கண்காணிகளுக்கான ஒழுக்க நெறிகள்.

கண்காணிகளுக்கான ஒழுக்கநெறிகள்

1 தீமோ 3:1-2 "கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதக சமர்த்தனுமாய் இருக்கவேண்டும்".

ஒரு மனிதன் "கண்காணி"யாக விரும்பினால் (கிரே. எபிஸ்கோபோஸ், அதாவது ஆயர் சம்பந்தமான மேற்பார்வை; ஒரு ஆயர்) அவன் ஒரு முக்கியமான வேலையை விரும்புகிறாள் 
(1 தீமோ 3:1). ஆனாலும் அப்படிப்பட்ட மக்களின் அந்த விருப்பம் தேவனுடைய வார்த்தையாலும் (3,1-10; 4:12), திருச்சபையாலும் (3:10) உறுதிசெய்யப்பட்டதாய் இருக்கவேண்டும், ஏனென்றால் தேவன் திருச்சபைக்கென்று சில திட்டவட்டமான தகுதிகளை நிறுவியுள்ளார். ஆயருடைய வேலை செய்யும்படி தேவனுடைய அழைப்பு உள்ளது என்று அறிக்கை பண்ணுகிறவர்கள், சபை அங்கத்தினரால் வேதாகமத்தில் 1 தீமோ 3:1-13; 4:12; தீத் 15-9 கூறும் தகுதிகளுக்கு ஏற்றபடி உள்ளனரா என்று சோதிக்கப்படவேண்டும்.  திருச்சபையானது ஒரு மனிதருடைய விருப்பம், கல்வி, பாரம் அல்லது அவர் கூறும் தரிசனம் அல்லது அழைப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஊழியத்தின் வேலைக்கு சம்மதம் அளிக்கக்கூடாது. தற்காலத்து சபைக்கு பரிசுத்த ஆவியினால் தேவன் குறித்துவைத்த தகுதிகளைக் குறைக்க எந்தவித உரிமையும் கிடையாது. அவைகளை நிபந்தனைகளாகக் கருதி தேவனுடைய நாமம், அவருடைய இராஜ்யம் கண்காணியின் அந்த உயர்தகுதியின் நம்பத்தகுந்த நிலை ஆசியவற்றைக் கருத்திற்கொண்டு அவை பின்பற்றப்படவேண்டும்.

(1) கண்காணியானவருக்காக பட்டியல் செய்யப்பட்ட உயர்தகுதிகள் முக்கியமாக ஒழுக்கம் சம்பந்தமானதும், ஆவிக்குரிய பிரகாரமுமானவையுமாகும். திருச்சபையில் தலைமைத்துவத்தை நாடுபவரின் நிரூபிக்கப்பட்ட நன்னடத்தையானது அவர்களுடைய ஆளுமை, போதிக்கக்கூடிய வரங்கள், நிர்வாகத் திறமைகள் அல்லது கல்விச் சிறப்புகள் ஆகியவற்றைவிட மிகவும் முக்கியமானவை. தகுதிகளின் முழுகவனமும், தேவபக்தியோடு கூடிய ஞானம், சரியான தேர்ந்தெடுப்புகள். சொந்த வாழ்க்கையில் பரிசுத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தும் அவருடைய நல்ல நடத்தையில் செலுத்தப்படுகிறது. கண்காணிப்பின் ஊழியத்தை விரும்புகிறவரது ஆவிக்குரிய வரலாறு (சரித்திரம்) "முதலாவது பரிசோதிக்கப்படவேண்டும்." (1 தீமோ3:10) இவ்வாறாக பரிசுத்த ஆவியானவர், கண்காணியாக விரும்புகிற ஒருவர். இயேசுகிறிஸ்துவையும், அவருடைய நீதியின் கொள்கைகளையும் தொடர்ந்து சார்ந்திருக்கும் ஒரு விசுவாசியாக இருக்க வேண்டுமென்பதற்காகவும், அதனால் உண்மையான விசுவாசம், சத்தியம், நேர்மை, தூய்மை ஆகியவற்றிற்கு அவர் நல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டுமென்பதற்காகவும் உயர்ந்த தகுதியை முன் வைத்திருக்கிறார். வேறுவிதமாகச் சொன்னால் அவருடைய நடத்தை மத் 25:21ல் உள்ள கிறிஸ்துவின் போதனையின்படி "கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்" "அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்" என்ற நிலைமைக்கு வழிநடத்தும் என்பதைப் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

(2) எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்தவ தலைவர்கள், "விசுவாசிகளுக்கு மாதிரிகளாயிருக்க வேண்டும்" (1 தீமோ 4:12; 1 பேது 5:3), அதாவது அவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையும், நிலைத்து நிற்கும் விசுவாசமும் மற்றவர்களால் பார்த்துப் பின்பற்ற தகுதியானதொன்றாக சபைமக்கள் முன் வைக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். 
(அ)கண்காணியானவர்கள் தேவபக்தி, உண்மை விசுவாசம், சோதனையின் மத்தியில் தூய்மையோடிருத்தல், கிறிஸ்துவிடமும் சுவிசேஷத்தின் மேலும் உண்மைப்பற்றும் அன்பும் கொண்டிருத்தல் ஆகியவற்றில் விடாமுயற்சியோடுள்ளமைக்கு மிக உயர்ந்த முன் மாதிரியாக இருக்க வேண்டும். 
(1 தீமோ 4:12,15). 

(ஆ) தேவனுடைய மக்கள் கிறிஸ்தவ ஒழுக்கவியலையும் உண்மையான தேவபக்தியையும் தேவனுடைய வார்த்தையிலிருந்து மாத்திரம் அல்ல, அப்போஸ்தல தகுதியோடு வாழ்க்கை நடத்தும் போதகர்களின் முன்மாதிரியிலிருந்தும் சுற்றுக் கொள்ளவேண்டும். கிறிஸ்தவ தலைமைத்துவத்தைக் குறித்த தேவனுடைய திட்டத்தில், விசுவாசத்துக்கு உதாரணமாய் விளங்கும் போதகர்களின் தாமான வாழ்க்கை மிகவும் முக்கியமானது. திருச்சபை மக்கள் பின்பற்றக்கூடிய, கறையற்ற வாழ்க்கை முறையையுடைய தேவபக்தியுள்ள தலைமைத்துவக் கொள்கையை புறம்பே தள்ளி வைப்பது வேதவாக்கியங்களின் தெளிவான போதனையை அசட்டை செய்வதாகும். கிறிஸ்துவின் மேல் போதகர்களுக்கிருக்கும். உண்மை விசுவாசம் பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கைத் திட்டமாக இருக்கும்படியாக போதகர்கள் இருக்கவேண்டும்.
(1 கொரி 11:1; பிலி 3:17; 1தெச 1:6:2 தெச 3:7,9; 2 தீமோ 1:13). 

(3) தன் வீட்டில், திருமண வாழ்க்கையில், குடும்ப உறவுகளில் விசுவாசியின் தலைமைத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பரிசுத்த ஆவியானவர் மதிக்கிறார் 
(1 தீமோ 32,4-5; தீத் 16) கண்காணியானவர் தேவனுடைய குடும்பத்துக்கு விசேஷமாக அவருடைய மனைவி, பிள்ளைகளிடம் உண்மைப் பற்று கொண்டிருப்பதில் முன்மாதிரியாக இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் கண்காணியானவர் தோல்வியுடையவராக இருந்தால் "தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பார்?" 
(1 தீமோ 3:5). அவர்"ஒரே மனைவியை உடைய புருஷராக" இருக்கவேண்டும் 
(1 தீமோ 3:2). இந்த சொற்றொடர் 
கண்காணியாக ஊழியஞ்செய்ய விரும்புபவர். அவருடைய மனைவிக்கு ஒழுக்க நெறிப்படி உண்மை விசுவாசத்தோடிருக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில் உள்ள் மொழி பெயர்ப்புப்படி (மியாஸ் குனெய்காஸ், இனவிருத்தி செய்யும் பண்பு) அதன் பொருள் "ஒரே பெண்ணை மனைவியாகக் கொண்ட மனிதர்" என்பதாகும். அதாவது அவருடைய மனைவியிடம் உண்மையான விசுவாசமுள்ள மனிதர். கண்காணியாக விரும்புகிறவர் எல்லா முக்கியத்துவமும் அடங்கிய இந்த பகுதியில் உண்மையுள்ளவராக தம்மை நிரூபித்திருக்கவேண்டும் என்பது இதற்கு அர்த்தமாகும். ஒருவர் தம் மனைவியிடமும் குடும்பத்தினரிடமும் தொடர்ச்சியாக ஒழுக்கநெறியில் உண்மையுடனிருப்பது, தலைவராகவும், சபைக்கு முன் மாதிரியாகவும் இருக்க விரும்பும் யாவருக்கும் இருக்க வேண்டிய முக்கியமான தகுதியாகும்.

(4) முடிவாக, சபைக்குள்ளிருக்கும் நிர்வரகிகள் பயங்கரமான பாவத்தினால் அல்லது ஒழுக்க நெறியில் மீறி நடந்ததினால் குற்றவாளிகளாகும்போது ஆயர் பதவியிலிருந்தும் பிறகண்காணிப்பு பணிகளிலிருந்தும் விலக்கப்பட்டு, அப்பதவிகளுக்குத் தகுதியற்றவர்களாகிறார்கள் (1தீயோ 3.8-12) அப்படிப் பட்ட மக்கள் தேவனுடைய கிருபையால் அபரிமிதமாக மன்னிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் தோல்வியடையாத ஊக்கமுள்ள விசுவாசம், அன்பு, தூய்மை, ஆரோக்கியமான உபதேசம் ஆகியவற்றில் முன்மாதிரிகளாக இருக்கும் தகுதியை இழந்துவிடுகிறார்கள். (4:11-16; தீத் 19) ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் தேவனுடைய மக்கள் மத்தியிலுள்ள தலைவர்கள், உயர்ந்த நல்லொழுக்க ஆவிக்குரிய தகுதிகளை எப்போதும் காத்துக்கொள்ளுகிறவர்களாக எதிர்பார்க்கப்பட்டார்கள் என்றும், அவர்கள் அவ்வாறு இல்லாததினால் மற்றவர்கள் அவர்களுடைய பதவியில் வைக்கப்பட்டார்கள் என்றும் தேவன் தெளிவாகப் போதித்திருக்கிறார் (ஆதி 49:4; லேவி 10:2; 21:7,17;  எண். 20:12; 1சாமு 2:23; எரே 23:14; 29:23; குறிப்புகள் ஆகியவற்றைப் பார்க்கவும்).

(5) மேலும் 1 தீமோத் 3:27ல் ஒரு கண்காணியாளவர் தேவனிடமும், அவருடைய வார்த்தையிடமும் உள்ள பற்றுதலையும், தம் மனைவியிடமும் குடும்பத்தினிடமும் உள்ள உண்மை விசுவாசத்தையும் விட்டுவிட்டால் கண்காணியாயிருக்கும் அவர் பதவியிருந்து விலக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரைக் "குற்றஞ் சாட்டப்படாதவர்" என்று கூறமுடியாது தேவனுடைய மக்கள் மத்தியில் விபசாரம் செய்பவரைப்பற்றி "அவன் நிந்தை ஒழியாது" என்று தேவனுடைய வசனம் கூறுகிறது. (நீதி 6:33, ரீதி 6:32,33ள் பின்குறிப்பைப் பார்க்கவும்)

(6) தேவன் அல்லது திருச்சபை மன்னிக்கமாட்டார்கள் என்று இதனால் அர்த்தங்கொள்ளக்கூடாது. தேவனுக்கேற்ற துக்கம், மனஸ்தாபம் அந்த பாவத்தைக்குறித்து உண்டானால் 1 தீமோ 3:1-13ல் பட்டியலிடப்பட்ட எந்த பாவத்தையும் தேவன் நிச்சயமாக மன்னிப்பார். அப்படிப்பட்ட ஒருவர் இரக்கத்தோடு மன்னிக்கப்பட்டு தேவனிடமும், திருச்சபையினிடமும் உள்ள சரியான உறவுக்கு மறுபடியும் கொண்டுவாப்படலாம் என்பது தெளிவாயுள்ளது. ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் கூறுவது என்னவென்றால் சில பாவங்களின் மூலம் வரக்கூடிய அவமானமும், வெட்கக்கேடும் (அதாவது நிந்தனை)
அது மன்னிக்கப்பட்டபிறகும் கூட அவர்களின் வாழ்க்கை முழுவதும் அந்த நபரிடம் தங்கியிருக்குமளவு பயங்காமானதாக இருக்கும் 
(2 சாமு 12:9-14) 

(7) ஆனால் தாவீது அரசனின் காரியம் என்ன? விபசாரம்,கொலை 
(2 சாமு 1:1-21 129-15) குற்றங்களுக்குப்பின்னும் இஸ்ரவேலரின் அரசராகத் தொடர்ந்து இருந்த வேதாகமப் பகுதியை நியாயப்படுத்தி கண்காணியானவர் மேற்கூறப்பட்ட தகுதிகளுக்கு மீறி நடந்தாலும் அந்த பதவியில் தொடர்ந்து
இருக்கலாம் என்று சில நேரங்களில் எண்ணப்படுகிறது. ஆனாலும் இவ்வாறு ஒப்பிடுவது பல வழிகளில் தவறானதாகும். 

(அ)பழைய உடன்படிக்கையின் கீழுள்ள இஸ்ரவேலரின் அரசனுடைய பதவியும், புதிய உடன்படிக்கையின் கீழுள்ள இயேசுகிறிஸ்துவின் சபையில் ஆவிக்குரிய கண்காணியாயிருப்பவரின் பதவியும் முற்றிலும் வித்தியாசமான இரண்டு காரியங்களாகும். தேவன் தாவீதை மாத்திரம் அல்ல, மிகவு! செட்டலர்களாகிய அநேக அரசர்கள் இஸ்ர வேலரின் அரசர்களாக இருக்கும்படி அனுமதித்தார். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் விலைகொடுத்து வாங்கப்பட்ட புதிய ஏற்பாட்டு சபையிலுள்ள தலைமைத்துவத்துக்கு மிக அதிகமாக ஆவிக்குரிய தகுதிகள் தேவை. 

(ஆ) புதிய ஏற்பாட்டிலுள்ள தேவனுடைய வெளிப்பாடுகள். தகுதிகளின்படி தாவீது ஒரு புதிய ஏற்பாட்டு சயையில் கண்காணி பதவிக்குத் தகுதியுள்ளவராக இருந்திருக்கமுடியாது. அவருக்குப் பல மனைவிகள் இருந்தனர். திருமண வாழ்க்கையில் உண்மையான விசுவாசத்தோடில்லாத குற்றமுடையவர். தன் சொந்த குடும்பத்றை நன்றாய் நடத்தாமல் நிலையில் தவறினார் கொலை செய்திருந்தார் இரத்தம் சிந்திய கொடுமை செய்திருந்தார். அவருடைய பாவத்தால் தாவீது தன் வாழ்க்கை முழுவதும் தேவனுடைய தண்டனை போடிருந்தார் என்பதையும் கவனிக்கவும். 
(2 சாமு 129-12ன் பின் குறிப்பைப் பார்க்கவும்).

(8) தற்கால சபைகள், ஆதியில் அப்போஸ்தலர்களாலுண்டான வெளிப்பாடுகளின் மூலம் தேவனால் ஒரு கண்காணிக்கு நியமிக்கப்பட்ட நீதியான தகுதிகளிலிருந்து விலகக்கூடாது. அதற்குபதிலாக திருச்சபையானது அதன் தலைவர் களிடமிருந்து மிக உயர்ந்த சுருதியுள்ள பரிசுத்தம், தேவனிடமும், அவருடைய வார்த்தையிடமும் உண்மையான விசயாசத்தோடு தொடர்ந்து இருப்பது, தேவபுத்தியான வாழ்க்கை ஆகியவற்றை எதிர்பார்க்க வேண்டும். வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாய் அவர்கள் இருக்கும்போது அவர் களுக்காக ஊக்கமாக ஜெபித்து, அவர்களை உற்சாகப்படுத்தி ஆதரிக்கவேண்டும். 
(1தீமோ 4:12). கர்த்தர் உங்களை
ஆசிர்வதிப்பார் ஆமென் 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
தொடர்பு 
9841711591

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை