பழைய ஏற்பாட்டில் திராட்ச ரசம்
பழைய ஏற்பாட்டில் திராட்சரசம்
(எண் 6:3).
“அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும், மதுபானத்தையும் விலக்கக் கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப் பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்... இருக்கக்கடவன்."
திராட்சரசத்துக்கான எபிரெயச் சொற்கள். பொதுவாக இரண்டு எபிரெயச் சொற்கள் திராட்சரசம் என்று வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1) மிகவும் சாதாரணமான முதல் வார்த்தை 'யாயின்" (yayim) என்பது. இந்த சொல், பழைய ஏற்பாட்டில் 141 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது புளிக்க வைக்கப்பட்ட திராட்சரசத்தையும், சாதாரணமான திராட்சாசத்தையும் குறிக்கும்.
(நெகே 5:18ல் குறிப்பிடப்படும் திராட்சரசம் (yayin) எல்லாவகையான திராட்சரசங்களையும் குறிக்கும்.).
அ) ஒரு வகையில் பார்த்தால் யாயின்' என்பது புளிக்க வைக்கப்பட்ட எல்லா வகையான திராட்சரசங்களையும் குறிக்கும்படி பயன்படுத்தப்பட்டுள்ளது. (ஆதி 920-21, 19:32,33, 1 சாமு 25:36,37, நீதி 23:30,31) புளிக்க வைக்கப்பட்ட திராட்சரசத்தைக் குடிப்பதால் வரும் பயங்கர விளைவுகளைப் பற்றிப் பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீதி 23:29-35. ( பார்க்கவும்)
ஆ) இன்னொரு வகையில் பார்த்தால் யாயின் 'என்னும் சொல் இனிமையான, புளிக்க வைக்கப்படாத திராட்சரசத்தைக் குறிக்கிறது. இது திராட்சப் பழங்களிலிருந்து பிழியப்பட்ட புதிய திராட்சரசத்தைக் குறிக்கும் "ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை" என்று ஏசாயா கூறுகிறான்.
(ஏசாயா 16:10)
இதுவும் யாயினே
அது போலவே ஏரேமியாவும், "திராட்சரச ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப் பண்ணினேன். ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை.
(எரே 48:33) இவன் குறிப்பிடும் இரசமும் யாயின் தான் உண்மையில் திராட்சப் பழங்களில் இருக்கும் இரசத்தையும் எரேமியா யாயின் என்றே குறிப்பிடுகிறான்.
(எரே 40:10,12)
புளிக்க வைக்கப்படாத திராட்சசரத்தைப் பற்றி புலம்பல் புஸ்தகத்தில் அதை எழுதியவர் குறிப்பிடுவதைக் காண்கிறோம். "குழந்தைகளும், பாலகரும். தங்கள் தாய்மாரை நோக்கி, தானியமும், திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்”
(புல 2:11,12) இவை அவைகளின் சாதாரண உணவு, புளிக்க வைக்கப்படாத திராட்சரசம், இரசம் என்று கூறப்படலாம் என்று பல்வேறு அறிஞர்களின் ஆராய்ச்சியின் முடிவு 1901ல் உள்ள யூதர்களின் கலைக்களஞ்சியம் இவ்வாறு கூறுகிறது. "புளிக்க வைக்கப்படாத புதிய திராட்சரசம் தொட்டியிலுள்ள திராட்சரசம் யாயின் மிகாட் என்று அழைக்கப்படும்.'' (சனஹ்) பின்னர் 1971ல் வெளியிடப்பட்ட யூதக் கலைக் களஞ்சியத்தில், யாயின் என்ற சொல் திராட்சப் பழ இரசத்தின் பலநிலைகளிலும் அதன் பெயராக வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. (புளிக்க வைக்கப்படுவதற்கு முன்பாக உள்ள திராட்சரசம் உட்பட) பாபிலோனிய தால்முத் (யூதச் சட்டநூல்) ரபி ஹிய்யாவுக்கு "ஆலையிலிருந்து பெறப்படும் இரசம் (யாயின்) குறித்து புகழ்ந்து கூறியுள்ளது. (பாபா பாத்ரா 97அ) மேலும் ஹாலகோட்கெதலோட் என்பதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. "ஒருவன் ஒரு குலை திராட்சப் பழத்தைப் பிழிந்து இரசம் எடுக்கலாம். இந்தப் பழ இரசம் யாயின் என நசரேயர்களின் விதிப்படி கருதப்படும். (1923ல் யூதர்களின் வருடப்புத்தகத்தில் அமெரிக்காவில் லூயி கினிஸ் பெர்க் என்பவர் பக்கங்கள் 408 409ல் இவ்வாறு கூறியுள்ளார்.). ஓய்னோஸ் என்பது யாயின் என்னும் எபிரெயச் சொல்லுக்குச் சமமான புதிய ஏற்பாட்டுக் கிரேக்கச் சொல் இதைப் பற்றிய விளக்கம் அறிய புதிய ஏற்பாட்டு காலத்தில் உள்ள திராட்சை ரசத்தை பற்றி அறிய வேண்டும்.
2) 'திராட்சரசம்' என்று பெயர் கொள்ளும் இன்னொரு எபிரெய மொழிச் சொல் திரோஷ். இதன் பொருள் புது திராட்சரசம் அல்லது அறுவடையின் இரசம் பழைய ஏற்பாட்டிலும் 'திரோஷ்" என்னும் சொல் 38 தடவைகள் வருகின்றது. இது ஒருபோதும் புளிக்க வைக்கப்பட்ட இரசத்தைக் குறிப்பிடவில்லை. புளிக்க வைக்கப்படாத புதிய இரசத்தையே குறித்தது. இது திராட்சப் பழக் குலையில் இருக்கும் இரசத்துக்குச் சமமானது. (ஏசா 65:8) அல்லது புதிதாக அறுவடை செய்யப்பட்ட பழங்களிலிருந்து கிடைக்கும் இரசம் போலிருக்கும். (உபா 11:14; நீதி 3:10; யோவேல் 2:24) பழைய எற்பாட்டு, எபிரெய ஆங்கில அகராதியில் பிரௌன், டிரைவர், பிரிக்ஸ் என்போர் இவ்வாறு கூறியுள்ளார்கள். “திரோஷ்' என்பது இப்பொழுது பிழியப்பட்ட, புதிய திராட்சாசம் என்பதைக் குறிப்பிடுகிறது." 1901ல் உள்ள யூதர்களின் கலைக்களஞ்சியம், 'திரோஷ்' என்பது எல்லா வகையான இனிப்பான இரசங்களைக் குறிக்கும். இதில் புளிக்க வைக்கப்பட்ட போதை தரும் பானங்கள் உட்படாது. 'திரோஷ்' பானத்தில் "கொஞ்சம் நன்மை உள்ளது.'' (எசா 65:8) ஆனாலும், புளிக்க வைக்கப்பட்ட திராட்சரசம் பரிகாசம் செய்யும் (நீதி 20:1). அது குடிபோதையைத் தரும். (நீதி 23:31ன் பாரிக்கவும்).
3) மேற்கூறிய இரண்டு வார்த்தைகளும் தவிர, திராட்ரசத்தைக் குறிக்கும் இன்னொரு சொல்லும் எபிரெய மொழியில் உள்ளது. இது பழைய ஏற்பாட்டில் 23 தடவைகள் வருகிறது. ஷேகர்' என்னும் அந்த சொல் 'பீர்' என்று மொழிபெயர்க்கப்படும். (உம். 1 சாமு 1:15) அல்லது புளிக்கவைக்கப்பட்ட போதை தரும் பானம் (உம் எண் 6:3) எனப்படும். சில அறிஞர்கள் "ஷேகர்" என்பது ஒரு புளிப்புள்ள, போதை தரும் மதுபானம். இது ஒருவேளை பளஞ்சாறு, மாதுளம்பழம் ஆப்பிள்பழம் அல்லது பேரீச்சம்பழம் ஆகியவற்றிலிருந்து செய்யப்படும் எனக் கூறுகிறார்கள். 1901ல் வந்த யூதர்களின் கலைக்களஞ்சியம், யாயினிலிருந்து ஷேகரைத் தனியாக வேறுபடுத்திப் பார்க்கும்போது யாயின் ஒரு புளிக்க வைக்கப்பட்ட தண்ணீர் கலந்து குடிக்கப்படும் பானமாகும். ஷேகர் தண்ணீர் கலவாமல் குடிக்கப்படும், சில வேளைகளில் அது ஒரு இனிமையான, புளிக்க வைக்கப்படாத இரசத்தையும் குறிக்கும் என்று கூறுகிறது. டல்லாஸிலுள்ள இறையியல் கல்லூரியில் 1979ல் இராபர்ட் பி. பீச்சவுட் தனது இறையியல் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் பொருளாக "பழைய ஏற்பாட்டில் திராட்சரசத்தின் பயன்கள்" என்னும் தலைப்பை எடுத்திருந்தார். அவர் "ஷேகர் என்பது எபிரெய மொழியிலுள்ள ஷோகர் என்னும் வினைச்சொல்லுடன் தொடர்புள்ளது. இதன் பொருள் "தாராளமாகக் குடித்தல்" மேலும் "குடிக்கச் செய்தல்" என்னும் பொருளும் உண்டு என்கிறார், பல சந்தர்ப்பங்களில், யாயின், ஷேகர் இரண்டு சொற்களும் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்போது, அவை போதை தரும் மதுபானங்களையே குறிப்பதாகக் கொள்ளப்பட வேண்டும்.
புளிக்க வைக்கப்பட்ட திராட்ச ரசத்தைப் பற்றிய பழைய ஏற்பாட்டு கண்ணோட்டம். பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் புளிக்க வைக்கப்பட்ட போதை தரும் திராட்சரசம், யாயின் அல்லது ஷேகர் என்ற பெயரில் குடிப்பது கண்டனம் செய்யப்பட்டுள்ளது. உதாரணங்கள்
1) நோவாவின் கதையில் போதை தரும் மதுபானத்தைக் குடிப்பதால் வரும் தீய விளைவுகள் விளக்கப்பட்டுள்ளன. (அதி 9:20-27), அவன் ஒரு திராட்சத் தோட்டத்தை நாட்டினான்.
கனிகளை அறுவடை செய்தான். அதை போதை தரும் மதுவாக மாற்றினான். அதைக் குடித்தான். இவ்வாறு குடித்தது அவனுக்கு போதையைத் தந்தது. நினைவிழந்து வெட்கமின்றி, அவமானமாகப் படுத்திருந்தான், நிதானம் இழந்தான், கானான் சபிக்கப்பட்டதால் அக்குடும்பத்தின் மேல் சாபம் வந்து தங்கியது.
2) ஆபிரகாமின் காலத்தில் போதை தந்து மதியிழக்கச் செய்யும் திராட்சாசம், லோத்துவின் இருமகள்களும் தகாத உறவினால் கர்ப்பவதிகளாகக் காரணமாயிற்று
(அதி 19:31-38). சாராயம் கலந்துள்ள பானங்களின் தீமை செய்யும் தன்மைகளை நினைத்து தேவன், ஆசாரியர்கள் எங்கும், மதுபானமோ, திராட்சரசமோ குடிக்கக்கூடாது என்று தங்கள் ஊழிய காலத்தில் எவரும் குடித்திருக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார். இந்தக் கட்டளையை எவரும் மீறினால், மீறும் ஆசாரியனுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். (லேவி 10:9-11).
3) திராட்சாசம், மதுபானம் இவை குறித்த தமது சித்தத்தை தேவன் வெளிப்படுத்தும் வண்ணமாக நசரேய விரதம் இருக்கும் ஒருவரும் இவற்றைத் தொடக்கூடாது; அருந்தக் கூடாது என்று கட்டளையிட்டார். (அடுத்தப் பகுதியைப் பார்க்கவும்).
4) தேவனால் அருளப்பட்ட ஞானத்தைக் கொண்டு சாலொமோன் இவ்வாறு எழுதினான். “திராட்சரசம் பரியாசஞ் செய்யும்; மதுபானம் அமளி பண்ணும் அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
(நீதி 21:1ன் பார்க்கவும்).
போதை தரும் பானங்களைப் பருகுவது, பருகுபவர் தேவனுடைய நீதியின் தரத்தைப் பரியாசம் பண்ணும்படி அவர்களைத் தூண்டும். அதோடு பாவம், விபசாரம் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் சுயகட்டுப்பாட்டை இழக்கச் செய்யும்.
5) இறுதியாக, துன்பத்தையும், துக்கத்தையும் தவிர்க்கவும் தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படியவும், நீதிமான் மதுபானத்தை நோக்கிப் பார்க்கவோ, போதை தரக்கூடிய பானங்கள் எவற்றையும் குடிக்க ஆசைப்படவோ கூடாது என்று வேதாகமம் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.
(நீதி 23:29-35 வசனங் களை பார்க்கவும்).
நசரேயர்களும், திராட்சரமும். நசரேயர்கள் தாங்கள் சாதாரண மக்களிலிருந்து வேறு பிரிக்கப்பட்டவர்களாய்த் தங்களை ஆண்டவருக்கு முழுவதுமாய் அர்ப்பணித்து, வாழ்வது போல் சிறந்த ஒரு பரிசுத்த வாழ்க்கையை ஒவ்வொரு இஸ்ரவேலனும் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு நசரேயர் அறிவிக்க வேண்டு மென்று எதிர்பார்க்கப்பட்டார்கள் (எண் 6.2)
திராட்ச ரசத்தைப் பயன்படுத்துவது பற்றித் தெளிவான கட்டளையை அவர்களுக்கு தேவன் கொடுத்தார்.
1) திராட்சரசத்தையும், மதுபானங்களையும் நசரேயர்கள் விட்டு விலகியிருக்க வேண்டும்.
(எண் 6:3; உபா 14:2). உண்மையில் திராட்சப் பழத்திலிருந்து செய்யப்படும் பானங்களையோ, மற்றப் பொருட்களையோ அவர்கள் திரவமாகவோ, திடப் பொருளாகவோ உட்கொள்ளக் கூடாது. தவறுதலாக ஒரு நசரேயன் போதை தரும் மதுபானங்களைக் குடித்துவிடக் கூடாது என்னும் எண்ணத்தில், அதைத் தடுப்பதற்காகவே தேவன் இப்படியொரு கண்டிப்பான கட்டளையைக் கொடுத்திருக்க வேண்டும். (எண் 6:3,4) தன்னை தேவனுக்கு முழுவதுமாக அர்ப்பணித்த ஒருவன் எக்காரணத்தினாலும் மதுபானம் தரும் மயக்கத்துக்கு அல்லது போதை என்னும் அடிமைத்தனத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்று தேவன் விரும்பினார். (லேவி 10:8-11; நீதி 31:4-5) இவ்வாறு தேவனுடைய மக்களுக்கு முன்பாக, போதை தரும் மதுபானங்கள் குறித்து தேவன் வைத்துள்ள உயர்நிலை வாழ்க்கைத் திட்டம், அவர்கள் மதுபானங்களுக்கு முற்றிலும் விலகியிருக்க வேண்டும் என்பதே. (எண் 6:3,4).
2) மயக்கம் தரும் சாராயத்தைக் குடிப்பது, பல்வேறு பாவங்களைச் செய்ய அவனைத் தூண்டுகிறது. ஒழுக்கக் கேடான மாம்ச இச்சைக்குரிய செயல்களிலும், வன்முறை போன்ற குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடுவான். நசரேயர்கள் திராட்சச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் எதையும் புசிக்கக் கூடாது. அவர்கள் பாவத்தை விட்டு விலக வேண்டும். பாவத்தைச் செய்யத் தூண்டக் கூடியவைகளையும், பாவத்தைச் செய்யும ஆசையைத் தோற்று விக்கக் கூடியவைகளையும், நசரேயர் விட்டு விலக வேண்டும் என்பதை இதன் மூலன் கற்றுக் கொள்ள வேண்டும்.
3) ஆமோசின் காலத்தில், நசரேயர்கள் திராட்சரசத்தையோ, மதுபானங்களையோர குடிக்கக்கூடாது என்று தேவன் கொடுத்த கட்டளையை இஸ்ரவேலர் ஏளனம் பண்ணிப் புறக்கணித்துத் தள்ளிவிட்டார்கள். இந்தத் தீர்க்கதரிசி "தேவனற்றவர்கள் நசரேயர்களை மதுபானம் குடிக்கச் செய்கிறார்கள்” என்று கூறினான். (ஆமோஸ் 2:12). ஏசாயா தீர்க்கதரிசியும், "ஆசாரியனும், தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதி மயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம் போய், நியாயத் தீர்க்கிறதில் இடறுகிறார்கள். போஜன பீடங்களெல்லாம் வாந்தியினாலும், அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது. சுத்தமான இடமில்லை என்று கூறுகிறான். (ஏசா 28:7.8) இது நடைபெறக் காரணம் அவர்கள் தேவன் விதித்த உன்னதமான கட்டளையை மீறியதேயாகும். (நீதி 31:4,5ஐ பார்க்கவும்).
4) நசரேய விரதத்தின் உயிர்நாடி- அதாவது ஒரு கிறிஸ்தவ விசுவாசியைக் குறித்த தேவனுடைய உன்னததிட்டம்.--தேவனுக்கு முற்றிலும் அர்ப்பணித்தல், உயர் நெறிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை ஆகும். (ரோம 121; 2 கொரி 6:17, 7:1), ஒருவனைப் பாவத்துக்கும் தீமையான காரியங் கருக்கும் இழுத்துச் செல்லும் எதையும் விட்டு விலகுதல், மதுபானம், போதைப் பொருட்கள் இவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைக்கும், ஒரு சகோதரனையோ, ஒரு சகோதரியையோ, பாவம் செய்து தடுமாறச் செய்யும் சூழ்நிலைகளுக்கும் முற்றிலும் விலகியிருத்தல் ஆகியவை பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நசரேயர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டளையைப் போல, இன்றைய புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கும் அவை அவசியமாகும். (1 தெச 5:6; தீத்து 2.2 ஐ பார்க்கவும்)
தொடர்ந்து நீங்களும் வேதத்தை வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நம்முடைய உயர்ந்த முத்துக்கள் பதிவுகளை பாலோவ் செய்யுங்கள்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
தொடர்புக்கு
9841711591.
Comments