அந்திகிறிஸ்துவின் காலம்

அந்தி கிறிஸ்துவின் காலம்:

2 தெச 2:3,4 "எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ. ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத் தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்."

வேதாகமத்தின்படி அந்திக்கிறிஸ்து வருகிறான். 
(1 யோவா 2:16) கிறிஸ்து இவ்வுலகில் தமது ஆட்சியை நிறுவுவதற்குமுன் பரிசுத்தவான்களுக்கும். கிறிஸ்துவுக்கும் எதிராகச் சாத்தான் நடத்தும் இறுதித் தாக்குதலை நடத்துபவன் அவனே. பவுலின் வார்த்தைகளின்படி அவன் "கேட்டின் மகனாகிய பாவ மனுஷன்'""விசுவாசத் துரோகி' (2 தெச 2:3) இவனைக் குறித்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வேறுவார்த்தைகள், "சமுத்திரத்திலிருந்து எழும்பி வரும் மிருகம்" (வெளி 13.1-10) “சிவப்பு நிறமுள்ள மிருகம்" (வெரி 17:3) "பாதாளத்திலிருந்து எறிவந்த மிருகம்" (வெளி 17:8,16, 19:19,20; 20:10).

அந்திக்கிறிஸ்துவின் வருகைக்குரிய அடையாளங்கள்: 'எடுத்துக் கொள்ளப்படுதல்' போலல்லாமல் அந்திக் கிறிஸ்துவின் வருகை முன் எச்சரிக்கை இல்லாமல் நடைபெறாது. அவனுடைய வருகைக்கும், தோற்றத்துக்கும் முன்னர் நடைபெறவிருக்கும் அநேக அடையாளங்கள் இப்போது நடைபெறுகின்றன. அவன் பூமியில் தோன்றுவதற்கு முன் மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறும். 

1) ஏற்கெனவே உலகத்தில் பெருகியிருக்கும் 'அக்கிரமத்தின் இரகசியம் இன்னும் அதிகமாகக் கிரியை செய்யும். (2 தெச 2:7) 

2) கலகமும், புரட்சியும் உண்டாகும். (2:3) 

3) தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்பட வேண்டும். 
(2 தெச 2:7).

1) 'அக்கிரமத்தின் இரகசியம்' என்பது உலகம் முழுவதிலும் காணப்படும் திரைமறைவான தீமையான காரியங்கள். அந்தகார சாத்தானின் சக்திகளின் கிரியைகள் நிறைந்து காணப்படும். 
(2 தெச 2:7) அது உச்சக்கட்டத்தை அடையும். அப்போது வேதாகமம் புனிதமாகக் கருதும் கட்டளைகள், கொள்கைகள் இவையனைத்தும் உதாசினப்படுத்தப்பட்டு, ஏளனம் செய்யப்படும். சட்ட திட்டங்களுக்கடங்காத ஒழுங்கீனங்களும், அக்கிரமங்களும் எங்கும் பரவியிருப்பதால், அனேகருடைய அன்பு தணிந்துபோம். (மத் 24:10-12; லூக் 18:8). எனினும் விசுவாசமுள்ள மீதியான விசுவாசிகள் அப்போஸ்தல விசுவாசத்துக்கு உண்மை உள்ளவர்களாய் இருப்பார்கள். புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ள (மத் 24:13; 25:10; லூக் 18:7; வெளி 2:7 இன் குறிப்பைப் பார்க்கவும்). 

உண்மைகளின்படி நடப்பார்கள். இப்படிப்பட்ட விசுவாசிகள் மூலம் திருச்சபையானது எதிர்த்துப் போராடும்
ஒரு சபையாகக் காணப் படும். அசுத்த ஆவிகளுக்கெதிராக ஆவியின் பட்டயத்தைச் சுழற்றிக் கொண்டிருப்பார்கள். (எபே 6:11). 

2) கிரேக்க மொழியில் "அப்போஸ்டோயா" என்று அழைக்கப்படும் “விட்டு விலகுதல்", "விழுந்து போகுதல்", "கை விட்டுப் போகுதல்" என்னும் பொருள்களை உடையது. 
கடைசி நாட்களில் விசுவாசத்தை அறிக்கையிடும் நிலையான திருச்சபைகளிலிருந்தும் கூட அநேகர் வேதாகம உண்மைகளைக் கைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள்.

அ) இயேசுவும், பவலும் தற்போதுள்ள இக்காலம் முடியும்போது இருக்கும் காணக்கூடிய திருச்சபையின் ஒழுக்க ரீதியான ஆவிக்குரிய, கொள்கைக்குரிய வேதனைப்படும்படியான நிலைமைகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். (மத் 24:5,10-13,24, 1தீமோ 4:1 2 தீமோ 4:3,4) கடைசி நாட்களில் தேவனற்ற நிலை திருச்சபைகளில் காணப்படும் என்று பவுல் கூறுகிறாள்.

ஆ) திருச்சபைகளில் காணப்படும் கலகமும், குழுப்பமும் இரண்டு கண்ணோட்டங்களைக் கொண்டவை. 

1) அப்போஸ்தலர்கள், கிறிஸ்து இவர்களது போதனைகள், கொள்கைகள் ஆகியவற்றின் சில பகுதிகள் அல்லது அனைத்தையும் புறக்கணித்து விட்டு விலகிச்செல்லும் இறையியல் விசுவாச மறுதலிப்பு காணப்படும். (1 தீமோ 4:13 2 தீமோ 4:3), கள்ளப்போதகர்களும் தலைவர்களும் கிறிஸ்து போதித்த, மனந்திரும்புதல், ஒழுக்கக்கேடான பாவங்களை விட்டுவிலகுதல், தேவனுக்கும், அவர் எதிர்பார்க்கும் தரங்களுக்கும் உண்மையாயிருத்தல் போன்றவற்றைக் கைவிட்டுவிட்டு "இரட்சிப்பையும்", மலிவான கிருபையையும் கொடுக்க முன் வருவார்கள், 
(2 பேது 2:1-3, 12-19). மனிதர்களின் ஆசைகள், விருப்பங்கள், சுயவிருப்பங்களை நிறைவேற்றுதல் இவற்றை மையமாகக் கொண்ட தவறான சுவிசேஷ போதனைகள் எங்கும் பிரபலமாகும். 
(2 தீமோ 4:3,4.) 

2) ஒழுக்க நிலையில் மறுதலிப்பு என்பது கிறிஸ்துவோடுள்ள இரட்சிப்பின் உறவைத் துண்டித்துவிட்டு மீண்டும் பாவத்துக்கும், அக்கிரமத்துக்கும், ஒழுக்கக்கேடான பாலுறவு காரியங்களுக்கும் திரும்பி வருதலும் காணப்படும். இத்தகைய மாயக்காரர்கள் புதிய ஏற்பாட்டு போதனைகளையும் சரியான கொள்கைகளையும் பிரகடனப்படுத்துவார்கள் எனினும் தேவனுடைய ஒழுக்கநெறிகளை கைவிட்டு விடுவார்கள். (ஏசா 29:13; மத் 23:25-28;) இன்றைய திருச்சபைகளில் பல, பணத்துக்காகவும், எண்ணிக்கைக்காகவும், புகழுக்காகவும், வெற்றிக்காகவும் எதையும் சகித்துக் கொள்ளத் துணிந்துவிடும். (1தீமோ 4:1இன் குறிப்பு). 
சிலுவை கூறும் நற்செய்தியோடுகூட துன்பங்களை அனுபவிக்க அழைப்பு (பிலி 1:29) பாவத்தை அறவே விட்டுவிட அழைப்பு (ரோம 8:13), தேவனுடைய இராஜ்யத்துக்காக எதையும் தியாகம் செய்ய சுயத்தை ஒறுத்து வாழ அழைப்பு ஆகியவற்றைக் காண்பது அரிதாகி விடும். (மத் 24:12, 2 தீமோ 3:1-5; 4:3).

இ) திருச்சபையின் வாலாறும், கடைசி நாட்களில் காணப்படும் என்று முன்னுரைக்கப்பட்ட விசுவாச மறுதலிப்பும், எல்லா விசுவாசிகளுக்கும் ஒரு எச்சரிக்கையைத் தருகிறது. எல்லாக் கால கட்டங்களையும் தாண்டி, தேவனுடைய இராஜ்யம் இறுதிவரை தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் என்று நம்ப வேண்டாம் என்பது அந்த எச்சரிக்கை. திருச்சபையின் வாலாற்றில் ஒரு காலகட்டத்தில் தேவனுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் எதிராக ஒரு புரட்சி கிளம்பும். அது ஆச்சரியமான விகிதத்தில் உச்சகட்டத்தை அடையும். காத்தருடைய நாள் வரும்பொது, சத்தியத்தைப் புறக்கணிக்கும் யாவர் மேலும் தேவனுடைய கோபாக்கினை வரும். (1 தெச 5:2-9).

ஈ) தேவனுடைய இராஜ்யம், அவருடைய நீதி ஆகியவற்றின் வெற்றியானது, 
இந்த உலகத்தில் விசுவாசத்தை அறிக்கையிடும் திருச்சபையின் படிப்படியான வெற்றியைச் சார்ந்திராமல், கடைசி நாட்களில் தேவன் இந்த உலகத்துக்கு நீதியான நியாயத்தீர்ப்பை அருளும்படி இடைபடப் போகிறதைச் சார்ந்திருக்கிறது. (வெளி 19-22 அதிகாரங்கள்; 2 தெச 27,8; 1 தீமோ 4:1இன் குறிப்பு: 2 பேது 3:10-13; யூதாவின் புத்தகம் பார்க்கவும்.).

3) "கேட்டின் மகன்" வெளிப்படுத்தப்பட்டு, கர்த்தருடைய நாள் ஆரம்பிப்பதற்குமுன் ஒரு முடிவான நிகழ்ச்சி நடைபெற வேண்டும். (2 தெச 22.3) அதாவது "தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படவேண்டும்." (2:7) "கேட்டின் மகனாகிய பாவமனுஷனின்" 'அக்கிரமத்தின் இரகசியத்தையும், அந்த கேட்டின் மகனையும் தடை செய்கிறவன் நீக்கப்பட வேண்டும். இவ்வாறு தடை செய்கிறவன் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டால் கர்த்தருடைய நாள் . (2:6,7).

அ) கேட்டின் மகனைத் தடை செய்கிறது பரிசுத்த ஆவி என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். அவருக்கு மட்டுமே சாத்தான், கேட்டின்
மகன், தீமை இவற்றை எதிர்ப்பதற்குரிய வல்லமை உண்டு. (2 தெச 2:9) 'தடை செய்கிறவன்' என்று ஆண்பால் விகுதியுடனும் (2:7) "அவனைத் தடை செய்கிறது" என்று அஃறினை விகுதியுடனும் (2:6) குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலவே பரிசுத்த ஆவியும் கிரேக்க மொழியில் இவ்விரு விகுதிகளாலும் குறிப்பிடப்படுவதுண்டு. (ஆதி6:3; யோவா 16:8;ரோம 8:13;கலா 5:17) பாவத்தைக் கட்டுப்படுத்துவதில் பரிசுத்த ஆவியின் பணி).

ஆ) உபத்திர காலத்தின் கடைசி ஏழு வருடங்களின் ஆரம்பத்தில் பரிசுத்த ஆவியானவர் "எடுத்து கொள்ளப்படுவார்” அவர் உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுவார்" என்பதல்ல. அவர் நீதிக் கேட்டையும், அந்திக் கிறிஸ்துவின் கிரியைகளையும் தடைசெய்ய மாட்டார் என்பதே அதன் பொருள். பாவத்துக்கெதிரான கட்டுப்பாடுகள் யாவும் நீக்கப்படும். சாத்தானால் தூண்டப்பட்ட கலகம், குழப்பம் இவை ஆரம்பமாகும் என்ற போதிலும் பரிசுத்த ஆவியானவர் இந்த உபத்திரவகாலத்திலும் பூமியில் இருந்து, மக்களுக்குப் பாவ கேடுகளை உணர்த்தி, மனந்திரும்பச் செய்து, சிறிஸ்துவிடம் சேர்த்து, வல்லமை கொடுத்து வழி நடத்துவார். (வெளி 7:9,14; 11:1-11; 14:6,7).

இ) பரிசுத்த ஆவியானவர் தடை செய்வதிலிருந்து விலகிவிடுவார் என்றதும், கேட்டின் மகன் கிரியையை ஆரம்பித்து விடுகிறான். 
(2 தெச 2:3,4) சத்தியத்தை நேசிக்க மறுக்கும் யாவர் மேலும் தேவன் ஆக்கினையை அனுப்புவார். (2:11இன் குறிப்பு) அவர்கள் கேட்டின் மகனின் விருப்பங்களுக்கிசைய நடப்பார்கள். மனித சமுதாயம் இதற்குமுன் எப்போதுமே கண்டிராத பாவத்தன்மையும், அக்கிரமமும், துஷ்டத்தளமும் எங்கும் காணப்படும்.

ஈ)பரிசுத்த ஆவியின் பாவத்தைக் கண்டித்துணர்த்தும் ஊழியம் பெரும்பாலும் திருச்சபையின் மூலமாகவே நடக்கிறது. அதுவே பரிசுத்த ஆவியின் தேவாலயம். 
(1 கொரி 3:16; 6:19), எனவே அநேக விளக்கம் கூறும் அறிஞர்கள் பரிசுத்த ஆவியானவர் எடுத்துக்கொள்ளப்படுவதும் விசுவாசிகள் நடு வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிகழ்ச்சியும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று நம்புகிறார்கள். (1தெச 4:17) அதாவது கிறிஸ்து தமது திருச்சபை மக்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளவும், வரப்போகும் கோபாக்கினையிலிருந்து அவர்களை விடுவிக்கவும், 
(1 தெச 1:10) வருவது "கர்த்தருடைய நாள்” வருவதற்கு முன்னதாகவும் கேட்டின் மகன் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவும் இருக்கும்.

உ) "அவனைத் தடைசெய்கிறது" 2 தெச 2:6 என்பது பரிசுத்த ஆவியையும் (அஃறிணை); "தடைசெய்கிறவன்" என்று 2:7இல் குறிப்படப்பட்டது. (ஆண்பால்), அவரது தடைசெய்யும் ஊழியம் என்பது கிறிஸ்துவிடம் வந்த விசுவாசிகள் ஆண்டவரோடு இருப்பதற்காக நடுவானத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறிக்கிறது (1 தெச 4:17) என்றும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

அந்திக் கிறிஸ்துவின் கிரியைகள்: கர்த்தருடைய நாள் ஆரம்பிக்கும்போது கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்படுத்தப்படுவான். காலம் முடிவதற்கு ஏழு வருஷங்களுக்குமுன் அவன் இஸ்ரவேலரோடு ஒரு உடன்படிக்கை செய்வான். (தானி 9:7 பார்க்கவும்.)

1) அவனுடைய உண்மையான அடையாளங்கள் 34 வருடங்களுக்குப் பின் அவன் இஸ்ரவேலருடன் செய்த உடன்படிக்கையை அவனே மீறும்போது வெளிப்படும். அப்பொழுது அவன் உலகம் முழுதுக்கும் அதிபதியாயிருப்பான். அவன் தன்னைத் தேவன் என்று அறிவிப்பான். எருசலேமில் உள்ள தேவாலயத்தை அழித்து அழிவாக்கிப் பரிசுத்தக் குலைச்சலாக்கி விடுவான். அவன் ஆண்டவருக்கு ஆராதனை செய்வதைத் தடைசெய்து விடுவாள். 
(2 தெச 2:4,8,9; பாலஸ்தீனா தேசம் முழுவதையும அழித்து வெட்டாந்தரையாக்கிவிடுவான். (தானி 9:27இன் 11:36-45இன் குறிப்பு).

2) அந்திக் கிறிஸ்து தன்னைத் 'தேவன்' என்று அறிவிப்பான். கிறிஸ்துவுக்கு உண்மையாயிருந்து அவரை வழிபடுகிறவர்களைத் துன்புறுத்துவான். (வெளி 11:6,7:13:7,15-18; தானி 7:8,24,25 இன் குறிப்புகள்). அவன் மக்களுக்கு அறிவிப்புகளைத் தெரிவிக்கும் மையமாகிய ஒரு பெரிய ஆலயத்தையே வழிபாட்டுத் தலமாக்கி, அங்கே தன்னை அனைவரும் தொழுது கொள்ள வேண்டும் என்ற கட்டளையிடுவான். (தானி 7:8,25; 8:4; 1t31,36) சிருஷ்டிப்பின் காலம் முதலே மனிதர்களுக்கு இந்த தெய்வீக ஸ்தானத்தின் மீது ஆசை இருந்தது. 
(2 தெச 2:8இன் குறிப்பு, வெளி 13:8,12,)

3) கேட்டின் மகன் சாத்தானின் வல்லமையைக் கொண்டு, அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்து காட்டுவான். இவற்றை அவன் தவறானவற்றைப் பரப்புவதற்காகப் பயன்படுத்துவான். 
(2 தெச 2:9) 'போலியான அற்புதங்கள்' என்பவை அசாதாரண அற்புதக் கிரியைகள். இவை பொய்யை மக்கள் ஏற்றுக் கொள்வதற்காக, அவர்களை ஏமாற்றும்படி செய்து காட்டப்படும் வஞ்சகக் கிரியைகளாகும். 

1) இத்தகைய அற்புதச் செயல்களைச் தொலைக்காட்சி மூலம் உலககெங்கிலும் உள்ளவர்கள் பார்ப்பார்கள். இதைப் பார்க்கும் இலட்சக்கணக்கான மக்கள் இதனால் கவரப்பட்டு, ஏமாற்றப்பட்டு, அருள் வரம் பெற்றவன் போல் தோற்றமளிக்கும் இந்தத் தலைவனைப் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குக் கர்த்தருடைய வசனத்தின் மீது அன்போ, உறுதியான அர்ப்பணிப்போ பற்றுதலோ இல்லை. (2:9-12) 

2) இயேசு (மத் 24:24) பவுல் (2 தெச 2:9) இவர்களுடைய வார்த்தைகள் விசுவாசிகளுக்கு அவர்கள் கண்களால் காணும் அற்புத அடையாளங்கள் எல்லாம் உண்மையான மெய்த் தேவனிடமிருந்து வருகின்றன என்று நம்பியிடக் கூடாது என்று எச்சரிக்க வேண்டும். இத்தகைய ஆவியின் வெளிப்பாடுகளும், 
(1 கொரி 12:7-10) அனுபவங்களும் அவை தேவனிடமிருந்து வருகின்றனவா, அல்லது ஆவிகளின் செயலா என்பதைச் செய்து காட்டுகிற வனுக்குக் கிறிஸ்துவின் போலும், வேத வசனங்கள் மீதும் பற்றுதலும் அர்ப்பணிப்பும் உள்ளதா என்று சோதித்துப்பார்த்து உண்மையை அறிய வேண்டும்.

அந்திக் கிறிஸ்து தோற்கடிக்கப்படுதல்: மகா உபத்திரவ காலத்தின் முடிவில், சாத்தான் பல தேசங்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு அம்மெகே தோனில் யுத்தம் செய்ய வருவான். அந்திக் கிறிஸ்துவின் ஆலோசனைப்படி சாத்தான் தேவன் மீதும் தேவனுடைய பிள்ளைகள் மீதும் போர் தொடுப்பான். இந்த யுத்தத்தில் உலகம் முழுவதும் பங்கேற்கும். 
(தானி 11:45குறிப்பு: வெளி 16:16இன் குறிப்பு) அந்த நேரம் வரும்போது, கிறிஸ்து திரும்ப வருவார். தெய்வத்தன்மையுடன் குறுக்கிட்டு, அந்திக் கிறிஸ்துவை அழித்துவிடுவார். அந்திக் கிறிஸ்துவின் படைகளும், நற்செய்திக்குக் கீழ்ப்படியாத அனைத்து மக்களும் அழிக்கப்படுவார்கள். (வெளி19:15-21இன் குறிப்புகள்.) அதன்பின் கிறிஸ்து சாத்தானைக் கட்டிவிட்டுத் தம்முடைய இராஜ்யத்தை இந்தப் பூமியின்மேல் ஸ்தாபிப்பார். (வெளி20:1-6).
ஆமென். 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 
சிலுவை ராஜா
தொடர்புக்கு 
9841711591

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை