிய இரண்டினையும் நமக்கு பூர்த்திச் செய்கிறது.
சரீர பிரகாரமான செழிப்பினைக் குறித்தும் ஆவிக்குரிய வாழ்க்கை யின் செழிப்பினைக் குறித்தும் வேத வசனங்கள் நமக்குப் போதிப்பவை கள் பின்வருமாறு:
(1) எல்லாவற்றிலும் வாழ்ந்து (கிரேக்க பதம் கிரியோரே) என்பதின் கிரேக்க மொழிபெயர்ப்பின் அர்த்தங்கள் என்னவெனில்,
"நல்ல பிரயாணம்,
நல் வழியில் நடத்தப்படுதல்" என்பவையாகும். இந்த அர்த்தத்தை மனதில் கொண்டவராகவே யோவான் இதை எழுதியுள்ளார்.
அவருடைய பிரதான விண்ணப்பம் என்னவெனில், விசுவாசிகள் இரட்சிப்பின் பாதையில் நடந்து, தேவ சித்தத்தையும், சத்தியத்தையும் அறிந்தவர்களாய் அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று அனுபவிக்க வேண்டும் என்ப தாகும் (வச 3-4).
(2) நமக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும் உணவு, உடை, உறை விடம் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் போதுமான செல்வத் தைச் சம்பாதிக்கவும், மற்றவர்களுக்கும் நாம் உதவி செய்யவும், கிறிஸ்து வின் பணிக்கும் நாம் உதவி செய்யும் அளவிலும்
(பிலி 4:15-19), ஆசீர்வதிக் கப்படுவதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தேவன் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வல்லவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்
(2 கொரி 9:8-12). மேலும் "தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி... நம் முடைய குறைவுகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" என்கின்ற அவருடைய வாக்குத் தத்ததையும் நாம் அறி வோம்
(பிலி 4:19;)
(3) தேவன் நம்முடைய பொருளாதார தேவைகள் அனைத்தையும் சந் திப்பார் என்று நாம் அறிந்திருந்தாலும், அவர் தம்முடைய பிள்ளைகளை தேவைகள் நிறைந்த அனுபவங்களை சந்திக்கச் செய்கிறார் என்று வேதம் கூறுகிறது.
(அ) நமக்குத் தேவைகள் வரும்போது நாம் தேவனையே சார்ந் திருக்கும்படியாகவும், நம்முடைய விசுவாசம், சகிப்புத்தன்மை, சேவைகள் ஆகியவைகள் பெருகும்படியாகவும் அவற்றை அனுமதிக்கிறார் (ரோம 8:35-39; 2 4:7-12; 6:4-10; 12:7-10; 1 1:6-7).
(ஆ) கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி பகரும்போதும், அவருடைய பணியை நாம் நிறைவேற் றும் போதும், உபத்திரவங்கள் மற்றும் எதிர்ப்புகள் நமக்கு பெரும் நெருக்கத் தினைக் கொண்டு வரும்
(லூக் 6:20-23; எபி 10:32-34; 1 பேது 2:19-21; வெளி 2:9-10;)
(இ) தேசத்திலே உண்டாகும் மற்றும் இயற்கை சூழலால் உண்டாகும் யுத்தம், பஞ்சம் வறட்சி மற்றும் சமூக பொருளாதார சீற்றங்களால் நாம் வறுமையையும் கூட அனுபவிக்க நேரிடலாம்
(அப் 11:28-30; 2 கொரி 8:2; 12-14).
(4) சரீரப்பிரகாரமான இவ்வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் தேவ பிரசன்னம், அவருடைய ஒத்தாசை மற்றும் ஆசீர்வாதங்கள் அனைத்தும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் செழிப்பினை அளவிடுகின்றது. அதற்கு நாம் செய்ய வேண்டுபவைகள் என்னவெனில், அவருடைய சித்தத்தை அறிந்திடவேண்டும் (மத் 6:10; 26:39; எபி 10:7-9).
பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிய வேண்டும் (ரோம 8:14). உலகத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும்
(ரோம 12:1-2; 2 கொரி 6:16-18).
வேத வசனத்தை நேசிக்க வேண்டும் (யாக் 1:21; 1 பேது 2:2). ஜெபத்தில் தேவனுடைய ஒத்தாசையை நாட வேண்டும்
(மத் 6:9-13; எபி 4:16). கடினமாக ஊழியஞ் செய்ய வேண்டும்
(2 தெச 3:6-12). நம்முடைய தேவை களுக்கு தேவனையே சார்ந்திருக்கவேண்டும் (மத் 6:25-34; 1 பேது 5:7).
தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதன்மையாக தேட வேண்டும்.
(மத் 6:33; கொலோ 4:12; மத் 6:11; லூக்11:3)
(5) நம்முடைய ஆத்துமா சுகமாய் வாழும்போது, நம்முடைய
வாழ்க்கையின் மற்ற பகுதிகளில் கஷ்டங்களே நேரிடாது என்று அர்த்தம் இல்லை. அன்றாட வாழ்க்கையில் கஷ்டங்களை நாம் சந்திக்கவே நேரிடும். ஆனா லும் அக்கஷ்டங்களை ஜெபத்தின் மூலமும், தேவன் மேல் நாம் வைக்கும் விசுவாசத்தின் மூலமும் மேற்கொள்ள முடியும்.
5 உண்மையாய்ச் செய்கிறாய். சத்தியத்தில் நடந்து வந்தவனாகிய காயுவிடம் காணப்பட்ட ஒரு விசேஷித்த நற்காரியத்தினை யோவான் பாராட்டுவதை வாசிக்கிறோம்
(வச 3-4). அதென்னவெனில், தன்னிடம் தங்குவதற்கு வந்த ஊழியர்களுக்கு உதவி செய்வதில் இவன் உண்மை யுள்ளவனாகக் காணப்பட்டான்
(வச 5-8).
இவன் அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, பணம் மற்றும் பிரயாணத்திற்கான சகல தேவைகளையும் பூர்த்தி செய்தான்.
(தீத் 3:13).
சுவிசேஷ பணிக்கென்ற இவனுடைய
அர்ப்பணிப்பானது குறிப்பபிடத்தக்கது என்பதை அவ்வூழியர்கள் யோவானிடம் கூறியிருந்தனர்
(வச 6). சுவிசேஷ வேலையினை செய்து வந்த ஊழியர்கள் -மீதும், சுவிசேஷத்தின் மீதும், கிறிஸ்துவை அறியாதவர்கள் மீதும் காயு வைத்திருந்த மிகுந்த அன்பின் விளைவாகவே அவன் ஊழியர்களை
அவ்வாறு உபசரித்தான். என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றிலும் வாழ்ந்து கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம். வேதத்தை தொடர்ந்து வாசிப்போம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா தொடர்பு
9841711591
Comments